search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Pond"

    • கதிர் ஆனந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார்

    வேலூர்:

    காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் துணை மேயர் சுனில் குமார் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு துணை மேயர் சுனில் குமார் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    பின்னர் பொது மக்களுக்கு ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, இளநீர், குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார். 

    • தா.பழுர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தி.மு.க கிழக்கு ஒன்றியம் சார்பாக சிலால் சாலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றி கோடைகால தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து அனைகுடம், சோழமாதேவி, கோடாலி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். மேலும் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் சிலால் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தா.பழுர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே காவல்துறை சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் முக்கியமான இடமாக உள்ள பகுதிகளில் கோடையின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோரினை எஸ்.பி. வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் எஸ்.ஐ.க்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • த.மு.மு.க. சார்பில் கல்வி-மருத்துவ உதவி வழங்கும் விழா நடந்தது.
    • கண் அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    த.மு.மு.க. 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் த.மு.மு.க. சார்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கும் விழா த.மு.மு.க. நகர் தலைவர் முஹம்மது அமின் தலைமையில் நடந்தது.

    மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான், மாநில செயற்குழு உறுப்பினர் மவுலவி உசேன் மன்பஈ முன்னிலை வகித்தனர். விழாவில் 2-ம் ஆண்டு கல்வி உதவி தொகையாக உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அப்துல்லா, முருகன், ரபிக் ராஜா, சைரோஸ் ஆகிய 4 மாணவர்களுக்கு தலா ரூ 7 ஆயித்து 500 வீதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. ஜக்கரியா என்ற தொழிலாளிக்கு கண் அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் மருத்துவ உதவியும், ராமநாதபுரம் அருகே லாந்தை சவுந்தரபாண்டி என்ற மாற்றுத் திறனாளிகளிக்கு சிறு தொழில் தொடங்க ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    முன்னதாக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் த.மு.மு.க. கொடியேற்றி வைத்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு ம.ம.க. நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் பாபு, மருத்துவ அனி மாவட்ட செயலாளர் சுலைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் த.மு.மு.க. 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

    ×