என் மலர்
நீங்கள் தேடியது "wall collapses"
- இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
- தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் இந்த சம்பவம் நேற்று நடந்ததாகவும் பாச்சுபல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பேரழிவு நிவாரணப் படை குழுக்கள், நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் விழுந்த மரங்களை அகற்றி வருவதாக கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ராணுவ வளாக சுவர் இடிந்து, குடிசை பகுதி மீது விழுந்தது.
- உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு
லக்னோ:
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லக்னோ அருகே உள்ள தில்குஷா பகுதியில் ராணுவ வளாகத்திற்க வெளியே ஏராமானோர் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.
நேற்றிரவு கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார்.
அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் உன்னாவ் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதில் கணவன், மனைவி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்து சம்பங்களில் ஒரே நாளில் 12 பேர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் பட்டிவீரன்பட்டியில் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதில் மராமத்து பணிகள் மேற்கொண்டு வந்தார்.
இன்று அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 7 கட்டிட தொழிலாளர்கள் 3-வது மாடியில் இருந்து சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது தளத்தில் 3 தொழிலாளர்கள் இருந்தனர். பழமையான சுவர் என்பதால் 3-வது மாடியில் தரை பகுதி இடிந்து திடீரென கீழே விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சாரதா, ராஜவேலு, நாட்ராயன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த சாரதா தேனி அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் மதன்குமார் (வயது 13). இவன் அங்கு உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் குடித்தெரு பகுதியில் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டின் சுற்று சுவர் திடீரென்று இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கிய அவன் உயிருக்கு போராடினான். இதை பார்த்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு கருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற சிறுவனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதன்குமார் பரிதாபமாக இறந்தான். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.