search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wheel"

    • கனகராஜ் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கங்க வல்லி வட்டம் நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 45). டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஓர்க்ஷாப்பின் வாசலில் டிராக்ட ரை நிறுத்திவிட்டு முன்பக்கமாக நேற்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த சாலையில் வந்த வாகனம் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கனக ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவ குமார் (வயது 46) என்பவரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுத்தார். அப்போது அவர் எதிர்பாரா தவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சிய டைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான சிவகுமாருக்கு சுதா (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
    • தியாகராஜர், அம்பாள், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்கள் என மொத்தம் 5 தேர்கள் வடம் பிடிக்கப்படும்.

    திருவாரூர்:

    சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில்.

    இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி நடை பெற உள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.

    சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 220 டன்னாக இருக்கிறது.

    இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது.

    அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம்.

    அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும்.

    முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேர்கள் உள்ளது.

    இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையால் ஆனவை.

    நாளை காலை 5.30 மணிக்கு முருகர், விநாயகர் தேர்கள் இழுக்கப்படுகிறது.

    பின்னர் 7.30 மணிக்கு பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர் இழுக்கப்படுகிறது.

    இதனை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைக்கிறார்.

    தேர் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 1500 போலீசார் ஈடுப்பட்டு உள்ளனர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது. 

    ×