என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yogi Babu"

    • நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் படத்தில் சம்பிகா, ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஸ்ரீனிவாசன், ரவி மரியா, சாம்ஸ் ,நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை கே கோகுல் மேற்கொள்ள. பைஜு ஜேகம் படத்திற்கு இசையமைத்துள்ளார். கரம் மசாலா படத்தை அப்துல் மஜித் தயாரித்துள்ளார். திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.

    விமல் சமீபத்தில் நடித்து வெளியான ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்
    • இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Dev cinemas Pvt Ltd தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.

    மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகிறது.

    நகைச்சுவை நாயகன் யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்ஷ்மன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறன்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ரைட்டர், தண்டகாரண்யம் படங்களின் ஒளிப்பதிவாளர் பிரதீப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோட், அமரன் பட கலை இயக்குநர் சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார்.

    சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்களின் உடை வடிவமைப்பாளர் நட்ராஜ் உடைவடிவமைப்பு செய்கிறார்.

    படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
    • ம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

    அதன்படி சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • படம் இயக்கும் பணிகளில் ஈடுபடுவதாக தகவல்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரவி மோகன். சமீபத்தில் இவர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ரவி மோகன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் நடிப்பை தொடர்ந்து படம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ரவி மோகன் மற்றும் யோகி பாபு இணையும் புதிய திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. விரைவில், இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகர் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
    • அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

    நடிகர் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் நடிகர் யோகி பாபு பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்குள்ள காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

     

    யோகி பாபு

    யோகி பாபு

     

    இதற்கிடையில் நடிகர் யோகி பாபு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட வந்த தகவல் காட்டு தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு ஏராளமான பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காக திரண்டு வந்தனர். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த நடிகர் யோகி பாபுவுடன் ரசிகர்கள் செல்போனில் செல்பி எடுப்பதற்காகவும், போட்டோ எடுப்பதற்காகவும் முற்றுகையிட்டனர்.

     

    சாமி தரிசனம் செய்ய வந்த யோகி பாபு

    சாமி தரிசனம் செய்ய வந்த யோகி பாபு

    இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி நடிகர் யோகி பாபு தவித்தார். உடனே அவருடன் வந்தவர்கள் பத்திரமாக மீட்டு கோவிலுக்கு வெளியே நின்ற காருக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் அந்த கார் மூலம் புறப்பட்டு சென்றார். 

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் நடிகர் யோகிபாபு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

     

    யோகி பாபு பகிர்ந்த மீம்

    யோகி பாபு பகிர்ந்த மீம்

    இந்நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று அனைவரின் கவனத்தையும் திசைத்திருப்பியுள்ளது. அவர் பகிர்ந்த மீம் ஒன்றில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது. இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் யோகி பாபு.
    • இவர் நடித்த 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    யோகி பாபு

    சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிரபல நடிகர் பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இதில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    யோகிபாபு விரைவில் கதை எழுதி திரைப்படம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் யோகி பாபு ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விசேஷ பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது.

    மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு

    மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு

     

    இந்த நிலையில் திரைப்பட நடிகர் யோகி பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் கணேஷ் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் 146 அடி உயர சாமிக்கு மலர் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகிகள் சார்பில் நடிகர் யோகி பாபுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் யோகி பாபு-ஓவியா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதலில் 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் 'பூமர் அங்கிள்' என பெயர் மாற்றப்பட்டது.


    பூமர் அங்கிள்

    அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


    பூமர் அங்கிள்

    காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 'பூமர் அங்கிள்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • நடிகர் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பழனி முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார்.
    • அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்

    திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பழனி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம் செய்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்ட அவர் அதன்பிறகு போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார்.


    யோகி பாபு

    இதையடுத்து, அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்போது, நடிகர் யோகிபாபு "கார்த்திகை திருநாளில் முருகனை தரிசனம் செய்து என் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டினேன்" என்று கூறினார்.

    கடந்த சில நாட்களாக நடிகர் யோகிபாபு மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் வேறு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் பழனி முருகன் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.

    • முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து லக்‌ஷ்மி மேனன் நடிக்கிறார். லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

     

    மலை

    மலை

     

    இந்நிலையில் மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். லக்‌ஷ்மி மேனன் மற்றும் யோகிபாபு இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் படத்தின் ஒரு சிறிய தொகுப்பை உள்ளடக்கியது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் யோகி பாபு.
    • இவர் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    விஜய் கொடுத்த கிரிக்கெட் பேட்

    இந்நிலையில், யோகி பாபுவுக்கு நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள யோகிபாபு, "இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸாக கொடுத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி" என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.



    ×