என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "worker's house"
- காட்டேரிக்குப்பம் புது நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் கட்டிட தொழிலாளி.
- இவர் காலை கட்டிட கூலி வேலைக்கு சென்று விட்டார்.
புதுச்சேரி:
காட்டேரிக்குப்பம் புது நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் கட்டிட தொழிலாளி.
இவர் காலை கட்டிட கூலி வேலைக்கு சென்று விட்டார். இவரது குடும்பத்தினர் மதியம் 1 மணியளவில் வீட்டை பூட்டி சாவியை ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த தங்கக் காசுகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ரூ.22,600 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைக்காமல் மறைவிடத்தில் இருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் திருடி சென்றி ருப்பதால் இவர்களது குடும்பத்திற்கு அறிமுகமான நபர்களோ அல்லது உள்ளூர் நபர்களோ இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என காட்டேரிக் குப்பம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என காட்டேரிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா கூறினார்.
- நள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது
- அக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம்பழைய காலனி சேர்ந்தவர் அய்யப்பன் (52)கூலி தொழிலாளி இவரது கூரை வீடு நேற்றுநள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டி நிலைய தீயணைப்புநிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்விரைந்து சென்றுஅக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- வீட்டை பூட்டிவிட்டு தோட்டவேலைக்கு சென்றுவிட்டார்.
- கம்மல், கால்கொலுசு மற்றும் பத்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
அவினாசி :
அவினாசியை அடுத்து நடுவச்சேரி அங்காளம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மனோன்மணி ( வயது 47) .கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டவேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியுற்றார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 1/2 பவுன் கம்மல், கால்கொலுசு, மற்றும் காட்டு பத்திரம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்