search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare projects"

    கீழ்நிலைத் தொட்டி வேண்டுமென சூலூர் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் குமரவேல் கோரிக்கை வைத்தனர்.

    சூலூர்,

    பீடம் பள்ளி பகுதியில் குடிநீர் தேவைக்காக கீழ்நிலைத் தொட்டி வேண்டுமென சூலூர் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் குமரவேல் கோரிக்கை வைத்தனர்.

    இதை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் நிதியை சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி ஒதுக்கீடு செய்தார்.

    இந்த கீழ்நிலை தொட்டிக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அதோடு கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன் மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியை பீடம் பள்ளி மயானம் செல்லும் பாதையை தார் சாலையாக மாற்ற ஒதுக்கீடு செய்துள்ளார் அதற்கான துவக்க பணிகள் இதொடக்க நிகழ்ச்சியும் நடந்தது.

    நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி, கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், பீடம் பள்ளி ஊராட்சித் தலைவர் குமரவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குட்டியப்பன், இடம் பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தனர்
    • ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் தோட் டக்கலைத் துறை கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், தாட்கோ, ஆவின், வாழ்ந்து காட்டுவோம், தோட்டக்க லைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறை கள் சாா்பில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ராசா ஆகியோா் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

    நிகழ்ச்சியில் சுற்றுலா அமைச்சா் ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் தேயிலை, காபி தூள் தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல், வாசனை திரவியங்கள் தயாரித்தல், சாக்லெட், வா்க்கி தயாரித்தல், கேரட் கழுவும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்களில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து தொழில் தொடங்கி வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.

    பின்னா் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வாழ்ந்து காட்டுவோம், மாவட்ட முன்னோடி வங்கி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் ஆகிய துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் (பொ) கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக்க லைத் துறை இணை இயக்குநா் ஷபிலாமேரி, ஆவின் பொதுமேலாளா் ஜெயராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சண்முகசிவா, தாட்கோ பொது மேலாளா் ரவிசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
    • இதனை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.

    மேலும் மணலிப்பட்டு ஏரியில் தென்கிழக்கு பகுதியை ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியும், கைக்கிலப்பட்டு சங்கரா பரணி ஆற்றில் மேற்கு கரையில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது இதனை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    அதுபோல் கொ.மண வெளி கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மரை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார். ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற வுள்ள பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அந்தந்த பகுதி கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கள், மின்துறை அதிகாரிகள், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்ட ப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கால்நடை பராமரிப்பு,

    பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கார்த்திக் தலைமையிலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளி கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு,

    பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட விபரம், நிலுவையிலுள்ள விபரங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் விபரம், முடிவுற்ற பணிகள் குறித்தும் அரசு முதன்மைச் செயலாளர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, அவர்களை பயன்பெறச் செய்து வருகிறது. எனவே, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    முன்னதாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு பொது இ-சேவை மையத்தில், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை,

    மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர தொகை பெறுவதற்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, குறித்து அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    • தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, நிழற்கூரை, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.காலேஜ்ரோடு அய்யப்பன் கோவில் முன் ரூ.31 ½லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமிபூஜை நடந்தது. தெற்குதொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

    இது போல் கே.வி.ஆர்.நகர் பகுதியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பெரிச்சிப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை, பெரியதோட்டம் மெயின் ரோடு பகுதியில் ரூ.26½ லட்சத்தில் நிழற்கூரை அமைப்பதற்கான பூமிபூஜை, கோம்பை தோட்டம் மெயின் ரோட்டில் ரூ.15 லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை, பெரியதோட்டம்முதல் வீதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமையம்ரூ.25 லட்சத்தில் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளைதொடங்கி வைத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம்மதிப்பில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ்,திலக்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ×