search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weapon"

    • குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமாகும் ’வெப்பன்’
    • மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான 'வெப்பன்' மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நடிகர் வசந்த் ரவி, "தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக 'வெப்பன்' படத்தை எடுத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் டிரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். 'டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார். 'ராக்கி' படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, 'ஜெயிலர்' படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

     

    நடிகர் சத்யராஜ், "திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்!". என கூறினார்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'.
    • ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'. இந்த படத்தில் தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், ராஜிவ் மேனன், ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, 'வெப்பன்' படத்தில் நடித்துள்ளார்.

    குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'வெப்பன்' திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் டீசர் வெலியிடப்பட்டு மக்கள் கவனத்தை பெற்றது.

    படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சத்யராஜ் இப்படத்தில் யாருமே அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியுமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யராஜை அனைவரும் கேங்ஸ்டர், கோஸ்ட் என்று பலரும் பல வித பெயர்களை வைத்து அழைக்கின்ரனர். அவரை அழிக்கும் மிஷனில் வசந்த் ரவி ஈடுப்படுகிறார். கிராபிக் காட்சிகள் மிரட்டலாக டிரைலரில் செய்தி இருக்கிறார்கள். இதனால் படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெப்பன் படத்தை மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
    • இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

    குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் "வெப்பன்." இந்த படம் மே மாதம் ரிலீசாக இருக்கிறது.

    படம் குறித்து பேசும் போது, "சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லராக 'வெப்பன்' படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான ஆக்ஷன் கதை இதில் இருக்கும்."

     


    "மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.மன்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை."

    "முதன்முறையாக சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் எனக்கும் ஊக்கம் கொடுத்தது. நடிகர் வசந்த் ரவியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் நிச்சயம் கவனம் ஈர்க்கும். படத்தில் நீங்கள் எதிர்பார்காத நிறைய திருப்பங்கள் இருக்கும்."

    "ராஜீவ் மேனன் சார் இந்த படத்தில் ஸ்டைலான அதேசமயம் பவர்ஃபுல்லான வில்லனாக நடித்துள்ளார். தன்யா ஹோப்பின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது பணிவான நன்றிகள்," என்று இப்படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் தெரிவித்தார்.

    மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு கோபி கிருஷ்ணா படத்தொகுப்பையும், கலை சுபேந்தர் பி.எல் மேற்கொண்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் ரோந்து சென்றார். அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    இதில் அவர் குற்ற செயல் செய்யும் திட்டத்துடன் வாளுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சேதுபதி கார்த்திக் என்பது தெரியவந்தது. அவரை இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்து வாளை பறிமுதல் செய்தார்.

    இதேபோல் தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் காஜா தெருவில் ரோந்து சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்த ராம மூர்த்தி (வயது51) என்று தெரியவந்தது.

    அவரை சோதனை செய்தபோது அவரிடம் பட்டாகத்தி மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது. அவற்றை இன்ஸ் பெக்டர் முத்துபிரேம்சந்த் பறிமுதல் செய்ததுடன், ராம மூர்த்தியை கைது செய்தார்.

    • மேலப்பாளையம் போலீசார் தெற்கு புறவழிச்சாலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவர்களிடம் 2 அடி உயரமுள்ள வாள் இருப்பதும் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் விலக்கு பகுதியில் 2 பேர் சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கே.டி.சி. நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது22), அண்ணாநகரை சேர்ந்த சுடலைமணி (22) என்பதும், அவர்களிடம் 2 அடி உயரமுள்ள வாள் இருப்பதும் தெரியவந்தது.

    மேலும் வழிப்பறி செய்யும் நோக்கில் அவர்கள் அங்கு நின்று இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    சுடலைமணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் வெளியே வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    குஜராத் மாநிலத்தில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைத்து நடவடிக்கை எடுக்கு திட்டத்தை சூரத் நகராட்சி மேற்கொண்டுள்ளது. #Aadhaar
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் வைர நகரம் என்றழைக்கப்படும் சூரத் நகரம் பட்டுத் துணி உற்பத்தி மற்றும் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிலுக்கு மிகவும் பிரசித்தியான நகரமாகும்.

    இந்நகரில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை நகராட்சி அலுவலக பணியாளர்கள் பிடித்து சென்று கொட்டடியில் அடைத்து வைக்கின்றனர். உரிமையாளர் தேடிவரும்போது அபராத தொகையை பெற்றுகொண்டு அவற்றை விடுவித்து வந்தனர்.

    பிடிபட்ட முதல் நாளில் முதல் முறையாக பிடிப்பட்டால் 1800 ரூபாய் அபராதம், மேலும் கொட்டடி கட்டணமாக ஆயிரம் ரூபாயும், தீவனம் மற்றும் பராமரிப்பு செலவுக்கென 650 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நான்காவது முறையாக பிடிபட்டால் உரிமையாளர்களிடம் கால்நடைகள் ஒப்படைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து கொண்டு செல்லும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    கால்நடைகளை பிடித்து செல்ல வாகனங்களில் வரும் நகராட்சி பணியாளர்களுக்கும் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதமும், மோதலும் கூட நடப்பதுண்டு.

    இந்நிலையில், ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘பல்லேலக்கா, பல்லேலக்கா’ பாட்டின் சரணத்தில் வரும் ‘ஏலே.. ஆடு, மாடு மேலே உள்ள பாசம், வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்’ என்னும் பாடல் வரியைப்போல், கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அவற்றின் உரிமையாளர்களின்  ஆதார் எண்ணுடன் இணைத்து நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை சூரத் நகராட்சி மேற்கொண்டுள்ளது.

    இதற்காக, தங்களிடம் பிடிபடும் கால்நடைகளின் காதுகளில் வரிசை எண்ணுடன் கூடிய பிளாஸ்டிக் பட்டைகளை இணைத்து அதை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் அதிகாரிகள் இணைத்துள்ளனர்.

    இதன் மூலம் கால்நடைகள் பிடிபட்டதும் உடனடியாக அவற்றின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கவும், அபராதம் விதிக்கவும் வசதியாக உள்ளதாக சூரத் நகராட்சி உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
    இதுவரை சுமார் 25 ஆயிரம் கால்நடைகள் அவற்றின் உரிமையாளர்களான சுமார் 1500 பேரின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும்,  25 ஆயிரம் கால்நடைகள் விரைவில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Aadhaar
    ×