என் மலர்
நீங்கள் தேடியது "Zelenskyy"
- உக்ரைனை குறிவைத்து ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. அதிபர் ஜெலன்ஸ்கி சொந்த ஊரான கிரிவ்வி ரிக் பகுதியில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரட்கெட் பிரிங், விளையாட்டு மைதானம், உணவகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல் கொடூரமானது. இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் விமர்சனம் என்பது விரும்பத்தகாத ஆச்சர்யமாக உள்ளது. எத்தகைய வலிமையான நாடு, எத்தகைய வலிமையான மக்கள். ஆனால், பலவீனமான விமர்சனம் செய்கிறது. ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தால் கூட ரஷியா என்ற பெயரை உச்சரிக்கவே பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.
- உக்ரைனை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
- ரஷிய ராணுவம் வெளியேறியதால் கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
- கெர்சன் நகரை ஆக்ரமித்தபோது ரஷிய ராணுவம் 400-க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டினார்.
கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.
அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.
இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.
இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டார். அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.
அப்போது பேசிய அவர் கெர்சன் நகரில் ரஷிய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என தெரிவித்தார்.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
- கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
கீவ்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்தப் போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கே அமைந்த பக்முத் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி பயணம் மேற்கொண்டார். அங்கு போரில் தீரத்துடன் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் அளித்து கவுரவித்தார்.
- உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
- உக்ரைனுக்கு கூடுதலாக 1.85 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 300 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வரவேற்பு கொடுத்தார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, உக்ரைனுக்கு கூடுதலாக 1.85 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்கியது.
இந்நிலையில், அமெரிக்கா பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:
நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது முதலீடு. இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு.
இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ரஷியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
- அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச், அக்டோபரில் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனில் அமைதி நிலவ உதவவேண்டும். ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி.
ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
ஏற்கனவே அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச் மற்றும் அக்டோபரில் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவில் தற்போது நடைபெற்ற வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை
- நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கேட்டுள்ளார்
உக்ரைன்- ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவிற்கு எதிராக திரும்பியது. எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.
இதனால் ரஷியாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புதின் வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷியாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷியா திரும்ப பெற வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.
இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில் ''நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என்றார்.
மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விசயம் என்று தெரிவித்துள்ளது.
- ஐ.நா. கூட்டத்தில் ரஷியா அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது
- எங்களுடைய அனைத்தையும், பார்ட்னர் நாடுகளால் கேட்கப்படுவது முக்கியம்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்களின் ஆதரவை ஜெலன்ஸ்கி நாடி வருகிறார். மேலும், ரஷியாவை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உறுதியான எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நேட்டோ படையில் சேர்ப்பதாக தெரிவித்து, அதன் மாநாட்டில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் விடப்பட்டது.
ஐ.நா. கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஐ.நா.வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை, எங்குடைய அனைத்து வார்த்தைகள், அனைத்து மெசேஜ்கள் என அனைத்தையும் எங்களுடைய பார்ட்னர்களால் கேட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இன்னும் ஐ.நா. அவையில் ரஷியா உறுப்பினர்கள் இருந்தால் அது பரிதாபத்திற்குரியது. ஆனால், இருக்கிறார்கள். ரஷிய பயங்கரவாதிகளுக்காக இங்கே இடம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கானது அல்ல. ஐ.நா. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
- கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
- உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான்.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ரஷியா மீதான தடையால் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிசக்தி வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் மாற்று வழியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை தானியங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளாக திகழ்கிறது. தற்போது ரஷியா கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை என்ன?. அவர்களுக்கு உக்ரைனுக்கு எதிராக வெறுப்பு கற்றுக் கொடுக்கப்படும். இது இனப்படுகொலை என்பது தெளிவாகத் தெரிகிறது.
சர்வதேச கிரிமினல் கோர்ட், கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
- அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்த நிலையில், கனடா செல்கிறார்
- மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் வகையில் இந்த பயணம் பார்க்கப்படுகிறது
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார்.
இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. கனடா அதிபர் ட்ரூடோ, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷியா மீது குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பின் தற்போது முதன்முறையாக ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். இதற்கு முன்னதாக வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
- இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படுகிறது.
- அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரமாகவே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.
ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களைக் கட்டமைக்க உள்ளது என இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும், குடிமக்களின் நன்மைக்காகவும் என தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின்மீது இரவோடு இரவாக இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தளத்தில் ராணுவ வீரர்கள், ஈரான் ஆதரவு பெற்ற துணைராணுவப் படையினர் தங்கி உள்ளனர். இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில் இது 3-வது உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
இதனால் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
- மின்சார உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
- இன்று 8 ஏவுகணை மற்றும் 13 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா பார்வை உள்ளது.
அந்த நகர் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இடைவிடாமல் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின்சார உற்பத்தி திறனை இழந்துள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.