என் மலர்
நீங்கள் தேடியது "Yamuna river"
- யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
தற்போது வரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.
- யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் மீட்பு.
- கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர் வெளியேறி சாலைகளுக்கு வரும் புகைப்படங்களும் வெளியேறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல், அரியானா மாநிலம் பரீதாபாத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் வசிக்கும் குறைந்தது 90 பேரை காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அமிபூர் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அங்குள்ள பண்ணைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால், இந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்காக, பரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மீட்புப் பணியில் ஈடுபட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறினார்.
மேலும், பரிதாபாத் துணை கமிஷனர் விக்ரம் சிங் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) பூஜா வசிஷ்ட், மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து, கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.
- யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது.
- உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது.
புதுடெல்லி:
வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.
இமாச்சலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய தண்ணீர் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து யமுனா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதனால் யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. ஏற்கனவே டெல்லியில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் யமுனா நதி வெள்ளமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கார், பஸ் என பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் அணைகள் மூடப்பட்டன. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடர் கன மழை காரணமாக யமுனா ஆற்றின் நீர் மட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயந்ந்தது. நேற்று பகல் 1 மணிக்கு 208.62 மீட்டராக அதிகரித்தது. ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி சென்றதால் பெரும் வெள்ளம் டெல்லிக்குள் புகுந்தது.
இந்த நிலையில் யமுனா ஆற்றுக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆற்றின் நீர் மட்டம் 208.62 மீட்டர் அளவிலேயே இருந்தது. நீர் மட்டம் உயராததால் இனிமேல் குறைய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நீர் ஆணைய இயக்குனர் ஷரத் சந்திரா கூறும்போது, அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 4 மணிக்கு 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. யமுனா ஆற்றில் நீர் மட்டம் சீராகி விட்டது. இன்று ஆற்றின் நீர் மட்டம் 208.45 மீட்டராக குறையும் என்று எதிர் பார்க்கப்படு கிறது என்றார்.
யமுனா ஆற்றின் நீர் மட்டம் நேற்று இரவு நிலையான அளவு வந்து குறைய தொடங்கி இருந்தாலும் அபாய கட்டத்தை விட மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீர் இன்னும் பாய்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி சென்ற தண்ணீரின் அளவு குறைய தொடங்கியுள்ளதால் டெல்லியில் வெள்ளம் வடிகிறது.
அதே வேளையில் டெல்லி முழுவதும் வெள்ள காடாக இருப்பதால் தண்ணீர் வடிய சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு மேலும் 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 17 பேர் பலியானார்கள். இமாச்சலபிரதே சத்தில் 6 பேர், அரியானாவில் 5 பேர் பஞ்சாப்பில் 4 பேர், உத்தரகாண்ட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டு மொத்தமாக வட மாநிலங்களில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் இமாசல பிரதேசத்தில் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தும் இமாசலபிரதேச மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அங்கு லஹவுல் ஸ்பிதி மற்றும் கின்னார் மாவட்டங்களில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 1000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
- தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
புதுடெல்லி:
பருவமழை காரணமாக வட மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இங்கு பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வரலாறு காணாத மழை கொட்டியது. யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
டெல்லியின் ஐ.டி. 3 மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் படை வரவழைக்கப்பட்டது. ஹனுமான் மந்தர், யமுனா பஜார், சீதா காலனி, சிவில் லைன்ஸ்களுக்கு வெளியே உள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் யமுனா ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:-
யமுனை நதிநீர் மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது. கனமழை பெய்யாவிட்டால் நிலைமை விரைவில் சீராகும். வஜிராபாத் மற்றும் சந்திரவால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
யமுனை நதியில் இன்னும் 205.33 மீட்டர் அபாய அளவை விட 2 மீட்டருக்கு மேல் செல்கிறது. வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 208.66 ஆக இருந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர் மட்டம் 207.62 ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையே டெல்லியில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
- வீடுகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 41 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது. நேற்று இரவு யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்தது. இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை இது 205.45 மீட்டர் அளவில் நீர்வரத்து குறைந்தது. இருந்த போதிலும் யமுனையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
டெல்லி நகரில் 25 சதவீதம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
வீடுகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 41 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் உத்தர காண்ட், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 5 நாட்கள் கனமழை. மற்றும் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது.
- உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது.
இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது.
அதன்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் ஜூலை 22 (இன்று) வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக உயர்ந்துள்ளது.
- வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள்.
டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது. இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியது.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக இருந்தது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்தது.
இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக உயர்ந்துள்ளது.
வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள் புதுடெல்லி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- யமுனை நதியில் பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் குளித்து வழிபாடு நடத்தினார்.
- அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று கூறி டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் யமுனை நதிக்கரையில் நீராடினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விரேந்தர் சச்சுதேவ், "யமுனை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு வழங்கிய 8,500 கோடி ரூபாய்க்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.
சச்தேவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், "டெல்லி நகரத்தின் யமுனை நதிக்கரையில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது. டெல்லி பாஜக தலைவர் அரியானா அரசாங்கத்துடன் பேசி சோனிபட் மற்றும் பானிபட் ஆகியவற்றிலிருந்து தொழிற்சாலை கழிவுகளை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
- சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.
ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.
ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் பொதுமக்கள் நீராட டெல்லி அரசு தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை நிராகரித்த நீதிமன்றம், யமுனை நதி மிகவும் மாசடைந்து இருப்பதால் அங்கு நீராடும் மக்களுக்கு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆதலால் பாதுகாப்பான இடங்களில் சத் பூஜை கொண்டாடுங்கள் என்று கருத்து தெரிவித்தது.
- அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
- இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவு பாதிக்கக்கூடும்.
புதுடெல்லி:
டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் யமுனை நதியில் அரியானா மாநில பாரதீய ஜனதா அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து பாரதீய ஜனதா நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இத்தகைய குற்றச்சாட்டுகள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவை பாதிக்கக்கூடும். எனவே புகாருக்குரிய ஆதாரங்களுடன் இன்றிரவு 8 மணிக்குள் கெஜ்ரிவால் தனது பதிலை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- டெல்லி தேர்தலை ஒட்டி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
- யமுனை நதியில் அரியானா பாஜக அரசு நச்சு கலப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் யமுனை நதியில் அரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இத்தகைய குற்றச்சாட்டுகள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவை பாதிக்கக்கூடும். எனவே புகாருக்குரிய ஆதாரங்களுடன் இன்றிரவு 8 மணிக்குள் கெஜ்ரிவால் தனது பதிலை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் குடிக்கும் தண்ணீரில் அரியானா பாஜக அரசு விஷம் கலக்குமா? கெஜ்ரிவாலின் இந்த குற்றசாட்டு அரியானாவை மட்டுமில்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமானப்படுத்தியுள்ளது. தண்ணீர் கொடுப்பதை நம் நட்டு மக்கள் நல்ல காரியமாக கருதுகிறார்கள். தோல்வி பயத்தால் அவர்கள் இப்படி உளறுகிறார்கள். இப்படி பேசுபவர்களுக்கு டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை பார்த்துவிட்டீர்கள். இப்போது உங்களுக்காக பணியாற்ற மோடிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்களை குடும்பத்தைப்போல பார்த்துக்கொள்கிறேன். உங்களின் கனவு இனி எனதாக இருக்கும். கனவுகளை நிறைவேற்ற வலிமையை தாருங்கள்" என்று தெரிவித்தார்.