என் மலர்
நீங்கள் தேடியது "குற்றாலம்"
- அருவி கரை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்
தென்காசி:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். அப்போது அங்கு குளிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.
அமைச்சர் ஆய்வு
இந்நிலையில் குற்றால பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவல ர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுகள் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவி கரை பகுதி களிலும் மேம்பாட்டு பணி களுக்காக ரூ. 11.34 கோடி தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுத்திருந்த போதிலும் இங்கு சில பகுதிகள் வனத் துறை மற்றும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்படி பல்வேறு துறை களிடமிருந்து தடையில்லா சான்று பெற்று தான் பணி களை மேற் கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கான ஒப்புதல் சான்றிதழ் கிடை த்ததும் பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்படும். அதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும் குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் என்பது எத்தனை பேர் குற்றாலத்துக்கு வருகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து கொள்வதற்காக தான். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தான் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க முடியும்.
சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் போது வியாபாரம் பெருகும். தங்கும் விடுதிகளுக்கும் வருமானம் கிடைக்கும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும் போது மாநிலமும் வளர்ச்சி யடையும். இருப்பினும் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 கட்டணம் என்பது வசூலிக்கப்பட மாட்டாது.
சீரமைப்பு பணி
குற்றாலத்தில் அரசு விடுதிகள் கட்டி முடிக்க ப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அதனை சீரமைக்க உள்ளோம். குற்றாலத்தில் தனியார் அருவிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் எதுவும் வர வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர் மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது சுற்றுலா த்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலை குமார், பழனி நாடார் மற்றும் தனுஷ்குமார் எம்.பி., குற்றாலம் பேரூ ராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார அலுவலர் உட்பட பலர் உடன் இருந்த னர்.
மேலும் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியிலும் ரூ. 1.50 கோடியில் ஓட்டல், தங்கும் விடுதிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங் கப்பட உள்ளன. இந்த பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹீம், தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
- ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
தென்காசி:
தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்ததை அடுத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவியில் 4 கிளைகளிலும் மெயின் அருவியில் மிதமான அளவிலும் தண்ணீர் கொட்டி வருவதால் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இன்று காலையில் ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இருப்பினும் காலை முதல் லேசான வெயில் மட்டும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்தால் மட்டுமே குற்றால அருவிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து குற்றால சீசனும் களைகட்டும்.
- மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
- ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக சீசன்களை கட்டும். அப்போது குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
மலைகளில் உள்ள மூலிகை செடிகளின் வழியாக வரும் இந்த தண்ணீரில் குளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். இதனால் அருவிக்கரையோரம் வியாபாரிகள் கடை அமைத்து வியாபரத்தில் ஈடுபடுவார்கள். கேராளாவில் இருந்து சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும். இந்நிலையில் கடந்த மாதம் தொடங்க வேண்டிய சீசன் மிகவும் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பரவலாக பெய்தது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பழைய குற்றாலம் மற்றும் சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது. குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் தென்காசி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
- கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை.
தென்காசி:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக குற்றாலம் அருவிகள் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் நிறைந்த வனப்பகுதியின் நடுவே வந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய அருவிகளில் குளித்தாலே தனி உற்சாகம் தான் எனவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் நீர்வீழ்ச்சிகளாக கருதப்பட்டு வருகிறது.
இதனால் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் இங்கு சீசன் களைகட்டும். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் படையெடுத்து வருவார்கள்.
தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்றும், இன்றும் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்களின் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
இன்று காலை ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. அவர்களை போலீசார் வரிசையில் நின்று பாதுகாப்புடன் குளித்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் வாகன நிறுத்தும் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டது. வாகன நெருக்கடி மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் அருவி பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அருவி பகுதிகளை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் கூறுகையில், சீசன் காலங்களில் வந்து குளிப்பதற்காக நாங்கள் வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை. கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. விடுமுறை நாட்களில் வரும் பொழுது அரசு விடுதிகள் மட்டுமின்றி தனியார் விடுதிகளும் நிரம்பி வழிவதால் தங்கும் அறைகளை தேடி சுற்றுலா பயணிகள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாத்துறை மற்றும் தமிழக அரசின் சார்பில் குறைந்த விலையில் கூடுதல் தங்கும் விடுதிகளை சுற்றுலா பயணிகளுக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றனர்.
- தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை கால கட்டத்தின் போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
இந்த சீசன் காலத்தில் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வார்கள். வார இறுதி நாட்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். இதனையொட்டி சாலையோர கடைகள், அருவிக்கரைகளில் கடைகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து ரம்பூட்டான் உள்ளிட்ட ஏராளமான சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும்.
இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
ஆனாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து செல்கின்றனர். நேற்று தென்காசி மாவட்டம் முழுவதும் கடுமையான வெயிலின் தாக்கம் இருப்பதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இருப்பினும் இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக இன்று காலை முதலே ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவற்றில் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
- அமாவாசை நாட்களில் இந்துக்கள் ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
- அமாவாசை நாளான இன்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தென்காசி:
தமிழகத்தில் அமாவாசை நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு மற்றும் அருவிக்கரை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி அமாவாசை நாளும் இன்றே வருவதால் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிக்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காலை முதல் அர்ச்சகர்கள் முன்னிலையில் பலர் தர்ப்பணம் செய்து குற்றாலநாதர் கோவில் மற்றும் சன்னதி பகுதிகளில் உள்ள தெய்வங்களை வழிபட்டனர்.
- மெயின் அருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.
- குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை பொழுதில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையினால் அவ்வப்போது ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ஐந்தருவி மற்றும் மெயின்அருவி, பழைய குற்றாலத்தில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மற்ற இடங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் ஆறு, குளங்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குற்றால அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
- “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்’ என்பார்கள்.
- இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது.
திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும்.
சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.
குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும்.
அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும்.
இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.
"ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்"
போன்ற பல்வேறு பழமொழிகளும் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்குகின்றன.
- அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது.
- அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அம்பை, ராதாபுரம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் சேர்வலாறில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக ஆய்குடியில் 36 மில்லிமீட்டரும், தென்காசியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது. கடனா அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கொடுமுடியாறு மற்றும் அடவிநயினார் அணைகளில் லேசான சாரல் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர். உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.
இதேபோல் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, நாலாட்டின்புதூர், எட்டயபுரம், காடல்குடி, சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பூர், கழுகுமலை ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இரவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
- தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பிரதான அருவிகள் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதாலும் அருவியில் தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் தென்காசியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
- வெள்ள பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மெயின் அருவிலும் வெள்ள பெருக்கு குறைந்ததால் நேற்று மாலை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கும் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு மிகவும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே ஆர்வம் காட்டினர்.
- மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது.
- ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது.
தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்காசியின் முக்கிய சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுகளும் சாலை எங்கும் சென்றது. மேலும் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது. இன்று காலை வரை மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் அந்த 2 அருவிகளிலும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.