search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "younger"

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்படவே ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார்.
    • ெபரியநாயக்கன் பாளையத்தை அடுத்த கோக்கரையான் மலை பகுதிக்கு குதிரையுடன் சென்றார்.

    கவுண்டம்பாளையம்

    கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). மின்சாரவாரிய ஊழியார். இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.

    பின்னர் இவருக்கு குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீசாந்த் தனது நண்பர்களுடன் ெபரியநாயக்கன் பாளையத்தை அடுத்த கோக்கரையான் மலை பகுதிக்கு குதிரையுடன் சென்றார்.

    அங்கு குட்டையில் குதிரையை குளிக்க வைத்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தார். ஸ்ரீசாந்த் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் குதித்து ஸ்ரீசாந்தை மீட்டனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
    • முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அதிப்பட்டு வந்தார்.

    கோவை

    கோவை மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 33). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.


    இவருக்கும் காவியா (27) என்பருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காவியா தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அதிப்பட்டு வந்தார்.

    இதனால் அவருக்கு வேலையில் சரியாக கவணம் செலுத்த முடியவில்லை. இதனை நினைத்து அவர் மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.


    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை 2 மாதம் கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜிவ்காந்தி பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
    • ராஜிவ்காந்தி தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    கோவை,

    நீலகிரியை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (வயது 40). இவர் கோவை பெரியநாயக்கன ்பாளையம் அடுத்த மத்தம்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று ராஜிவ்காந்தி அளவுக்கு அதிகமாக மதுகுடித்தார். பின்னர் மத்தம்பாளையம் கருணவிநாயகர் கோவில் அருகே நடந்து வந்தார்.

    அப்போது அங்கிருந்த பாலம் அருகே வந்த போது திடீரென ராஜிவ்காந்தி தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலிசார் சம்பவ இடத்துக்க வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் அண்ணனை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40),கூலித்தொழிலாளி. இவரது தம்பி செந்தில். இருவர் குடும்பத்தினருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

    அதேபோல் நேற்றும் இருவர் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில், ரமேசை சரமாரியாக தாக்கி அவரது கழுத்தை நெரித்தார். மேலும் இதனை தடுக்க முயன்ற ரமேஷின் மனைவி குப்பம்மாளை (34) தாக்கி விட்டு செந்தில் தப்பி ஓடிவிட்டார்.

    கழுத்து நெரிக்கப்பட்டதால் ரமேஷ் ஆபத்தான நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குப்பம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து செந்திலை தேடி வருகிறார்கள்.

    ×