search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Program"

    • நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்டநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திரா நகர் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையேற்றார். நிகழ்வில் கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விதை பந்து வழங்கப்பட்டது.

    மேலும் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாவட்டத்தில் தமிழ் வழி கல்வியில் பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவர்களுக்கு பரிசுகளை மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இய ங்கும், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழ ங்கும் விழா மாவட்ட கலெ க்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், 107 பெண்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும்,16 பெண்களுக்கு மாவு ஆட்டும் எந்திரங்களும், 14 மாணவி களுக்கு கல்வி உதவித்தொ கையும்,11 பெண்களுக்கு குடிசை தொழில் உதவிகள் என ரூ.13 லட்சத்து 54,200 மதிப்பில் 149 பயனாளிகளுக்கு உதவியும், மாவட்டத்தில் தமிழ் வழி கல்வியில் பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற கடையநல்லூர் ஷப்ரின் இமானா 590, செங்கோட்டை கலைச் செல்வி 583, சங்கரன் கோவில் முத்து லட்சுமி 583, தென்காசி கார்த்திகா 582 ஆகியோர்களுக்கு பரிசு களையும், மாநில சிறுபான் மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ, மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் தமிழ் செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர்,தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன், வடகரை பேரூ ராட்சி தலைவர், கவுரவ செயலாளர் முகம்மது சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்

    ×