என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VSR School"
- குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
- நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.
குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியவத்துவம் குறித்து சிறு நாடகம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
- குண்டு எறிதல் போட்டியில் மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தை பிடித்தார்.
திசையன்விளை:
தோவாளை எல்.எச்.எல். சி.பி.எஸ்.இ. பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுவினரால் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இடையே விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 19, 17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் வட்டு எறிதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி சொர்ணா, 11-ம் வகுப்பு மாணவி தியானா ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவி ஷேரன், 9-ம் வகுப்பு மாணவர் ஜாய்வின் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.
உயரம் தாண்டுதல் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின், 8-ம் வகுப்பு மாணவர் பிரிஜித் ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவர் அந்தோணி ஆகாஷ் 2-ம் இடத்தையும் வென்றனர்.
குண்டு எறிதல் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தையும், 11-ம் வகுப்பு மாணவி தியானா, 8-ம் வகுப்பு மாணவி ஆஷிகா பாரிஸ் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.
நீளம் தாண்டுதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி அக்ஷயா, 12-ம் வகுப்பு மாணவர் மைக்கேல் கிராஷிங்டன் ஆகியோர் 2-ம் இடத்தையும், 11-ம் வகுப்பு மாணவர் ஹரிபிரசாத் 3-ம் இடத்தையும் வென்றனர்.
200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் ஜெஸ்வின் 2-ம் இடத்தையும், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
- விஜயதசமியை முன்னிட்டு வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
- வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாணவர் சேர்க்கையின் போது குழந்தைகளை நெல்மணி யில் 'அ'கரம் எழுத வைத்து குழந்தைகள் தங்கள் கற்றல் திறனில் முதல் படியை வி.எஸ்.ஆர். பள்ளியில் எடுத்து வைத்தனர். இதனை புகைப்படம் எடுத்து பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், அதிக மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு 2023-24 - ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் பிரி.கே.ஜி.யில் மற்றொரு பிரிவு தொடங்கப் பட்டுள்ளது என்றும் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
சரஸ்வதி பூஜை விஜயதசமி விழா
வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் முன்னிலை வகித்தார். இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளியின் முதல்வர் அன்னத்தங்கம் மற்றும் ஆசிரிய -ஆசிரியை கள் கலந்து கொண்டனர்.
சரஸ்வதி பூஜை அன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட மாண வர்களின் விரலை பிடித்து நெல்மணியில் எழுத ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர்.
மாணவர்கள் ஆர்வமு டன் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுக்கப்பட்டது. இன்றும் சிறப்பு மாணவர் சேர்க்கை பிரி.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை நடை பெறுகிறது.
- பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார்.
- மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பங்கேற்று பூஜையை வழிநடத்தினார்.
மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர். விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். விநாயகர் சிலையின் முன்பு ஆசிரியர்கள் மலர்களால் கோலமிட்டனர். அருகம்புல், எருக்கலையால் தொடுத்த மாலைகளை விநாயகருக்கு அணிவித்தனர். விநாய கருக்கு பூஜை செய்து வழிபட்ட பின்னர் அனை வருக்கும் பொரி, கொழுக்கட்டை வழங்கினர். விழா வில் ஆசிரியர்கள், அலு வலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர்.
திசையன்விளை, ஜூலை. 8-
2022-23-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சர்வதேச ஒலிம்பியாட்
இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர். இத்தேர்வை 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் மாணவி லாவண்யா பாஸ்கர் தமிழ்நாடு பட்டியலில் 16-வது இடத்தையும், மாணவன் விஜய்குமார்ராய் 38-வது இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் மாணவி ஜெர்லின் 85-வது இடத்தை யும், மாணவி டீனா பாஸ்கர் 119-வது இடத்தையும், மாணவன் சந்தோஷ் சார்லஸ் 138-வது இடத்தை யும், மாணவி தியானா 161-வது இடத்தை யும், ஜெரோம் பொன்னையா 177-வது இடத்தையும், மாணவி ரக்சஷனா 258-வது இடத்தையும், மாணவன் நோவா 324-வது இடத்தையும், மாணவன் ஹா ராஜா 333-வது இடத்தையும், விபிஷ்னு ராஜகோபால் 339-வது இடத்தையும் பெற்று தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர்களுக்கு பாராட்டு
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சர்வதேச ஒலிம்பியாட் தேர்வானையம் சார்பில் சான்றிதழ் வழங்கப் பட்டது.
- ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
- மன்றத்தின் நோக்கம் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களை வகுப்பு வாரியாக 6 குழுக்களாக பிரித்து இலக்கிய மன்றம், இயற்கை மன்றம், சேவை மன்றம், கணித மன்றம், கலை மற்றும் கைவினை மன்றம், நுண்கலைகள் மன்றம் என பிரித்தனர். ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்க ப்பட்டனர். ஒவ்வொரு மன்றத்திலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவ்வுறுப்பினர்களுக்கு ஒரு தலைவர் மற்றும் துணைத்தலைவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தலைவர்- துணைத் தலைவர் எனத் தங்களை அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தங்கள் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்திறன் குறித்து ஆடல் -பாடல் நாடகத்துடன் கூடிய செய்முறை விளக்கம் அளித்தனர். முடிவில் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவர்களுக்கு இம்மன்றங்களின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்து மாதந்தோறும் இம்மன்றத்தின் மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகப் போட்டிகள் பல நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கூறினார்.
- சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.
- கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.
இதில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர். பாலர் கல்வி, தொடக்க கல்வி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி என்ற அடிப்படையில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.
மேலும் வருகிற கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எந்தெந்த நூல்களை பயன்படுத்தலாம் என்றும், அவர்களின் கையெழுத்து சீர்பெற கையெழுத்து பயிற்சி ஏடுகளை தொடக்கக் கல்வி நிலையிலேயே அறிமுகப்படுத்தி இந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிப்பது குறித்தும் கலந்தாய்வு செய்தனர். இக்கூட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பள்ளியின் முதல்வரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார்.
- மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
திசையன்விளை:
சி.பி.எஸ்.இ. ெபாதுத் தேர்வில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார். மேலும் பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
- மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., மாணவர்களுக்கு வடிவங்கள், நிறங்கள், எண்கள், தமிழ், ஆங்கில எழுத்து அட்டைகள், பழங்கள், காய்கறிகளின் மாதிரிகள் போன்றவற்றை கொண்டு அறிவுத்திறன் சோதித்து அறியப்பட்டது.
யு.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிய வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடப்பட்டது. தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்த பின்னர் மனநிறைவுடன் சென்றனர்.
- பட்டமளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் திருப்பதி, பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.
யு.கே.ஜி. மாணவர்களை கே.ஜி. வகுப்பிலிருந்து அவர்களை அடுத்த கட்ட (முதலாம்) வகுப்பிற்கு வழி அனுப்பும் விதமாக எல்.கே.ஜி. மற்றும் பிரி-கே.ஜி. மாணவர்கள் நடனங்கள் மற்றும் நாடகம் மூலம் பிரியாவிடை அளித்து மகிழ்வித்தனர். யு.கே.ஜி. மாணவர்களும் தாங்கள் கே.ஜி. வகுப்புகளில் கற்ற அனுபவங்களை கலை நிகழ்ச்சியாக கற்காலத்தில் உருவாக்கப்பட்ட சக்கரத்தின் உதவியால் இயக்கப்பட்ட கட்டைவண்டி முதல் தற்காலத்தில் விண்ணில் ஏவப்படும் விண்கலம் வரை அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருவது குறித்தும், சுற்றுச்சூழலை மனிதன் மாசுபடுத்துவதால் தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவது குறித்தும், விண்வெளியின் முக்கியத்துவம் மற்றும் கோள்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும் நாடகம் மற்றும் நடனம், உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.
மாணவர்களின் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவை கண்டு களித்தனர். சிறப்பு விருந்தினர் திருப்பதி யு.கே.ஜி. மாணவர்கள் 96 பேருக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் எலிசபெத் விழாவினை முன்னின்று வழிநடத்தினார்.
- முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
- உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர் பள்ளியில் 10- ம் வகுப்பு பயிலும் மாணவி லாவண்யா பாஸ்கர், கடந்த நவம்பர் மாதம் உலக அளவில் நடைபெற்ற ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் 100 சதவீத தேர்ச்சியில் முதலிடம் பெற்று உலக சாதனை செய்துள்ளார்.
இந்த தேர்வில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 300 பள்ளிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியை சேர்ந்த மாணவி லாவண்யாபாஸ்கர் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். உடன்குடி கிராமத்தை சேர்ந்த லாவண்யா - பாஸ்கர் என்பவரது மகள் ஆவார். அவர் தற்போது சவுதியில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் மாணவி லாவண்யாவுக்கு கேடயம் வழங்கி கவுரவப்படுத்தி னார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் மற்றும் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவியை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். ஆசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கபட்டது. இதற்காக காலை 6 மணி முதல் சிறப்பு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவிக்கு சபாநாயகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெற்றோர் உள்பட பலர் கலந்துள்ளனர்.
- ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் உலக அளவில் பல பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
- வி.எஸ்.ஆர். பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் மாணவி லாவண்யா பாஸ்கருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினார்
நெல்லை:
2022-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் உலக அளவில் பல பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளி மாணவி லாவண்யா பாஸ்கர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான மதிப்பெண் பட்டியலில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி செய்யப்பட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை கவுரவிக்கும் விதமாக வி.எஸ்.ஆர். பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் மாணவிக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினார். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்