search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wound"

    • சாரல் மழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்தது.
    • வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்மா என்ற பெண் காயம் அடைந்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் செம்மங்குடி மேலத் தெருவில் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்புவீடுகள் உள்ளன. சாரல் மழை விட்டு விட்டு கடந்த சிலநாட்களாக பெய்து வந்த நிலையில் நேற்று இரவு பத்மா (வயது50) என்பவருடைய தொகுப்பு வீட்டின் சுவர்திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி பத்மா காயம் அடைந்தார்.

    அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொகுப்பு வீடுகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி இல்லாத தொகுப்பு வீடுகளை இடித்து, புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பத்தூர் அருகே ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.
    • திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் அங்காள பரமேசுவரி, கணவாய் கருப்பர் வருடாபிஷேக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 7 பேர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாநில ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் ஒண்டிராஜ், மாநில இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே கோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது35).

    இவர் குடும்பத்தோடு கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது மனைவி நேற்று மதியம் கியாஸ் அடுப்பின் அருகே விறகு அடுப்பில் சமையல் செய்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.

    இதில் கூரை வீ்டு முற்றிலும் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலிண்டரில் தீப்பிடித்த உடன் வீட்டில் உள்ள அனைவரும் ெவளியே சென்று விட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    • அய்யப்பன் குடிபோதையில் வந்து மனைவிடம் தகராறு செய்துள்ளார்.
    • விறகு கட்டையால் ஜோசப் தலையில் ஓங்கி அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம், திருவையாறை அடுத்த வளப்பகுடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).தொழிலாளி.

    இவரது மகள் ரீட்டாமேரியும் (27), பட்டுக்கோட்டை தாலுகா, கருப்பு கிராமத்தை சேர்ந்த சங்கரன் மகன் அய்யப்பனும் (35) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் கடந்த 3 ஆண்டாக வளப்பகுடியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அய்யப்பன் குடிபோதையில் வந்து மனைவிடம் தகராறு செய்துள்ளார்.

    இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு ரீட்டாமேரி வந்துள்ளார்.

    உடனே அய்யப்பன் மனைவியை தேடி ஜோசப் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது.இதில் ஆத்திரம்அடைந்த அய்யப்பன், விறகு கட்டை யால் ஜோசப் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்மருது, சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோசப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில், அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

    ×