என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Bank team"
- புதுச்சத்திரம் வட்டாரத்தில் அயர்ன்வாம் திட்ட பகுதிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.
- விதை பண்ணை குழுவிற்கு வழங்கப்பட்ட சூழல் நிதி முறையாக ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்டுள்ளதா குறித்து ஆய்வு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் வட்டாரத்தில் அயன்வாம் திட்டம் பகுதி 2, திருமணிமுத்தாறு உபவடிநீர் பகுதி கிராமத்தில் உலக வங்கி குழு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆய்வு விவசாயிகளுடன் செயல்பாடு, விதை, பண்ணை அமைத்தல், விதைப் பண்ணையின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விதைகளின் விற்பனை குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது விதை பண்ணை குழுவிற்கு வழங்கப்பட்ட சூழல் நிதி முறையாக ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்குமாறு கூறினர்.
தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்காக விவசாயிகளுக்கு பாசிப்பயறு கரு விதை சோளம் கே-12 கரு விதை நிலக்கடலை டி.எம். பி 14 கருவிதை உயிர் உரங்கள் உயிரியல் காரணிகள் ஆகிய இடுபொருட்கள் ஆய்வு குழுவினர் வழங்கினர்.
கூட்டத்தில் போது வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ராஜகோபால், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பேபி கலா, வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி, வேளாண்மை அலுவலர் துணை வேளாண்மை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உலக வங்கி நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ் டோட்ஜீஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனு ஆய்வு செய்தனர்.
- ஊடு பயிர் சாகுபடி செய்து வருவது குறித்து அங்குள்ள முன்னோடி விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
கடையம்:
கடையம் வட்டாரம் மந்தியூர் கிராமத்தில் உலக வங்கியின் நிதி உதவியோடு செயல்படும் தோட்டக்கலை துறை பணிகளை உலக வங்கி நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வினை உலக வங்கி நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ் டோட்ஜீஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனு ஆய்வு செய்தனர். இவர்களுடன் சென்னையை சேர்ந்த பயிர் நிபுணர் சிவகுமார், கிருஷ்ணன், பொறியாளர் சந்திரசேகர், வித்யாசாகர், விஜயராம், ஜூடித் டி சில்வா உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்த இந்த குழு திட்டத்தின் பயன்பாடு குறித்தும், தோட்டக்கலை - மலை பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனம் குறித்தும் மற்றும் கடையம் வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள கத்திரி அதனால் பயனடைந்து நெல்லியில் ஊடு பயிராக சிறு கிழங்கு சாகுபடி செய்து வருவது குறித்தும், அங்குள்ள முன்னோடி விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி நிபுணர் குழுவிற்கு தோட்டக் கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விளக்கி கூறினார்.
கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஞானசேகரன், தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜன், திருமலைக் குமார், பார்த்தீபன், பானுமதி, இசக்கியம்மாள் உடன் இருந்து ஆய்விற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்