என் மலர்
நீங்கள் தேடியது "அடக்கம்"
- காவிரி ஆற்றில் இறந்த அடையாளம் தெரியாத பெண்
- பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அடக்கம்
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை அருகே உள்ள காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தது.
வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை அந்த பெண்ணின் பிரேதத்திற்கான உறவினர்கள் யாரும் வராததால் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் . இதை தொடர்ந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையில் ஏட்டு சரவணராஜா ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்
- பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாத குழந்தை உடலை பொது நல சேவகர்கள் அடக்கம் செய்தனர்
- விபத்தில் சிக்கிய தம்பதி மருத்துவமனையில் கவலைக்கிடம்
பெரம்பலூர்,
சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 34) - பத்மா (32) தம்பதி. இவர்களின் குழந்தைகள் தஷ்வந்த் (4) தீக்சித் (85 நாள் குழந்தை) இந்நிலையில் கணேசன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் காரில் திருப்பரங்குனறம் கோயிலிலுக்கு சென்று விட்டு கடந்த 10-ந்தேதி சென்னை திரும்பிக் கொண்டி ருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் அருகே சென்ற போது கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணேசன், பத்மா உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். உறவி னர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெறுகின்றனர்.கணேசன், பத்மா திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் விபத்தில் காயமடைந்த 85 நாள் குழந்தை தீக்சித் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண் செல்லும் வழியிலேயே உயிரி ழந்தது.பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனையில் கவலைக்கி டமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் குழந்தை யின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 2 நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் குழந்தையின் உடலை பெரம்பலூரிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.இது குறித்து அறிந்த உதிரம் நண்பர்கள் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் குழந்தையின் உடலை தங்களது சொந்த செலவில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். மனிதநே யமிக்க இந்த செயலுக்கு குழந்தை யின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
- 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது
- இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது.
நாகர்கோவில்:
இரணியல் அருகே உள்ள தாந்தவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 46), தொழிலாளி. இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38). இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகவில்லை.
வாடகை வீட்டில் வசித்து வந்த 3 பேரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய வந்த பிறகே அவர்களது சாவு பற்றிய விவரம் தெரியவந்தது. குளச்சல் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்திய போது 3 பேரும் தற்கொலை செய்திருப்பதும், இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பாபு மற்றும் அவருடைய சகோத ரிகளுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை போலீசாரால் விசாரிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடல்களை பெற்றுச் செல்ல உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் அந்த உடல்கள் அடக்கத்துக்காக பிணவறையில் காத்திருக்கின்றன. உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராதபட்சத்தில் போலீஸ் சார்பில் 3 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. தங்களது சொந்த செலவில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த தொண்டு நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால் தற்போது வரை போலீஸ் சார்பில் அடக்கம் செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- தற்கொலை செய்துகொண்ட வாலிபர் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி நடைபெற்றது
- சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அகலங்காநல்லூரை சேர்ந்தவர் மோகன் என்ற கந்தசாமி, விவசாயி. இவரது மகன் அஜித் (வயது 25). இவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் அரளி விதையை அரைத்து குடித்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.இந்நிலையில் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடியில் உள்ள தனது உறவினரான சசிகலா என்பவரது வீட்டிற்கு அஜித் நேற்று முன் தினம் வந்திருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அஜித்தின் உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால், சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்படி, சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அஜித் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? உறவினர் வீட்டிற்கு வந்து அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது
- கடம்பர் கோயிலில் அன்னதான உணவை உண்டு வாழ்ந்தவர்
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர்கோவில் முன் பகுதியில், 10க்கும் மேற்பட்ட முதியவர்கள், கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் உணவை வாங்கி உட் கொண்டுவிட்டு, கோவில் அருகில் திறந்த வெளி மண்டபத்தில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த திறந்த வெளி அரங்கத்தில், அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். பொது மக்கள் கொடுத்த தகவலின் படி, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, போலீசார், மற்றும் கிராம உதவியாளர்கள் குமரேசன், ரத்தினசாமி, நகராட்சி சுகாதார பணியாளர்கள் முதியவரின் உடலை மீட்டு காவிரி ஆற்று படுகையில் அடக்கம் செய்தனர்.
- குமரி கலெக்டர் - போலீஸ் சூப்பிரண்டு உறுதிமொழியை ஏற்றனர்
- திராவகம் கலந்த குளிர்பானம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தீவிரம்
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் நுள்ளிக் காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகன் அஸ்வின் (வயது 10) ஆகியோர் இங்கு வசித்து வந்தனர்.
அதங்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த அஸ்வின், கடந்த 24-ந் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அவனை பரிசோதித்த டாக்டர்கள், திராவகம் கலந்த ஏதோ ஓன்றை குடித்ததால் தான் அஸ்வினுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக அஸ்வினிடம் கேட்ட போது, பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, பள்ளிச் சீருடை அணிந்து வந்த ஓருவர் குளிர்பானம் கொடுத்ததாக கூறினான். அதனை கொடுத்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 17-ந் தேதி அஸ்வின் பரிதாபமாக இறந்தான்.
இதனைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஓப்படைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர். குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த வரை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாணவன் அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து, உடலை பெற்றுக் கொள்ள அஸ்வினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு 6 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை அஸ்வின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, மெதுகும்மல் பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குக்கு பிறகு அஸ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.