என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Water pavilion"
- கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தி.முக. சார்பாக நகரம், கிராமத்தில் மாவட்ட இளைஞரணி முகேஷ் ஏற்பாட்டில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் சந்திரமோகன், தொழிற்சங்கம் சந்திரன், கிளை செயலாளர் ஆனந்த், முள்ளிக்குளம் கிளை செயலாளர் கணேசன், தங்கபாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞரணி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திசையன்விளை:
திசையன்விளை நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலைய சந்திப்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வி.பி.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட மகளிரணி செயலாளரும் ,திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் பால்துரை, அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், நீர் வழங்கப்பட்டது.