search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yuki Bhambri"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    நியூயார்க்:

    நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன்-பாட்ரிக் தாக் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்க ஜோடியை வென்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று நடந்தது.
    • இதில் யூகி பாம்ப்ரி-அல்பானோ ஜோடி தோல்வி அடைந்தது.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.

    இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு-கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது.

    முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என எளிதில் கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி குரோசியா ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நடைபெற்றது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நேற்று நடைபெற்றது.

    இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, ஸ்லோவோகியாவின் ஜோஸ் கோவாலிக், அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோ ஜோடியைச் சந்தித்தது.

    இந்தப் போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மார்டின், யூகோ ஹம்பர்ட் ஜோடியைச் சந்தித்தது.

    ஒரு மணி நேரம், 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது.

    யூகி பாம்ப்ரி ஜோடி பெற்ற இரண்டாவது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக், குரோசியாவின் இவான் டூடிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 3-6, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-இங்கிலாந்தின் ஜேமி முர்ரே, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • மலோர்கா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
    • யுகி பாம்ப்ரி ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கைப்பற்றிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரிஸ்:

    மலோர்கா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவின் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸ் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ் - ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில், யுகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. யுகி பாம்ப்ரி ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கைப்பற்றிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகியுள்ளனர். #DavisCup #YukiBhambri #DivijSharan
    புதுடெல்லி:

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-செர்பியா இடையிலான ஆட்டம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவின் கிரால்ஜிவோ நகரில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி மற்றும் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் இரட்டையரில் தங்கம் வென்ற திவிஜ் சரண் ஆகியோர் விலகியுள்ளனர். திவிஜ் சரண் தோள்பட்டை காயத்தாலும், அமெரிக்க ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய யுகி பாம்ப்ரி கால் முட்டி காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சகெத் மைனெனி, முதலில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் பாம்ப்ரிக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதே போல் திவிஜ் சரண் இடத்தில் தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி ஆட உள்ளார்.

    ஆனால் மாற்று ஆட்டக்காரராக இடம் பெற 21 வயதான டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகல் மறுத்து விட்டார்.

    இதையடுத்து புனேயைச் சேர்ந்த அர்ஜூன் காதே மாற்று வீரராக தேர்வாகி உள்ளார்.

    இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீயிடம் கேட்ட போது, ‘நாங்கள் சுமித் நாகலை தொடர்பு கொண்டு, பாம்ப்ரிக்கு பதிலாக அணியில் இணையும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர், சேலஞ்சர்ஸ் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதாக கூறி விட்டார். மேலும் அவர், ‘ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடுவார்கள். அதனால் நான் மாற்று வீரர் இடத்தில் தான் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான் சேலஞ்சர்ஸ் போட்டியில் ஆட முடிவு செய்துள்ளேன். ஆனால் மிகவும் அவசியம் என்று கருதினால் அணியில் சேருகிறேன்’ என்றும் கூறினார். நிபந்தனைகளின் அடிப்படையில் எந்த வீரரையும் நாங்கள் தேர்வு செய்ய முடியாது. அதனால் இந்த போட்டிக்கு உங்களது பெயரை பரிசீலிக்க மாட்டோம் என்று அவரிடம் கூறி விட்டோம்’ என்றார்.  #DavisCup #YukiBhambri #DivijSharan 
    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான யூகி பாம்ப்ரி சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி 93-வது இடத்தில் இருந்து 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 14 இடங்கள் முன்னேறி 169-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    யூகி பாம்ப்ரி பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறினாலும், சர்பிட்டோன் சேலஞ்சர் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் 30 புள்ளிகள் கிடைத்தது. இதன்மூலம் 9 இடங்கள் முன்னேறினார்.



    ராம்குமார் ராமநான் 7 இடங்கள் பின்தங்கி 128-வது இடத்திலும், சுமித் நகல் 14 இடங்கள் பின்தங்கி 234-வது இடத்திலும் உள்ளனர்.

    இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா 22-வது இடத்திலும், திவிஜ் ஷரன் 43-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 59-வது இடத்திலும், புரவ் ராஜா 77-வது இடத்திலும் உள்ளனர்.
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் தொடரில் யூகி பாம்ப்ரி - டிவிஜ் ஷரன் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #FrenchOpen
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி - டிவிஜ் ஷரன் ஜோடி புரவ் ராஜா - பேப்ரிஸ் மார்ட்டின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 5-7, 6-4 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    ரோஹன் போபண்ணா - ரோஜர் வாஸலின் ஜோடி ஏற்கனவே 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி ஸ்பெயின் ஜோடியான பென்ஜமின் போன்ஸி - கிரேகோய்ர் ஜேக் ஜோடியை எதிர்கொள்கிறது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் செரீனா, டெல்போட்ரோ வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்திய வீரர் யூகிபாம்ரி தோல்வி அடைந்து வெளியேறினார். #FrenchOpen #Serena #delPotro
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 5-ம் நிலை வீரரான டெல்போட்ரோ (அர்ஜென்டினா) முதல் சுற்றில் நிகோலசை (பிரான்ஸ்) எதிர் கொண்டார். இதில் டெல் போட்ரோ 1-6, 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் சிலிச் (குரோஷியா) 9-ம் நிலை வீரர் இஸ்னெர் (அமெரிக்கா), 6-வது இருக்கும் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    28-ம் நிலை வீராங்கணையான ‌ஷரபோவா (ரஷியா) தொடக்க ஆட்டத்தில் ஹோகன் காம்பை (நெதர்லாந்து) எதிர் கொண்டார். இதில் ‌ஷரபோவா 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் வென்றார்.

    மற்ற ஆட்டங்களில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 3-வது வரிசையில் இருக்கும் முகுருஜா (ஸ்பெயின்) கரோலின் கார்சியா (நெதர்லாந்து) ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    இந்திய வீரர் யூகிபாம்ரி தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறினார். அவர் 4-6, 4-6, 1-6 என்ற கணக்கில் பெல்ஜியத்தை சேர்ந்த ரூபன் வெமெல்மேனசிடம் தோற்றார்.



    இதேபோல் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபன்னா- வாஸ்லின் (நெதர்லாந்து) ஜோடி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது. #FrenchOpen #Serena #delPotro
    தென்கொரியாவில் நடைபெற்று வரும் புசன் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். #Yuki
    தென்கொரியாவில் புசன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது சுற்றில் இந்த தொடருக்கான 2-ம் நிலை வீரரான இந்தியாவின் யுகி பாம்ப்ரி சீனாவின் சி சாங்கை எதிர்கொண்டார். இதில் பாம்ப்ரி 4-6, 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சமர்கண்ட் சேலஞ்சரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் என் ஸ்ரீராம் பாலாஜி அட்டிலா பிளாஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் கடும் போராட்டத்திற்குப் பின் பாலாஜி 6-7, 6-7 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
    ×