search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wealth Saving Scheme"

    • சிறப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களில் நடக்கிறது.
    • இன்று, நாளை என 2 நாட்கள் நடக்கிறது.

    கோவை,

    அனைத்து அஞ்சலகங்க ளிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடக்க திருவிழா இன்று, நாளை என 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அஞ்சலக வட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு திருவிழா இன்று, நாளை கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் சேமிப்பு தொடங்குவதற்கான முன்பதிவு கோவை மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம், துணை, கிளை என அனைத்து அஞ்சலகங்களிலும் நடக்கி றது. எனவே, பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க அருகில் உள்ள அஞ்சலகத்தை உடனே அணுகி முன்பதிவு செய்யலாம். முன்பதிவிற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் நகல் மற்றும் தொலை பேசி எண் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். 10 வயதிற்குட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் நூறு சதவீதம் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களில் நடக்கிறது.

    எனவே பெற்றோர் அனைவரும், அஞ்சலகங்கள் மற்றும் தபால்காரர்கள் மூலம் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 1000 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழாவை மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
    • பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1000 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தை களுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பெண்களுக்கு சம உரிமை, சொத்தில் சம உரிமை ஆகிய முக்கியத்துவத்தை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபோல அஞ்சல்துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின எதிர்கால நலன் கருதி கொண்டு வரப்பட்டது.

    தற்போது முதல்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதி யில் 1000 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு ெதாடங்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த தொகையை குழந்தைகளுக்கு சேமியுங்கள். அது அவர்களின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். முடியாதவர்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி ேபசினர். இதில் இளைஞரணி பெருங்குடி வசந்த், தனக்கன்குளம் அஜித்குமார், மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி ராஜசேகர், கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஜாய்ஸ், அஞ்சலக அதிகாரி முனிகணேஷ், காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.

    ×