என் மலர்
நீங்கள் தேடியது "war room"
- இது தொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் எம்.எம்.ஆர்.
- ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது.
மகப்பேறு இறப்புகளை தடுக்கும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) அமைக்கும் பணியை தமிழக சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதத்தை (எம்.எம்.ஆர்.) குறைக்க இந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பணிக்குழு தரவுகளை ஆய்வு செய்து, பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் 74.25% தாய் இறப்புகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விரிவான பிறப்புக்கு முந்தைய திட்டமிடல் முறையை கொண்டு வரவும், ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், பெரிய அளவிலான திறன் வளர்ச்சி சார்ந்த பயிற்சி முகாம்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு எம்.எம்.ஆர். 54 க்கு மேல் இருக்கும் வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டு வரவும் பணிக்குழு முடிவு செய்தது.
நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிந்துரைகள், பாதுகாப்பான கருக்கலைப்பு நடைமுறைகள், துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு போன்ற பரிந்துரைகளும் வழங்கிப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தலைமை தாங்கினார். இது தொடர்பான அரசாணையையும் துறை வெளியிட்டுள்ளது.
வெளியீட்டின் படி, 2014-2024 வரையிலான தரவுகளின்படி, 72% இறப்புகள் கிராமப்புறங்களில் நிகழ்ந்தன, மீதமுள்ள 28% நகர்ப்புறங்களில் நிகழ்ந்தன. தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் எம்எம்ஆர் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் எம்.எம்.ஆர். ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 55க்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டது.
சமீபத்திய மாதிரிப் பதிவு முறை (சாம்பில் ரெஜிஸ்டிரேஷன் சிஸ்டம்) தரவுகளின்படி, தமிழ்நாட்டின் எம்.எம்.ஆர். ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது. தேசிய சராசரி ஒரு லட்சம் பிறப்புகளில் 97 ஆக உள்ளது. இது கேரளாவில் 19, மகாராஷ்டிராவில் 33, தெலுங்கானா 43, ஆந்திரா 45, ஜார்கண்ட் 130 மற்றும் குஜராத்தில் 57 ஆக உள்ளது.
- தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. 3 குழுக்களை அமைத்துள்ளது.
- தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. 3 குழுக்களை அமைத்துள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை தி.மு.க. இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார்.
ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள தி.மு.க. துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும். சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
- தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார்.
- தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம்.
2024 பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மத்திய வார் ரூம்-ஐ காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
மத்திய வார் ரூம்-ன் தலைவராக தமிழகத்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.
மேலும், துணை தலைவர்களாக வருண் சந்தோஷ், அரவிந்த் குமார், நவீன் சர்மா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வார் ரூம்-ன் தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.