என் மலர்
நீங்கள் தேடியது "ஒன்பிளஸ்"
- விலை குறைப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- தற்போது ரூ. 35 ஆயிரத்து 999-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக குறைந்துள்ளது. அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறும் பிளாக் ஃபிரைடே சேலில் தான் இந்த விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் ஒன்பிளஸ் 12R மட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலை குறைப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 35 ஆயிரத்து 999-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் பட்சத்தில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என மாறிவிடும்.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 6.78 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே, 5500 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ஒப்போ நிறுவனம் மிட் ரேஞ்ச் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிளாக்ஷிப் ரக அனுபவத்தை கொடுக்கும் நோக்கில், சற்றே குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த பிரிவில் ஒப்போ நிறுவனம் K13 ப்ரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 13R மற்றும் ரியல்மி GT நியோ 7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
முந்தைய ஒப்போ K12 சீரிஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய K13 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதே பிரிவில் உருவாகும் மற்றொரு ஸ்மார்ட்போனில் ஒப்போ நிறுவனம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஒப்போ K13 ப்ரோ ஸ்மார்ட்போன் 6500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது அதிவேக வயர்லெஸ் மற்றும் வயர்டு சார்ஜிங் வசசதியுடன் வரும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ K12 ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹேசில்பிலாடு பிரான்டு கேமராக்களே வழங்கப்படுகின்றன.
- இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13 இன் வெளியீட்டு தேதி மற்றும் அதன் வடிவமைப்பு, வண்ணங்கள் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 வருகிற 31-ந்தேதி அன்று சீனாவில் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அதற்கு முந்தைய ஒன்பிளஸ் 12 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13: வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்கள்
ஒன்பிளஸ் 13 மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளே, பின்புறம் வட்ட வடிவ கேமரா மாட்யுல் உடன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களைப் போல் இல்லாமல், புதிய ஸ்மார்ட்போனில் வட்ட வடிவம் கொண்ட கேமரா ஐலேண்ட் தனியாக இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று லென்ஸ்கள், சதுரங்க வடிவத்தால் ஆன எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹேசில்பிலாடு பிரான்டு கேமராக்களே வழங்கப்படுகின்றன. இதை குறிக்கும் பிரான்டிங் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இடம்பெற்று இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை டான், அப்சிடியன் பிளாக் மற்றும் ப்ளூ மொமென்ட் ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் 13 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட முதல் சாதனங்களில் ஒன்றாக இருக்கும். இந்த புதிய சிப், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 100 வாட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 13 மாடலில் சோனியின் 50MP LYT-808 சென்சார், f/1.6 பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 3x ஆப்டிகல் ஜூம் வசதி, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
- நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது.
- இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நார்டு சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டூயல் கனெக்ஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் கூகுள் ஃபாஸ்ட் பேர், 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர், பாஸ்வேவ் 2.0 போன்ற வசதிகள் உள்ளன. பெபிள் வடிவம் கொண்டுள்ள புதிய இயர்பட்ஸ் செவ்வக வடிவிலான கேஸ் மற்றும் கிளாஸி ஃபினிஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் டச் கண்ட்ரோல் வசதி, IP55 தர சான்று வழங்கப்பட்டு உள்ளது.
நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது. குறைந்த எடை காரணமாக இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 43 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. ANC பயன்படுத்தாத போது, இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
இதில் உள்ள ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் (கேஸ்+ ANC ஆஃப்) பயன்படுத்தலாம். புதிய நார்டு பட்ஸ் 3 மாடல் டியுவி ரெயின்லாந்து பேட்டரி ஹெல்த் சான்று பெற்ற உலகின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும்.
புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 3 மாடல் ஹார்மோனிக் கிரே மற்றும் மெலோடிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ் வலைதளம், செயலி மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற உள்ளது. விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.
- புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.
- இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய இயர்பட்ஸ்- நார்டு பட்ஸ் 3 மாடல் இந்த மாதம் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் விவரங்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு வந்தன. தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் 32db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பேஸ்வேஸ் 2.0 தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த இயர்பட்ஸ் வாட்டர் டிராப் வடிவ ஸ்டெம் கொண்டிருக்கும் என்றும் இவை மிக குறைந்த எடை மற்றும் மென்மையான வளைவுகளை கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
முன்னதாக நார்ட் பட்ஸ் 3 ப்ரோ மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் ஓவல் வடிவ கேஸ், அதன் முன்புறம் ஒன்பிளஸ் லோகோ மற்றும் எல்இடி லைட் இடம்பெற்று இருக்கிறது.
புதிய நார்ட் பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டைனமிக் டிரைவர்கள், பேஸ் வேவ் 2.0, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் இருவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு 4 என அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 4 மாடலில் 6.74 இன்ச் curved AMOLED ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் மற்றும் ப்ரோ XDR வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14 உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுறம் அலெர்ட் ஸ்லைடர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 28 நிமிடங்களில் முழு சார்ஜ் ஏற்றிவிடும்.
ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் மெர்குரியல் சில்வர், அப்சிடியன் மிட்நைட் மற்றும் ஓயாசிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சி இத்தாலியில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில்- நார்டு 4, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் வாட்ச் 2R மற்றும் நார்டு பட்ஸ் 3 ப்ரோ என மொத்தம் நான்கு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதில் ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் வித்தியாசமான டிசைன் கொன்ட ஒன்பிளஸ் ஏஸ் 3V மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஒன்பிளஸ் பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் ப்ரோ மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி மாடலில் மெட்டல் யுனிபாடி டிசைன் வழங்கப்படுகிறது. பட்ஸ் 3 ப்ரோ மாடல் பட்ஜெட் பிரிவில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் 2R மாடல் குறைந்த எடை மற்றும் வயர் ஓ.எஸ். கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் அதன் சர்வதேச அறிமுகத்தின் போதே, இந்திய சந்தையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல்.
- 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் நடத்தும் நிகழ்ச்சியில் தனது புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் அடங்கிய படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
புதிய புகைப்படத்தின் படி ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிலஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், 6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, அலர்ட் ஸ்லைடர் மற்றும் 5500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.
- சீனாவில் ஏஸ் 3வி பெயரில் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாக வாய்ப்பு.
சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பிளஸ் நோர்டு 3 (OnePlus Nord 3) போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்டு 4 (OnePlus Nord 4) செல்போனை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு விலை 31,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேசன் 3 SoC பிராசசர் கொண்டதாகவும், 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.
இந்த போன் உடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஆகியவையும் வெளியாக வாய்ப்புள்ளது.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் ஒன்பிளஸ் ஏஸ் 3வி பெயரில் செல்போன் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 மெகாபிக்சல் பிரைமரி சென்சாருடன் டுயல் ரியர் கேமரா செட்டப் கொண்டதாகவும், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டதாகவும் இருக்கும்.
- இந்திய சந்தையில் ஜூன் 27-ந்தேதி முதல் அமேசான் இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- 8GP ரேம், 128GP ஸ்டோரேஜ், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட் போன்களை வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ் செல்போன் தயாரிப்பு நிறுவனம் நார்ட் சிஇ 4 லைட் 5ஜி (Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ஜூன் 27-ந்தேதி முதல் அமேசான் இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜியின் குறைந்த விலை போன் இதுவாகும். 80வாட் சூப்பர்வூக் (SUPERVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி வசதி கொண்டது.
8GP ரேம், 128GP ஸ்டோரேஜ், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட் போன்களை வெளியிட்டுள்ளது.
8GP ரேம், 128GP ஸ்டோரேஜ் போன் 19,999 ரூபாய்க்கும், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் போன் 22,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மெகா ப்ளூ, சூப்பர் சில்வர், அல்ட்ரா ஆரஞ்ச் (இந்தியா மட்டும்) ஆகிய கலர்களில் வெளியாக உள்ளது.
அமேசான் இணையதளத்தில் ஜூன் 27-ந்தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ஆயிரம் ரூபாய் வரை வங்கி தள்ளுபடியுடன் 3 மாதம் no-cost EMI வசதியுடன் வழங்குகிறது.
- இரண்டு பேட்டரிகள் கொண்டதாக இருக்கும் எனத் தகவல் கசிந்துள்ளது.
- இதற்கு முன்னதாக 6000 mAh பேட்டரியுடன்தான் ஸ்மார்ட்போன்கள் வெளி வந்துள்ளன.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் 6100mAh திறன் கொண்ட பேட்டரியுடன் புதிய வகை போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்மூலம் 6100mAh பேட்டரியுடன் அறிமுகம் ஆகும் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமைய பெறப் போகிறது.
சாம்சங், இன்பினிக்ஸ், மோட்டோரோலா, விவோ பொன்ற நிறுவனங்கள் 6000mAh திறன் கொண்டு பேட்டரியுடன் கூடிய செல்போன்களைதான் வெளியிட்டுள்ளது.
OnePlus Ace 3 Pro பெயருடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான OnePlus Ace 2 Pro-வை காட்டிலும் 10 சதம் பெரிய பேட்டரியாகும். 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் இருக்கும். இரண்டு 2,970mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு பேட்டரிகள் சேர்ந்து 6,100mAh கொண்டதாக இருக்கும்.
Qualcomm Snapdragon 8 Gen 3 processor கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் OnePlus 13R பெயரிடும் வெளியிடலாம் எனத் தெரிகிறது. இது அனைத்தும் தகவலாக வெளிவந்துள்ளது. செல்போன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
- மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனிற்கு இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் பிரிவில் R சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஒன்பிளஸ் 11R. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனிற்கு இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.
இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, முதல் முறை அமேசான் பே ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டு பயன்படுத்துவோருக்கு அறிமுக சலுகை, கனரா வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.