என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல்"

    • காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது.
    • அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.

    இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதனால் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், தற்காலிக கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

    இந்நிலையில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, காசாவில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது.

    அவ்வாறு போரிட்டால்தான், இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது. போரைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த 2023, அக்டோபர் 7 இல் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை இறந்தனர்.

    200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பலர் இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் வைத்து கொல்லப்பட்டனர்.

    கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நீடித்த போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இதற்கிடையே மீதமிருக்கும் அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.

    இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (25) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடந்த புதன்கிழமை வடக்கு காசாவில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.

    "நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்" என ஃபாத்திமா ஒருமுறை இணையத்தில் பதிவிட்டதை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். 

    • கைகள் துண்டிக்கப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தபோது, அவன் தாயிடம் சொன்ன முதல் வாக்கியம், 'நான் உன்னை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?' என்பதுதான்.
    • 9 வயது மஹ்மூத் அஜ்ஜோர் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

    பாலஸ்தீன நகரமான காசாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் 51,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா தெரிவிக்கிறது. காயமடைந்த லட்சக்கணக்கானவர்களிலும் குழந்தைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் புகைப்படம் World Press Photo 2025 ஆக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

    கத்தாரை தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூஃப், நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக எடுத்த இந்தப் புகைப்படத்தில், 9 வயது மஹ்மூத் அஜ்ஜோர் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த 59,320 புகைப்படங்களில் இருந்து மதிப்புமிக்க 68வது World Press Photo போட்டியின் வெற்றியாளராக மர் அபு எலூஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இடது - சமர் அபு எலூஃப், வலது - மஹ்மூத் அஜ்ஜோர்

     

    World Press Photo அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அபு எலூஃப் கூறுவதாவது, "மஹ்மூத்தின் தாயார் எனக்கு விளக்கிய மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. மஹ்மூத் தனது கைகள் துண்டிக்கப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தபோது, அவன் அவளிடம் சொன்ன முதல் வாக்கியம், 'நான் உன்னை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?' என்பதுதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    "இது சத்தமாகப் பேசும் ஒரு அமைதியான புகைப்படம். இது ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது, ஆனால் தலைமுறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பரந்த போரின் கதையையும் சொல்கிறது," என்று World Press Photo நிர்வாக இயக்குனர் ஜூமனா எல் ஜெய்ன் கௌரி கூறுகிறார்.

    மார்ச் 2024 இல் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மஹ்மூத்தின் ஒரு கை துண்டிக்கப்பட்டது. மறு கை சிதைந்தது என World Press Photo அமைப்பு அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. 

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.
    • கடந்த 50 நாட்களாக காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முற்றாக நிறுத்தி வைத்துள்ளது.

    இஸ்ரயேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.

    தெற்கு நகரமான கான் யூனுஸ் பகுதியில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்தவர்கள் கூடாரத்துக்குள் உயிருடன் எரிந்து பலியானதாக உடல்களைப் பெற்ற மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    காசாவில் இதுவரை இஸ்ரேலிய தாக்குதலால் 51,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 50 நாட்களாக காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முற்றாக நிறுத்தி வைத்துள்ளது.

    • பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகின்றனர்.
    • பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாலத்தீவு நடவடிக்கை

    சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு. பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகின்றனர்.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாலத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    வங்காளதேசம், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    வடக்கு காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-அஹ்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து உருக்குலைந்தது.

    • 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
    • குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது.

    இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் காசாவுக்குள் வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது.

    மார்ச் 2 முதல், எந்த மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் வாகனங்களும் காசாவிற்குள் நுழையவில்லை.  23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. 21 ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையை சீர்குலைத்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

    உலக உணவுத் திட்ட அமைப்பு, மூன்று வாரங்களுக்கும் மேலாக காசாவிற்கு புதிய பொருட்களை கொண்டு வர முடியவில்லை என்று கூறியுள்ளது. காசாவில் தற்போதுள்ள இருப்புக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருக்கும், இதனால் லட்சக்கணக்கானோர் கடுமையான பசியின் அபாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், காசாவின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தடுப்பூசிகளும் மறுக்கப்படுகின்றன. இது சுகாதார நெருக்கடியை மோசமாக்குகிறது. UNRWA செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமா கூற்றுப்படி, "குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது."

    மற்றொரு அடியாக, இஸ்ரேலின் மெகோரோட் நிறுவனம் காசாவின் 70% நீர் விநியோகத்தை துண்டித்தது. மீண்டும் நீர் வழங்கப்படாவிட்டால் ஒரு பேரழிவு தரும் நீர் நெருக்கடி ஏற்படும் என்று காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.

     இதற்கு மத்தியில் இஸ்ரேலின் கொடிய வான்வழித் தாக்குதல்களால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குழந்தைகள் மீது எதிர்மறையான அதீத அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. 

    • காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியுள்ளது.
    • இஸ்ரேல் வான்தாக்குதலால் காசாவில் வாழும் மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர்.

    இஸ்ரேல்- காசா இடையிலான 7 வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. தங்கள் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியை அதிகரிப்பதற்காக தற்போது தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் ஹமாஸ் பதுங்கியுள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பினர் மீது குற்றம்சாட்டியுள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் காசாவில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து நடத்திய தாக்குதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.

    • காசா உடனான எல்லையில் பாதுகாப்பு பகுதிகளை அதிகரிக்க இஸ்ரேல் திட்டம்.
    • கடந்த சில நாட்களாக தனது தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடைபெற்று கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அதாவது அவர் பதவி ஏற்பதற்கு முந்தைய தினம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 7 வார போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அப்போது மனிதாபிமான பொருட்கள் காசா முனைக்கு கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது. அத்துடன் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

    7 வாரம் முடிவடைந்த பின்னர் போர் நிறுத்தம் நீட்டிப்பிற்கான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது மீண்டும் தாக்குதலை நடத்த தொடங்கியது, நடத்தியது. ஹமாஸ் அமைப்பினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள பகுதிகளை அதிக அளவில பிடிக்க முடிவு செய்தது.

    இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்கு முனையில் அதிகமான இடங்களை பிடித்து, பாதுகாப்பு பகுதியாக ஏற்படுத்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அந்தவகையில் தற்போது 50 சதவீத பகுதிகளை பிடித்துள்ளதாக உரிமைக் குழுக்களும், இஸ்ரேல் ராணுவமும் தெரிவித்துள்ளன. இதில் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் வாழ்வதற்கும், விவசாயத்திற்கும், கட்டமைப்பிற்கும் பயன்படுத்த முடியாதவை எனக் கூறப்படுகிறது.

    காசாவின் தெற்கு பகுதியில் இருந்தை வடக்குப் பகுதியை துண்டித்தால் அது இஸ்ரேல் நாட்டின் நீண்ட கால பாதுகாப்பிற்கு உதவும் என இஸ்ரேல் நினைபதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • காசாவில் நேற்று கொல்லப்பட்டவர்களில் 5 குழந்தைகள், 12 பெண்கள் அடங்குவர்.
    • மத்திய காசாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும் காசா முழுவதும் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடம் தற்காலிக கூடாரங்கள் மீது அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன.

     

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பகுதிகள் மீது காசாவிலிருந்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

    கடலோர இஸ்ரேலிய நகரமான அஷ்டோட்டை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. ராக்கெட் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே மத்திய காசாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ள நிலையில் மறுபுறம் காசாவில் பெண்கள், குழந்தைகள் தங்கியிருக்கும் தற்காலிக தங்குமிடங்கள் குறிவைக்கபடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

    • ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
    • டி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் 23 ஆம் தேதி காசாவில் உள்ள ராஃபா நகரத்தில் ஆம்புலன்களில் சென்றுகொண்டிருந்த உதவுக்குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 8 பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.

    அவர்கள் உதவிக்குழுவைச் சேர்த்தவர்கள் என்று தெரிந்தே இஸ்ரேல் வேண்டுமென்றே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இந்நிலையில் அன்றைய தினம் நடந்த தாக்குதல் தொடர்பான, உயிரிழந்த உதவிக்குழுவில் இருந்த பாலஸ்தீனிய ஊழியர் ஒருவரின் செல்போனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

    நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஊழியர்கள் பயணம் செய்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் எரிந்த நிலையில் இருப்பதும், இஸ்ரேலிய ராணுவத்தினர் வாகனங்களை நோக்கியும் உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பதிவாகி உள்ளது.

    இதன்படி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த காணொளி குறித்து இஸ்ரேல் இன்னும் எனது விளக்கமும் அளிக்கவில்லை. 

    • அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
    • பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.

    இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.

    மைக்ரோசாப்ட் AI இன் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலேமான் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊழியர் "முஸ்தபா, உங்களுக்கு வெட்கமாக இல்லையா" என்று கூச்சலிட்டார்.

    அப்போது மற்றொரு ஊழியர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அவர்களே, "உங்களுக்கு வெட்கமாக இல்லையா.. நீங்கள் அனைவரும் நயவஞ்சகர்கள்" என்று கூச்சலிட்டார்.

    காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியபோது இலக்குகளை குறிவைத்து தாக்க மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    ×