என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "WIDENING WORK"
- அந்தியூர் அண்ணாமடுவில் இருந்து பஸ் நிலையம் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
- சாலை பணியாளர்கள் உதவியோடு அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணாமடுவில் இருந்து பஸ் நிலையம் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல் அந்தியூர் தவிட்டுப்பாளையம் இணைக்கும் பாலம் அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து பாலத்தின் இருபுறங்களிலும் சாலையை அகலப்படுத்த நில அளவையாளர் நடராஜ், அம்மாபேட்டை நில அளவையாளர் மகேஸ்வரி, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறி யாளர் சதாசிவம், நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ. கிருஷ்ணசாமி, ரமேஷ், செல்வம் மற்றும் சாலை பணியாளர்கள் உதவியோடு அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளவர் களையும், அதனை அகற்ற வலியுறுத்தி வருகின்றார்கள். இதனால் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் ஒரு வித பரபரப்பு நிலவியது.
- பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
- பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருணாநிதியின் முயற்சியின் காரணமாக பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது பொது மக்களின் நலன் கருதியும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக ந வடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்டப் பொறியாளர் பொத்தனூர் பேரூராட்சி மன்றத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தார் சாலை யின் நடுவில் தடுப்புகள் அமைத்து விபத்து களை தடுக்க நட வடிக்கை எடுத்த பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றியினை தெரிவித்தனர்.
- வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி
- ஒரு வழி சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
புதுச்சேரி:
சென்னை - நாகப் பட்டினம், விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை பணிகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக முழு வீச்சில் நடந்து வருகின்றது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.என் குப்பத்தி லிருந்து கெங்கராம் பாளையம் வரை 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
சாலை விரிவாக்க பணியின் போது புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கட்டிடங்கள், மரங்கள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.
இதனால் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களில் செல்லும் பயணிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தாங்கள் இறங்க வேண்டிய இடமும், செல்ல வேண்டிய இடமும் தெரியாமல் வேறு ஊருக்கு சென்று யாரிடமாவது முகவரி கேட்டு திரும்பி வரும் சூழ்நிலை உள்ளது. தாங்கள் போக வேண்டிய ஊர்களை தாண்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் திரும்பி வரும் அவலநிலை உள்ளது.
பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க எம்.என் குப்பத்திலிருந்து வளவனூர் வரை புதிதாக பெயர் பலகைகளை வைக்க வேண்டும் அல்லது தற்காலிக பெயர் பலகையில் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பணிகளால் முறையான சாலை வசதி இல்லாததால் ஒரு வழி சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
பஸ் ஸ்டாப் இல்லாத இடங்களில் பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் மதகடிப்பட்டு வரை செல்லும் தனியார் பஸ்கள் நேரமின்மை காரணமாக கண்டமங்கலம், அரியூர் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு திரும்பி புதுச்சேரிக்கு சென்று விடுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் பயணிகள் தங்கள் இடத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்விளக்குகள் அகற்றப்பட்டு புதிய மின் விளக்குகள் பொருத்தி வருவதால் ஒரு சில இடங்கள் இருட்டாக உள்ளது.
கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதியிலும் திருபுவனை ஏரிக்கரை பனைமரங்கள் எதிரில் உள்ள சாலையிலும் ஒரு வழி சாலையாக கடந்த 5 மாதங்களாக இருந்து வருகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகின்றது.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
- இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ரூ.6.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர்சு. முத்துசாமி தலைமை தாங்கி சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது நெடுஞ்சாலை துறை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ.6.60 கோடி மதிப்பில் நடைபெறு–கிறது. இந்தப் பணி விரைந்து முடிக்கப்படும்.
இங்கு வரும் தண்ணீரை காரணம் முதலில் அதிகாரிகள் சொல்வது முதலில் காலியிடம் இருந்ததால் தண்ணீர் அங்கு போய் தேங்கி நின்றது. தற்போது கட்டிடம் வந்து விட்டதால் ரோட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தண்ணீரை வெளியே எடுத்து செல்வதற்காக சாக்கடை தண்ணீராக இருந்தாலும் சரி, மழை நீராக இருந்தாலும் சரி அதற்கான கழிவு நீர் கால்வாய் வசதி செய்யப்படுகிறது.
இவை முழுமையாக செய்யப்பட்டு அருகில் ஒரு ரோடு உள்ளது .அந்த ரோடு வழியாக தண்ணீர் திருப்பி விடப்படும். அந்த ரோடு மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளதால் இந்த தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான வழிவகைகளை அவர்கள் செய்வார்கள்.இதற்கான திட்டமும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. குமலன் குட்டை கார்னரில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்டு குமலன் குட்டை பகுதியில் ஒரு ரவுண்டானா உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பவானி காளிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு அவிநாசி கூட்டு குடிநீர் திட்ட முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.
- இதேபோல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.
ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதே போல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.
இந்த பகுதியில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளை நெடுஞ்சாலை துறையின் தர கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனரகத்தை சேர்ந்த அதிகாரி கோதண்ட ராமன் தலைமை யிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் சாலைகளை அளவீடு செய்தனர். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறையின் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
- காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
பவானி:
பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் காளிங்கராயன் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த சில மாத ங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் ரோட்டோரம் இருந்த ஒரு சில மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த நிலையில் காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.இதேபோல் காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வெட்ட ப்பட்ட ஒரு மரத்தின் வேர் பகுதியை அப்புறப்படுத்தாமல் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதாக கூறப்படு கிறது.
இதனால் வேர் உள்ள இடத்தில் மீண்டும் மரம் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ரோடு சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே மரத்தின் வேரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ரோட்டோரங்களில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ள னர்.
- பெரம்பலூர்-துறையூர் சாலை விரிவாக்கப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது
பெரம்பலூர்:
சென்னை-கன்னியாகுமரி தொழில் தடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 30.057 கி.மீ. தொலைவு கொண்ட இச்சாலையை விரிவாக்கம் செய்ய ரூ.150 கோடிக்கு திட்டம் தயார் செய்யப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள உரிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடப்பட்டு, 27.1.2021 அன்று ரூ.143.83 கோடிக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது. அப்போது, பணியை உடனே தொடங்கி, 2 ஆண்டுகளுக்குள் முடித்து, நெடுஞ்சாலைத்துைறயிடம் ஒப்படைக்க வேண்டும் என டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து டெண்டர் இறுதி செய்யப்பட்ட இரண்டே வாரங்களில், சாலை அமைக்கும் பணி தொடங்கின. இதன்படி 9.2.2023 அன்று சாலை விரிவாக்கப் பணிகளை ஒப்பந்ததாரர் முடித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, முழுவீச்சில் நடைபெற்று வந்த சாலை அமைக்கும் பணி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறுத்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தபோது, 7 மீட்டர் அகலம் கொண்ட பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை 10 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தி, விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையோரம் உள்ள பேருந்து நிறுத்தம், கல்வி நிலையங்கள், அணுகு சாலைகள் சேரும் இடங்கள் ஆகிய பகுதிகளில், அந்தந்தப்பகுதியின் தேவைக்கேற்ப சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாலையை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் அநாவசியமாக சாலைைய பயன்படுத்துவதை தடுக்கும் விதமாகவும், விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் விதமாகவும், நடைபாதையில் மூடப்பட்ட மழைநீர் வடிகால்கள் மற்றும் இரும்பு கிரில்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த சாலை அமையும் வழித்தடத்தில் ஒரே ஒரு இடத்தில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அந்த இடத்தில் மட்டும் சாலை விரிவாக்கம் செய்ய முடியாமல் உள்ளது. அந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் குழு தொடர்ந்து ஆய்வு செய்து, விரைந்து முடிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்கள், மின் விளக்குகள், இரும்பு கிரில்கள் அமைத்தல், தார் சாலை அமைத்தல் போன்ற இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதனால் இந்த சாலை திட்டம் குறிப்பிட்ட காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பே, நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்