search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth drowned"

    • பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    ஈரோடு:

    நேபால் மாநிலம் ராவுத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாராம் ராய் (29). இவர் ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு பிராசசிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.

    வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது பஞ்சாராம் ராய் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மில்லில் வேலை பார்க்கும் நபர்களிடம் இது குறித்து கூறினார்.

    இதனை அடுத்து அனைவரும் அக்ரஹாரம் வாய்க்கால் பகுதிக்கு சென்று பஞ்சாராம்ராயை தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் ஈரோடு வைரா பாளையம் பகுதியில் வி.எம்.பி. தோட்டம் அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் பஞ்சாராம் ராய் உடல் ஒதுங்கியது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஞ்சாராம் ராய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    • 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சோதனை சாவடி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள். 

    அப்போது ஆழமான பகுதியில் வாலிபர் மூழ்கி இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் இறந்த வாலிபர் யார்? என்ன காரணத்திற்காக ஆற்றில் இறங்கினார்? என்பது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×