search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Walking Tour"

    • 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார்.
    • தஞ்சையில் 5 நாடகள் நடைப்பயணம் நடத்தும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தொகுதியில் என்மண், என்மக்கள் 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக தஞ்சை சட்டமன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.

    இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் என்ற நடைபயணத்தின் 4-கட்ட பயணத்தை இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தொடங்குகிறார்.

    தஞ்சை மாவட்டத்தில் அவர் 5 நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    திருவையாறில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைப்பயணத்தை தொடங்கும் அவர் மாலை 4 மணிக்கு தஞ்சை கொடிமரத்துமூலை, வடக்குவீதி, தெற்குவீதி வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு மாமாசாகேப்மூலையில் பேசுகிறார்.

    அன்று இரவு தஞ்சையில் தங்கும் அவர் மறுநாள் 26-ந் தேதி ஒரத்தநாடு தொகுதியிலும், மாலையில் மன்னார்குடியில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    27-ந் தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    பின்னர் டிசம்பர் 1-ந் தேதி பாபநாசம் தொகுதியிலும், 2-ந் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளிலும் நடைப்ப யணம் மேற்கொள்கிறார். தஞ்சை மாவட்டத்தில் 5 நாடகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் பாரதிமோகன், ரெங்கராஜன், ராஜேஸ்வரன், உமாபதி, முரளிதரன், மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை ராஜகோபால்,தாராபுரம் வெங்கட்ராமன், திருப்பூர் இயேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
    • லோகநாதன், லெனின், ஈஸ்வரமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பல்லடம் சங்க அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் சுப்பிரமணி,உடுமலை ராஜகோபால்,தாராபுரம் வெங்கட்ராமன், திருப்பூர் இயேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிச்சாமி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார் விளக்க உரையாற்றினார். பின்னர் இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஏற்பட்டு வரும் நீர் பற்றாக்குறையை போக்கிடவும், பாசன விவசாயிகள் பாதிப்பு இல்லாமல் பயிர் செய்து உணவு உற்பத்தியை பெருக்கிடவும், ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டங்களை விரைவாக நிறைவேற்றிட வேண்டும் என திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அரசு தரப்பில் அவ்வ ப்போது நிபுணர் குழு அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிட ப்படுகிறது. ஆனாலும் இந்த திட்டத்தின் அவசியம் குறித்து போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே இனியும் தாமதம் செய்யாமல் இந்த அணைத்திட்ட ங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் "நம்ம நல்லாறு நடைபயணம்" வருகிற ஜூன் 10, 11, 12 தேதிகளில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் துவங்கி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் ஒன்றியங்கள் வழியாக உடுமலையை அடைந்து கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 10-ந்தேதி துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், த.வி.ச மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு மற்றும் 12-ந்தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் த.வி.ச. மாநில தலைவர் பெ.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள். எனவே இந்த நடைபயணத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் திருப்பூர் மாவட்ட குழு கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அருண்பிரகாஷ், லோகநாதன், லெனின், ஈஸ்வரமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடை பயணம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    • திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3 நாள் நடை பயண பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மதுரை கள்ளிக்குடி உதவி கல்வி அலுவலர் அலுவ கத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், சரவணன் ஆகியோர் தலைமையில் வருகிற 15-ந்தேதி நடைபயண பேரணி தொடங்குகிறது. அங்கிருந்து திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.

    திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில் 16-ந் தேதி தொடங்கும் பேரணி பசுமலை பஸ் நிறுத்தம், பழங்காநத்தம் கூட்டுறவுத்துறை அலுவலகம், காளவாசல் பி.ஆர்.சி. டெப்போ வழியாக எல்லீஸ் நகர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில் முடிகிறது.

    மதுரை அரசு பாலி டெக்னிக் வளாகத்தில் 17-ந் தேதி தொடங்கும் நடை பயண பேரணி சம்பள கணக்கு அலுவலகம், திருமலை நாயக்கர் மகால், செல்லூர் கல்லூரி கல்வி அலுவலகம், தல்லாகுளம் மாவட்ட கல்வி அலுவலகம், தாமரைத் தொட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகம், ராஜா முத்தையா மன்றம் வழியாக மாலை 5.45 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைகிறது.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்க நிர்வாகிகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கின்றனர்.

    • பிரச்சார நடை பயணம் தஞ்சையிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் வழியாக மல்லிப்பட்டிணத்தை சென்றடைகிறது.
    • 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    சுதந்திர தின பொன் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பிரச்சார நடை பயணம் நடைபெற்றது.

    100 பேருக்கு மேலான காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு பிரச்சார நடைபயணம் தொடங்கியது. பிரச்சார நடை பயணம் தஞ்சையிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் வழியாக மல்லிப்பட்டிணத்தை வருகிற 14-ந் தேதி அன்று சென்றடைகிறது. பிரச்சார நடை பயணத்தின் ஆரம்பத்தில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் கோ.அன்பரசன், பட்டுக்கோட்டை ராமசாமி, மாநில துணைத்தலைவர் பண்ண வயல் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், குணா பரமேஸ்வரி, முன்னாள் மாநில துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், சிறுபான்மை–ப்பிரிவுத்தவைவர் நாகூர்கனி, வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, இப்ராஹும், அன்பழகன், கோவி.செந்தில், அத்திவெட்டி நாராயணன், அய்யப்பன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சிங்கம், ஏ.ஆர்.எம்.ரகுநாத், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர் சசிகலா, மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் இளையபாரத், சிவகுரு, சம்பத் வாண்டையார், ஒரத்தநாடு சுப்பு தங்கராஜ், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், சூரக்கோட்டை ராஜசேகர், சித்திரக்குடி ஆண்டவர், வரகூர் மீசை முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×