என் மலர்
நீங்கள் தேடியது "இரணியல்"
- மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:
இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் இளையராஜா என்ற கணேஷ் ராஜா. இவர் நேற்று மதியம் கட்டிமாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் அவருக்கு பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நின்றார்.
வாக்குச்சாவடிக்குள் சென்றதும் கணேஷ் ராஜா வாக்கு சீட்டை சரிபார்த்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அவர் மின்னணு எந்திரத்தில் வாக்களித்து திரும்பும் போது, அரவிந்தும் அங்கு வந்தார். அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கினை செலுத்துவதற்குள் அங்கு நின்றிருந்த கணேஷ் ராஜா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பட்டனை அழுத்தி விட்டாராம். பீப் சவுண்ட் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் இது குறித்து வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதற்குள் கணேஷ் ராஜா அங்கிருந்து நைசாக வெளியேறி விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் ராஜா மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிகள் வலியுறுத்தல்
- புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
நாகர்கோவில், நவ.18-
நெல்லையில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரெயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக 5 ஆண்டு கள் கழித்து 2017-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் முதல் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப் பட்டது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் குறைந்த பட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. இரணியல் ரெயில் நிலை யத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் ரெயில் நிலையமும், மறு மார்க்கம் 15 கி.மீ. தொலைவில் குழித்துறை ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.
இந்த காலகட்டங்களில் குமரி மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் இந்த நிறுத்தம் ரெயில்வே அதிகாரிகளால் அனு மதிக்கப்படவில்லை. திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் அறிவித்து இயக்கும் போது இந்த ரெயில் இயங்கும் 456 கி.மீ. தூரத்தில் திருச்சி முதல் மதுரை வரை உள்ள 156 கி.மீ. மட்டுமே எந்த வித கிராசிங் இல்லாமல் இயங்கும் இருவழிப்பாதை யாக இருந்து வந்தது. மீதமுள்ள மதுரை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள 300 கி.மீ. தூரம் ஒரு வழிபாதையாக இருந்த காரணத்தால் கிரா சிங்குக்காக வேண்டி அதிக அளவில் இந்த ரெயில் பல்வேறு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நிறுத்தம் அனுமதி கொடுத்தால் இந்த ரெயில் சூப்பர் பாஸ்ட் என்ற அந்தஸ்தை இழந்து விடும் என்ற காரணத்துக்காக ரெயில்வே துறை மறுத்து வந்தது.
தற்போது நிலமை மாற்றம் பெற்று மதுரை முதல் நாகர்கோவில் வரை இருவழிபாதை பணிகள் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள பகுதி கள் இந்த 2 மாதத்திற்குள் முடிவு பெற்றுவிடும். மீத முள்ள பணிகளும் முடிவு பெற்றுவிட்டால் திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வரும் வரை மறுமார்க்கமாக வரும் எந்த ஒரு ரெயிலுக்கும் கிராசிங் வேண்டி நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று கல்குளம் தாலுகாவை சேர்ந்த பயணி கள் கோரிக்கை விடுக்கின்ற னர். கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகையால் அடுத்த ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவை பார்க்க கூடாது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் 3 பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரெயில்வேத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணி கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
- 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரணியல்:
இரணியல் அருகே வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாலமான மழைநீர் ஓடை கட்டப்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
இந்த நிலையில் வில்லுக்குறி சந்திப்பில் சுமார் 4 அடி நீளம், 4 அடி உயரம் என கட்டப்பட்ட மழைநீர் ஓடை உள்ளது. ஆனால் இந்த ஓடை தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் வெறும் 1 அடி விட்டம் என தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனாலேயே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் கேபிள்கள், குடிநீர் குழாய்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என ஆக்கிரமித்து உள்ள இந்த சிறிய இடைவெளி வழியாகவே சிறுவன் ஆஷிக் அதிர்ஷ்டவசமாக வெளியேறி இருக்கிறான். இந்த மூலையில் சுருங்கிபோய் கிடக்கும் தில்லாலங்கடி மழைநீர் ஓடையை சிலர் சமூக வலைதளத்தில் படம் பிடித்து பரப்பி உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
- இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார்.
- பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இரணியல்:
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). நடிகர் விக்ரம் ரசிகர்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர். இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார். பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வில்லுக்குறி தாண்டி தோட்டியோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.
- பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்
- இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும்
நாகர்கோவில் : திங்கள்நகரில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும். காலாண்டு தேர்வு மற்றும் தொடர் மழை விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறந்தது. வழக்கம்போல மாலை பள்ளியை மூடிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அலுவலக ஊழி யர்கள் பள்ளியை திறக்க வந்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியை லில்லிபாய் தலைமை ஆசிரியர் அறை கதவு பூட்டு உடைந்த நிலையில் அருகில் ஒரு கடப்பாரை கம்பியும் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பைல்கள், ஆவணங்கள் சிதறிய நிலையில் கிடந்தது. மேலும் பள்ளி அறை சாவி கொத்தையும் மர்ம நபர்கள் மேசையில் எடுத்து வைத்திருந்தனர். இதுகுறித்து லில்லிபாய் தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியை எமிலியா ஜெசி ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியை விடுப்பில் இருப்பதால் இதுகுறித்து எமிலியா ஜெசி இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் இன்ஸ் பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன் நேரில் சென்று ஆசிரியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். போலீஸ் விசாரணையில் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆரை மர்ம நபர்கள் திருடிச் சென்றி ருந்தது தெரிய வந்தது.
பீரோவில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லாத தால் மர்ம நபர்கள் ஏமாற்றத் துடன் சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி, செருப்பங்கோடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே விவசாய தோட்டமான தென்னந் தோப்பில் தனியார் நிறுவனம் டவர் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. டவர் அமைக்கும் பணியை அரசு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
- அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
- இரணியல் போலீசார் தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேனகா (வயது 39).
இவரது கணவர் ஜோஸ்லின் பாபு,கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு 12 வயது மகளுடன் வசித்து வந்த மேனகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு 2 குழந்தைகளுடன் மேனகா குருந்தன் கோட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று குருந்தன்கோடு வந்த ஜெய பால், ஆலயத்திற்கு சென்று வந்த மேனகா மற்றும் குழந்தைகளை குருந்தன் கோடு கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்துள்ளார்.
மேலும் மகனை தன்னு டன் அனுப்ப கூறி தகராறு செய்து உள்ளார். ஆனால் மகனை கொடுக்க மேனகா மறுத்தார். இதனால் ஆத்தி ரம் அடைந்த ஜெயபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேனகாவை வெட்டினார்.
இதில் மேனகாவுக்கு கழுத்து, நாடி, முதுகு, விரல் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது 12 வயது மகள் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஜெயபால் தப்பி ஓடி விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மேனகா மற்றும் அவரது மகளைஅங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்து வர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மேனகாவின் உறவுப் பெண் சிஜி (27) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.
- கால்வாயில் நீர் கசிவு உள்ளது
- விரிவாக்க பணிக்காக கிளை கால்வாய் பாலம் ஒரு ஆண்டுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
இரணியல் ரெயில் நிலையம் அருகில் நெய்யூர் -பரம்பை பகுதியில் விரிவாக்க பணிக்காக கிளை கால்வாய் பாலம் ஒரு ஆண்டுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து தண்ட வாளத்தின் குறுக்கே தொட்டி போன்று கட்டி கால்வாய் பாலம் சீரமைப்பு செய்யப்பட்டு தண்ணீர் விட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கால்வாயில் நீர் கசிவும் கால்வாய் தொட்டி போன்று இருப்பதால் தண்ணீர் வால் முனை கடை வரம்பு வரை செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா , பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நேரில் வந்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
ஆய்வின் போது இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஜான்சவுந்தர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், நெய்யூர் பேரூ ராட்சி தலைவர் பிரதீபா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாவட்ட விவசாய காங்கிரஸ் துணைத் தலைவர் ஜேக்கப் அருள் பால், குளச்சல் சட்ட மன்ற தொகுதி தலைவர் ஜேக்கப் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
- போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறி குளுமைக்காடை பகுதியை சேர்ந்தவர் எஸ்தாக் (வயது 58), கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் குடிபோதையில் எஸ்தாக் வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு தூங்க சென்றார். நேற்று காலை அவரது மனைவி எஸ்தாக்கை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் உள்ள டாக்டர்கள் எஸ்தாக்கை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து எஸ்தாக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக எஸ்தாக் மகள் சுஜி (27) கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- இரணியல் போலீசார் திங்கள் நகர் பெரிய பள்ளி அருகே ரோந்து.
- மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
இரணியல் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் திங்கள் நகர் பெரிய பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனை யடுத்து கஞ்சா வைத்திருந்த அஜய், ஜெரின்ஜோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததனால் மனவேதனை
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள பேயன்குழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சாந்தி கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாந்தியின் தாயார் ராமலட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்சா மிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.