search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women siege"

    • கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
    • கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கயத்தாறு :

    கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன.

    இந்நிலையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விட்டு அனைதலையூர், மறக்குடி மற்றும் நேதாஜி நகரில் வாழும் கிராம மக்களுக்கு கூட்டுகுடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் ஊர் நாட்டாண்மைகள் சின்னத்துரை, லெட்சு மணன், மகாராஜன் ஆகியோர் தலைமையில் முற்று கையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கங்கை கொண்டான் போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர் கவிதா பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 2 நாட்களுக்குள் உடனடியாக புதிய பைப் லைன் வைத்து கொடுக்கப்படும் என்றனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் மனு

    இதற்கிைடயே கங்கை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங் களான அலங்காரப்பேரி, மடத்துப்பட்டி, ராஜபதி, குப்பக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சீவலப்பேரியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தான் குடிதண்ணீர் வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்கும் போது அவர்கள் முறையாக பதில் கூறுவதில்லை. எனவே நிரந்தரமாக தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பென்னாகரம்:

    தருமபுரிமாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே உள்ள சாணாரப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் சரியாக வராததால் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. 

    இதனால் இன்று காலை 9 மணி முதல் பென்னாகரம் மேச்சேரி சாலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த பெரும்பாலை  சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். மேலும் பென்னாகரம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசனும் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
    புழலில் புதிதாக திறந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்குன்றம்:

    புழல் போலீஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் நேற்று புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இன்று காலை மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர். #tamilnews
    வண்ணாரப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டையில் காத்பாடா தெரு, பென்சிலர் லைன், லெபர் லைன் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று தங்க சாலை அருகே உள்ள குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் குடிநீர் சுத்தமாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கூடுதலாக 20 நாட்கள் அவகாசம் கொடுத்தால் பயிரிட்ட நெற்பயிரை அறுவடை செய்து விடுவோம் என்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள விடதண்டலம் ஏரிப் பகுதியை விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்து நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது ஆக்கிரமிப்பு ஏரி பகுதியை மீட்கும் பணியில் கோட்டாட்சியர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிட்ட இடங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெற்பயிருடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 20 நாட்கள் கூடுதலாக அவகாசம் கொடுத்தால் நெற்பயிரை அறுவடை செய்து விடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×