search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vote collection"

    • இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை பெறவும், தே.மு.க.தி.வினரின் ஓட்டுக்களை பெறவும், பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் முயற்சித்து வருகின்றன.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    அதேபோல பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.

    அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

    அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

    • 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள்.
    • நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை.

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், நேற்று பொரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கல்பாடி, சிறுவாச்சூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தலில் உங்களின் பொண்ணான வாக்கை தாமரை சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

    கல்பாடி என்பது நெகிழ்ச்சி தரக்கூடிய கிராமமாக உள்ளது. அதேபோல, இங்கு கூடியிருக்கும் மக்களின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்க்கின்றபோது நம்பிக்கை பிறக்கிறது.

    நீங்கள் வேறு யாருக்கு வாக்குத்தர முடியும் என்று யோசித்து பாருங்கள். 2019ம் தேர்தலின்போது, பல ஊருக்கு சென்றிருக்கிறேன். உங்களை சந்தித்திருக்கிறேன். வாக்கு கேட்டிருக்கிறேன்.

    அப்போது, மக்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? 6,83,000 வாக்குகள். 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள். டெல்லிக்கு சென்று எங்கள் ஊரின் நிலைமையை சொல்லி நிதி கொண்டு வர அனுப்புனீர்கள்.

    நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை. மீண்டும் வந்திருக்கிறேன் என்றால் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.

    அனைவரின் வீட்டிலும் புத்தகம் வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தில், எத்தனை முறை, எதற்காக எந்த அமைச்சரை சந்தித்து, பிரதமர் மோடியை சந்தித்து முதல் கொண்டு இதில் இடம்பெற்றிருக்கிறது.

    அதை படித்தால், பாராளுமன்ற உறுப்பினர் சரியாகதான் செய்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

    அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் இந்த நகரங்களை இணைக்கும் ரெயில் பாதை தேவை என 50 ஆண்டு காலமாக முயற்சி செய்துக் கொண்டீர்கள்.

    அதற்கான கோப்புகளை கொண்டு பிரதமரிடம் சென்றேன். உடனே ரெயில்வே அமைச்சரை அழைத்து விசாரித்தார். அதற்கு 1000 கோடி ஆகும் எனவும் அதில் முதலீடு செய்தால் லாபம் வராது என ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

    மோடியின் உத்தரவை அடுத்து, 2024 முழு பட்ஜெட்டில் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட இருக்கிறார்கள். இது எனக்கும் மன நிறைவு.

    இதுபோன்று, மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற 6-ந் தேதி வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
    • கிராமங்களுக்கு நேரடியாக சென்று நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுரண்டை:

    மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் அவரது தலைமையில் மூன்று பனைமரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    என்.ஆர்.தனபாலன் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தென்காசி மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் சுரண்டை எஸ்.வி.கணேசன் தலைமையில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேவிப்பட்டணம், தெற்கு சத்திரம், ராயகிரி, டி.ராமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் அகரகட்டு லூர்து நாடார், முன்னாள் நாடார் மகாஜன சங்க இயக்குனர்கள் ஆர்.வி.ராமர், எஸ்.முருகன், வேட்பாளர்கள் கே.வி.கண்ணன், சேர்மராஜ் மற்றும் நாடார் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். #DMK #LokSabhaElections2019

    சென்னை:

    வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்து உங்களுக்கே எங்களின் ஆதரவு என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

    கொளத்தூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று வீதி வீதியாக வேட்பாளர் கலாநிதி பிரசாரம் செய்தார். வாக்காளர்களிடம் பிரசாரம் செய்கையில் இந்த தொகுதி கழக தலைவர் ஸ்டாலினின் தொகுதி. இந்த தொகுதியில் தளபதி, மக்களின் தேவைகளை தேடி வந்து செய்து வருகிறார். தமிழகத்தில் தளபதி தலைமையில் ஆட்சி மலர வேண்டும். மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும். எனவே அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #LokSabhaElections2019

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். #DMK #LokSabhaElections2019

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் ஆயிரம்விளக்கு தொகுதியில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே பிரசாரத்தை தொடங்கி கோபாலபுரம் கலைஞர் இல்லம் வரை வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    ஆயிரம்விளக்கு தொகுதியிலும் தி.மு.க. எம்.எல்ஏ.தான் உள்ளார். என்னையும் எம்.பி.யாக தேர்வு செய்தால் இந்த தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேலும் அதிகம் கிடைக்கும். இது தொகுதி மக்களுக்கு கிடைக்கும் இரட்டிப்பு யோகமாகும்.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பா.ஜனதா தொடர்ந்து செயல்படுகிறது.

    எனவே மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்துக்கு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., கு.க. செல்வம் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் திருவல்லிக்கேணி வி.பி.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நடந்து சென்று வாக்கு கேட்டனர். பிரசாரத்தின் போது தயாநிதி மாறனுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019 #DMK

    வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #DMK

    சென்னை:

    வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

    திரு.வி.க. பஸ் நிலையத்தில் திறந்த வேனில் பிரசாரம் செய்த பிறகு மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    நடைபெற இருக்கும் தேர்தல் இந்தியாவின்தலையெழுத்தை மாற்ற போகிற தேர்தல். எனவே உங்கள் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துங்கள். மோடி இந்தியாவில் இருப்பதே இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இந்தியாவை சுற்றி சுற்றி வருகிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களை பற்றி சிந்திப்பதில்லை. எனவே மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து இந்த தொகுதியில் போட்டியிடும் படித்தவரும் மருத்துவருமான டாக்டர் கலாநிதி வீராசாமியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMK

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு அவரது மகன் அவருக்கு வாக்கு சேகரித்தார். #mansooralikhan #naamtamilarkatchi

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர்கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்களோடு மக்களாக பழகி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

    திண்டுக்கல் அருகில் உள்ள நத்தம் சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமும், செந்துறை, சந்தைபேட்டை, மார்க்கெட்டுகளில் உள்ள வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார்.

    அவர் பொதுமக்களிடம் இயற்கைக்கு மாறான திட்டங்களை கொண்டுவரும் மத்திய மாநில அரசுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம். மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து நடந்தே சென்று பொதுமக்களிடம் ஜாலியாக பேசியபடி வாக்கு சேகரித்தார். என்னுடன் செல்பி எடுக்க நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் ஓட்டு மட்டும் எனக்கு போடுங்கள் என்றார். தொடர்ந்து அவரால் பேச முடியாததால் மன்சூர்அலிகானின் மகன் காஜாமீரான் தனது தந்தைக்காக வாக்கு கேட்டு பேசினார். #mansooralikhan #naamtamilarkatchi

    ×