search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    6100mAh பேட்டரியுடன் புதிய பவர்புல் ஸ்மார்ட்போனை அறிமுக செய்ய இருக்கும் ஒன்பிளஸ்
    X

    6100mAh பேட்டரியுடன் புதிய பவர்புல் ஸ்மார்ட்போனை அறிமுக செய்ய இருக்கும் ஒன்பிளஸ்

    • இரண்டு பேட்டரிகள் கொண்டதாக இருக்கும் எனத் தகவல் கசிந்துள்ளது.
    • இதற்கு முன்னதாக 6000 mAh பேட்டரியுடன்தான் ஸ்மார்ட்போன்கள் வெளி வந்துள்ளன.

    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் 6100mAh திறன் கொண்ட பேட்டரியுடன் புதிய வகை போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்மூலம் 6100mAh பேட்டரியுடன் அறிமுகம் ஆகும் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமைய பெறப் போகிறது.

    சாம்சங், இன்பினிக்ஸ், மோட்டோரோலா, விவோ பொன்ற நிறுவனங்கள் 6000mAh திறன் கொண்டு பேட்டரியுடன் கூடிய செல்போன்களைதான் வெளியிட்டுள்ளது.

    OnePlus Ace 3 Pro பெயருடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான OnePlus Ace 2 Pro-வை காட்டிலும் 10 சதம் பெரிய பேட்டரியாகும். 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் இருக்கும். இரண்டு 2,970mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு பேட்டரிகள் சேர்ந்து 6,100mAh கொண்டதாக இருக்கும்.

    Qualcomm Snapdragon 8 Gen 3 processor கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் OnePlus 13R பெயரிடும் வெளியிடலாம் எனத் தெரிகிறது. இது அனைத்தும் தகவலாக வெளிவந்துள்ளது. செல்போன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×