search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குடியாத்தத்தில் கெங்கையம்மன் திருவிழா தேரோட்டம்
    X

    குடியாத்தத்தில் கெங்கையம்மன் திருவிழா தேரோட்டம்

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • இன்று அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது.

    குடியாத்தம் டவுன் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை பாலாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. முன்னதாக தேரோட்டத்தை குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆடுகளையும், சேவல்களையும் பலியிட்டும், உப்பு மிளகுகளை தூவி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) காலை அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கஸ்பா மற்றும் காந்திநகர் ஊர் பெரியோர்கள், விழா குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×