என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள்
- ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
- இதனை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
மேலும் மணலிப்பட்டு ஏரியில் தென்கிழக்கு பகுதியை ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியும், கைக்கிலப்பட்டு சங்கரா பரணி ஆற்றில் மேற்கு கரையில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது இதனை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
அதுபோல் கொ.மண வெளி கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மரை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார். ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற வுள்ள பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அந்தந்த பகுதி கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கள், மின்துறை அதிகாரிகள், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.