search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீவ்"

    • தலைநகர் கீவில் உள்ள நகர் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்.
    • வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள நகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் நீண்டு கொண்டே இருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவம், அதற்கு உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் உக்ரைன் டிரோன்கள் ரஷியாவை தாக்கியது. இதனால் வான் பாதுகாப்பு சிஸ்டம் மூலம் டிரோன் தாக்குதலை முறியடித்தது. அப்போதுதான் தவறுதலாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் காலை வரை தொடர்ந்து உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஷியா ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கீவ் நகரில் ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இரண்டு மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது என உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளது.

    தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கிய் மாவட்டத்தில் காலை 8 மணிக்கு ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மற்றொரு ஏவுகணை தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் விழுந்ததை உக்ரைன வீரர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள ஷோஸ்ட்கா நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டங்கள், கல்வி வசதி பெறும் நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளன என சுமி மேயர் தெரிவித்துள்ளார்.

    இதைத் தவிர மற்ற பல இடங்களிலும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டுள்ளது என விமானப்படை தெரிவித்துள்ளது.

    • உக்கரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமுமின்றி தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனும், மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்திக்க சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அங்கு உரையாற்றுகையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    மேலும் ரஷ்ய படை திட்டமிட்டபடி உக்ரைனுக்குள் தொடந்து முன்னேறி வருவதாகவும், கார்கிவை கைப்பற்றுவது தங்களின் நோக்கமில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை ( BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    மேற்கு நாடுகளின் ஒன்றிணைந்த நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேரும் பட்சத்தில் உக்ரைன் வழியாக எளிதில் ரஷ்யாவுக்குள் நேட்டோ படைகள் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த போர் நடந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளுக்குமாக BUFFER ZONE உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    முன்னதாக சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ×