search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wayfarer"

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான் பாய் (வயது 33). இவர் பைக்கில் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் கிராமத்தில் டி.வி.க்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக ஒரேபைக்கில் வந்த 3 வாலிபர்கள் ரிஸ்வானை கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2 எல்.இ.டி டிவிக்களை பறித்துக்கொண்டு

    தப்பினர்.இதுகுறித்த காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரிஸ்வான் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் மாமுண்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வரங்கம் மகன் சுஜித்(23) என்பவர் தனது 2 நன்பர்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் சுஜித்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவான பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்.

    திருமாந்துறையில் பட்டப்பகலில் துணிகரம்ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் வழிப்பறி

    அகரம்சிகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் , திருமாந்துறை கிராமம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பத்மபிரியா (35). இவர்களது மகள் அஸ்வந்திகாஸ்ரீ(10).

    பத்மபிரியா திருமாந்து றையில் உள்ள வங்கியில் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். இதற்கான வட்டியை கட்டுவதற்காக தனது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, தனது மகளுடன் வங்கிக்கு சென்றுள்ளார்.

    வங்கியில் வட்டி கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, பணம் கட்டுவதற்காக காத்திருந்து உள்ளார். அப்போதுஅவரின் மகள் அஸ்வந்திகாஸ்ரீ ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்க கேட்டு ள்ளார். இதற்காக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெ ட்டுக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், பத்மபிரியா கையில் வைத்திருந்த பண ப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா சத்தமிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாக சென்று மறைந்து விட்டனர். இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் பத்ம பிரியா புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மங்கள மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்ப குதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை பறித்து சென்ற 2 இளைஞர்க ளின் உருவம் அதில் தெளி வாக பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த இரு வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பைக்கில் வந்த கும்பல் அட்டூழியம்
    • போலீஸ் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62), தொழிலதிபர். இவர் அதே பகுதியில் உள்ள புதுப்பேட்டை சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மின்தடை செய்யப்பட்டது.

    சண்முகம் பெயிண்ட் கடையை மூடி விட்டு வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று இரவு 9.30 மணி அளவில் கடையில் வசூல் ஆன ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை பணப்பையில் போட்டு, அதனை தனது பைக் முன்பகுதியில் மாட்டிக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு சென்றார்.

    கடைக்கும், அவரது வீட்டுக்கும் சுமார் 300 மீட்டர் தொலைவு மட்டுமே உள்ளது.

    வீட்டின் வாசலுக்கு சென்றதும் சண்முகம் பைக்கை நிறுத்தி இறங்க முயன்றார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் மோதுவது போல் சண்முகம் அருகில் வந்து நின்றனர்.

    கொள்ளையர்கள் சண்முகத்தை கீழே தள்ளிவிட்டு, அவர் பைக் முன்பக்கத்தில் மாட்டி இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனால் பதறிப்போன அவர் கூச்சலிட்டார். இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. இது குறித்து சண்முகம் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பைக் கொள்ளையர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியும், மற்றொருவர் முகத்தை மறைத்தபடி இருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என சண்முகம் தெரிவித்தார்.

    மேலும் சண்முகம் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    மின்தடை செய்யப்பட்ட நேரம் என்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. கும்பல் திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தி பணம் பரித்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவரது வீடு இருக்கும் பகுதியில் பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கடைகள் என பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாக விளங்குகிறது. பரபரப்பாக காணப்படும் டவுன் பகுதியில் இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 4 பேர் கைது
    • செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(வயது 30). இவர் அந்த கிராமத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 4-ந் தேதி நள்ளிரவு சேத்துப்பட்டில் திருமண வீட்டாரிடம் பூமாலைகளை கொடுத்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    வந்தவாசி-சேத்பட் சாலை, சின்ன கோழிப்பு லியூர் கூட்டுச் சாலை அருகே வரும்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் தேவனை வழிமடக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒரு செல்போன், பணம் மற்றும் இருச்சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து தேவன் அளித்த புகாரின்பேரில் தேசூர் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், சேத்துப்பட்டு அருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(23), சுனில்(23), சஞ்சய்(21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து தேவனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினர்
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல்

    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காடு செய்யாறு ஜங்ஷன் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குப் பின் பதில் அளித்தனர். விசாரணையில் அவர்கள் மாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது22), சர்மா (25), வாலாஜ வை சேர்ந்த தருண் (20) என்பதும் இவர்கள் கடந்த 5-ந் தேதி இரவு தனியார் கல்லூரி முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் சீட் கவரில் இருந்து ஒரு செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாலிபர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து திருட முயன்றதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×