என் மலர்
நீங்கள் தேடியது "கெங்கையம்மன்"
- மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
- கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.
அதன்படி ஆனி மாத கடைசி வெள்ளியான நேற்று கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றன.
தொடர்ந்து 1,501 பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவில் வளாகத்தில் ஆணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேப்பிலைக்காரி அம்மனாக பக்தர்களுக்கு கெங்கையம்மன் காட்சியளித்தார்
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ். சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- இன்று அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது.
குடியாத்தம் டவுன் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை பாலாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. முன்னதாக தேரோட்டத்தை குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆடுகளையும், சேவல்களையும் பலியிட்டும், உப்பு மிளகுகளை தூவி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) காலை அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கஸ்பா மற்றும் காந்திநகர் ஊர் பெரியோர்கள், விழா குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பக்தர்கள் நூற்றுக்கணக்கான ஆடுகள், சேவல்களை பலியிட்டனர்.
- ம்மன் சிரசு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை கிராமத்தில் ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. கடந்த 15-ந் தேதி கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 26-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் ஆஞ்சநேயர் சுவாமி உற்சவமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவே அம்மன் சிரசு மிதந்து வரப்பட்டது. நேர்த்தி கடனாக கிராமமக்கள், பக்தர்கள் நூற்றுக்கணக்கான ஆடுகள், சேவல்களை பலியிட்டனர்.
தொடர்ந்து அம்மன் சிரசு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்அமலுவிஜயன், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏகாம்பரம் உள்பட குடியாத்தம் நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் நா.கோ.தேவராஜன், டி.கே.தரணி, வி.எம்.குமார், ஆர்.பிச்சாண்டி, சி.ராமமூர்த்தி, நா.மு.சங்கர் உள்பட விழா குழுவினர், தட்டப்பாறை, சின்னாலப்பல்லி கிராம பொதுமக்கள், ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- கெங்கையம்மன் உற்சவருடன் திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
- இன்று அம்மன் சிரசு ஏற்ற விஸ்வரூப காட்சியும் நடைபெற உள்ளது.
விஜயராகவபுரம் முதல் தெரு, இரண்டாவது தெரு வழியாக நேதாஜி நகர், மந்தைவெளி ரோடு போன்ற பகுதிகளுக்கு சென்ற தேர் பின்னர் மீண்டும் கோவிலை அடைந்தது. மாலையில் கச்சேரி, பக்தர்களின் கொக்கலிக்கட்டை நடனம், புலிவேடம், சிலம்பாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மன் சிரசு ஏற்ற விஸ்வரூப காட்சியும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை சத்துவாச்சாரி முத்தரையர் சமுதாய நிர்வாகிகள், கோவில் ஆலோசகர்கள், நிர்வாகிகள், காப்பாளர்கள், நகர இளைஞரணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- சிரசு திருவிழா முடிந்ததும் அம்மன் சிரசு கெங்கையம்மன் கோவிலில் மூலவர் அருகே வைக்கப்பட்டது.
- தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரசை பயபக்தியுடன் வணங்கி சென்றனர்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், திங்கட்கிழமை அம்மன் சிரசு ஊர்வலமும் நடைபெற்றது. சிரசு திருவிழாவிற்காக அம்மன் சிரசு கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்ட பின் சிரசு ஊர்வலம் தொடங்கும்.
சிரசு ஊர்வலம் அன்று தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலுக்கு சிரசை அதிகாலை கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்திற்கு பின்னர் கெங்கையம்மன் சண்டாளச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டு அன்று இரவு வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன் பின் இரவே அம்மன் சிரசு தனியாக எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று சுண்ணாம்பு பேட்டையில் முகம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு சிரசு திருவிழா முடிந்ததும் அம்மன் சிரசு கெங்கையம்மன் கோவிலில் மூலவர் அருகே வைக்கப்பட்டது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரசை பயபக்தியுடன் வணங்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் அம்மன் சிரசு அங்கிருந்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக அறையில் மீண்டும் வைக்கப்பட்டது.
- பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடந்தது. கடந்த 11-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந்தேதி தேர்த்திருவிழாவும், 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது.
விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழுவை சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு வீதி உலா வந்தது.
சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்டு அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து புத்துஅம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.
அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது.
பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.
ஏற்பாடுகளை சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஆர்.பி.செந்தில் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மின் பணியாளர்கள் பூ பல்லுக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதாலும், இரவிலும் அனல் காற்று வீசுவதாலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூப்பல்லக்கு செல்லும் பகுதிகளில் பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.
- 14-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 15-ந் தேதி சிரசு திருவிழா நடைபெற உள்ளது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், 15-ந் தேதி சிரசு திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று காலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தார்.
சிரசு திருவிழாவின் போது அம்மன் சிரசு புறப்படும் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து சிரசு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையை அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசிக்கவும், தரிசித்த பின் வெளியே வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், குடியாத்தம் துணை
கெங்கையம்மன் தேரோட்டம், சிரசு திருவிழா மற்றும் பூப்பல்லக்கு ஆகிய விழாவிற்காக காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கெங்கையம்மன் திருவிழாவின் போது பல வருடங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், 200 ஊர்க் காவல் படையினர் என 1,700 பேர் ஈடுபடுவார்கள். பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் திருவிழாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு பக்தர்கள் சிரமம் இன்றி பாதுகாப்பாக அம்மனை தரிசித்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளுக்காக நகரின் பல இடங்களிலும் கோவிலிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். மேலும் ட்ரோன் கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
திருவிழா காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போட்டோக்களுடன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். திருவிழாக்கு வருபவர்களின் வாகனங்கள் சிரமம் இன்றி நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 14-ந் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.
- 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடக்கிறது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடைபெறும் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குடியாத்தம் வருவார்கள். இந்த ஆண்டுக்கான கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது.
குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊர்வலமாக முத்தாலம்மன் கோவிலுக்கு சென்று அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நேற்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலை வந்தடைந்தது.
நள்ளிரவிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். பூங்கரகம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதியை அடைந்தது. காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வாணவேடிக்கை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் ஆய்வாளர் பாரி, ஊர்நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
வருகிற 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், 17-ந் தேதி பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.
- சிரசு விழா மே 15-ந் தேதி நடக்கிறது.
- அம்மனுக்கு காப்பு கட்டுதல் ஏப்ரல் 30-ந் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். கெங்கையம்மன் கோவில் சிரசு விழா வருகிற மே மாதம் 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ந.அசோகன், குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.மகேந்திரன், நகர மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்மகத்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட முன்னாள் அறங்காவலர்கள், திருப்பணி கமிட்டியினர், கோபாலபுரம் பொதுமக்கள், விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு காப்பு கட்டுதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி நடக்கிறது. மே மாதம் 14-ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
- சிரசு ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 7-ந் தேதி இரவு புஷ்ப பல்லக்கில் கெங்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து 8-ந் தேதி காலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிரசு ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கெங்கை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி சத்துவாச்சாரி பகுதி முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. ஏராளமான கடைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இந்த திருவிழாவையொட்டி சர்வீஸ் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மாலையில் காகிதப்பட்டறை பகுதியில் இருந்து உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக்கொண்டு கொக்கல கட்டையில் நின்றவாறு தாரை தப்பட்டையுடன் அணிவகுத்தவாறு வந்தனர். இதனால் சத்துவாச்சாரி பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு பேரி கார்டுகள் வைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. புதிய பஸ் நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.