என் மலர்
நீங்கள் தேடியது "சம்பவம்"
- பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார்.
- இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார்.
இந்தி சினிமாவில் சர்ச்சைக்குறிய இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா, அவர் பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ராட் ராத்ரி, பூத், ஃபூங்க் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
என்னதான் இயக்குனர் ஹாரர் திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவர் வாழ்க்கையில் இம்மாதிரி அமானுஷ்ய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பாரா என்ற கேள்வி இருக்கும். அப்படி ஒரு சம்பவத்தை ஆர்.ஜி.வி சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார். அவர்கள் இருவரும் விமான பயணத்தின் போது சந்தித்ததாகவும், தனக்கு பின்னாடி இருக்கையில் தாவர் அமர்ந்திருந்தார். இதனால் ஆர்.ஜி.வி அவருடன் பேசலாம் என பின் இருக்கைக்கு சென்று பேசியுள்ளார். அப்போது தாவர் ஆர்ஜிவி ஐ பார்த்து `உங்க அப்பா இறந்துட்டாரா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த சந்திப்பிற்கு 15 நாட்கள் முன் ஆர்ஜிவி இன் தந்தை இறந்ததால் இவர் ஆமா என்று பதிலளித்துள்ளார். பின் சிறிய அமைதிக்கு பின் தவார் " உங்க அப்பா இப்போ நம்ம கூட தான் இருக்காரு" என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஆர்ஜிவி- க்கு பெரும் அதிர்ச்சி பின் "எனக்கு இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல" என்று கூறியுள்ளார்.
அதற்கு தாவர் " அவருக்கும் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல அவர் உன்னைய பற்றி ரொம்ப கவலை படுறாரு" என்று ஆர்ஜிவியின் தந்தை கூறியதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி, பயம், கோபம் என பல எமோஷன்களை மேற்கொண்ட ஆர்ஜிவி அந்த இருக்கையில் இருந்து எழுந்து பழைய இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். இவ்வாறு இந்த வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆர்ஜிவி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்இளமுருகு முத்து கடும் கண்டனம்
- சம்ப வத்தை அரங்கேற்றி யவ ர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவல த்தை நாம் காண வழி வகுத்துள்ளது.
புதுக்கோட்டை
அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது,
தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநி லைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த அருவருப்பான, வெட்கக்கேடான, கேவல மான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
புதுக்கோட்டை மாவ ட்டம் வேங்கைவயல் அசி ங்கம் அடங்குமுன்பு அடுத்த அநியாயம் நடந்து ள்ளது.
இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வேங்கை வயலில் பட்டி யிலன மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்தை செய்த நபர்களை 300 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை தமிழக அரசு கண்டு பிடிக்க முடியாததும்,
அந்த கொடிய சம்ப வத்தை அரங்கேற்றி யவ ர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவல த்தை நாம் காண வழி வகுத்துள்ளது.
இனி இது போன்ற கேவலங்கள், கொடூரங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு, வேங்கை வயல் மற்றும் பனைக்குளம் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளித்த மாணவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
- அவரை தேடும் பணி தீவிரம்
திருச்சி,
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆதி ஹரிஹரசுதன் (வயது15). பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர் களுடன் நேற்று செக் போஸ்ட் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி அனைவரும் குளித்த போது எதிர்பாராத விதமாக ஆதித்ஹ ரிஹரசுதன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலை யத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் ஆதித் ஹரிஹரசுதன் உடலை தேடினர்.உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று 2-வது நாளாக உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முழக்கங்கள் எழுப்பிய படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.
- பெண் வழக்கறிஞர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர்:
மணிப்பூரில் மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முழக்கங்கள் எழுப்பிய படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் பி. மோகன், வழக்கறிஞர் முத்துலட்சுமி, வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் சையது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பெண் வழக்கறிஞர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக வழக்கறிஞர் கோபிநாத் நன்றி கூறினார்.
- வேட்டமங்கலத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது பொருட்கள் நாசமானது
- தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் வேட்டமங்கலத்தில் உள்ள காலனியில் சின்னையன், பாப்பாத்தி, என்ற தம்பதியினருக்கு கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து போன பிரேம்குமார் குமார் என்பரின் மனைவி பவித்ரா(25) தனது 7 மாத குழந்தையுடன் இந்த வீட்டில் குடியிருந்து இருந்து வந்தார். பவித்ரா குழந்தையுடன் வெளியில் சென்றிருந்த நேரத்தில், தொகுப்பு வீட்டின், மேற்கூரையும் சுவர்களும் இடிந்து விழுந்தது.இதனால் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாயின. இது குறித்து வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு, பவித்ரா தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் நாட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர், ஜேசிபி இயந்திரம் வரவழைத்து, இடிந்து விழுது கிடந்த சுவர்களையும், பாதியில் நின்ற சுவர்களையும் அப்புறப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர்.
- வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது
- பெரம்பலூர் போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த வேலுவின் மகன் ராஜேஷ்கண்ணன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்கச்சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜேஷ்கண்ணனின் மொபட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். மொபட் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட ராஜேஷ்கண்ணன் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தனர்.பின்னர் அவர்கள் மொபட்டில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை போட்டும் அணைக்க முயன்றனர். ஆனாலும் மொபட் எரிந்து தீக்கிரையானது. அருகில் நின்று கொண்டிருந்த சைக்கிளின் சில பாகங்களும் தீயில் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ்கண்ணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மொபட்டிற்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த 15-ந்தேதி அதிகாலை பெரம்பலூர் சங்குபேட்டை பெரியார் தெருவில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருச்சி கிறிஸ்தவ தேவாலயத்தில் 5 பெண்கள் லிப்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
- தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு உபகரணம் உதவியுடன் மீட்டனர்
திருச்சி,
திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனைக்கு வந்த கர்ப்பிணி பெண் உட்பட 5 பெண்கள் தரைத்தளத்தில் நின்றுள்ள லிப்ட்டில் ஏறி உள்ளனர்.முதல் தளத்திற்கு செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி பாதியில் நின்று விட்டது. லிப்ட் திடீரென நின்றதால், அதில் இருந்த பெண்கள் படபடப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கிக்கொண்டிருந்த 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். இது பற்றி தீயணைப்பு படை வீரர்கள் கூறும்போது, மின்தடை காரணமாக லிப்ட் இயக்கம் தடைபட்டுள்ளது. அப்போது ஜெனரேட்டரை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது இயங்கவில்லை.இதன் காரணமாக லிப்டில் சிக்கி இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் உதவி மாவட்ட அலுவலர் சத்திய வர்த்தனன் தலைமையில் சென்றோம். அங்கு லிப்டில் சிக்கி இருந்தவர்களை, ஹைட்ராலிக் ஸ்பிளட்டர் கருவி மூலம் பத்திரமாக மீட்டோம் என்று கூறினர்.
- பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுக்க முயன்றபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்
- தப்பியோடிய மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு
கரூர்,
கரூர் வெங்கமேடு சோழன் நகரைச் சேர்ந்தவர் சரவஸ்வதி (வயது 48). ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வெங்கமேடு எஸ்பி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரிடம் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர்களில் ஒருவர், சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த தங்கசெயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, சரஸ்வதி சுதாரித்துக் கொண்டு சத்தம் போடவும், அருகில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து, செயினை பறிக்க முயன்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ்(வயது 34) என்பது தெரிய வந்ததோடு, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, உடன் வந்து பைக்கில் தப்பியோடி மற்றொரு நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- சாலையில் ஓடிய ஆசிட்டில் இருந்து எழுந்த புகையால் பெண் மயக்கம்
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை தெளித்து நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் ஆசீட் அடங்கிய பெரிய குடுவைகளுடன், ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதில் இருந்து ஒரு குடுவை கீழே விழுந்து உடைந்து உள்ளது. உடையும் பொழுது பெரும் சத்தத்தை ஏற்படுத்த உள்ளது. இதனால் அந்த வாகனத்திற்கு பின்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் இது பற்றி எதுவும் அறியாமல், ஆசிட் ஏற்றி சென்ற இருசக்கர வாகன ஓட்டி சென்று விட்டார். ஆசிட்' தண்ணீர் போல் சாலையில் ஓடியது. மேலும் கொளுத்திய வெயிலுக்கு 'ஆசிட்' பொறிந்து கொண்டிருந்தது. இதனால் மீண்டும் வெடிக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் கொட்டி கிடந்த 'ஆசிட்' மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையை தூய்மைபடுத்தினர். 'ஆசிட்' வெடிக்கும் போது, அதனருகே யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் 'ஆசிட்' கொண்டு சென்றது யார்? அவர் எதற்காக 'ஆசிட்' கொண்டு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயலுக்கு சென்ற போது சம்பவம்
- கதண்டு கடித்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 65) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் வெள்ளைச்சாமி (வயது 40), இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது அருகில் உள்ள செடியிலிருந்து கதண்டு வண்டு பறந்து வந்து இருவரையும் கடித்தது. இதில் காயம் அடைந்து மயக்க நிலையில் சென்ற அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பிராங்க்ளின் உட்ரோவில்சன் பணிபுரிந்து வந்தார்.
- தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பிராங்க்ளின் உட்ரோ வில்சன் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தஞ்சையில் போலி மது மற்றும் மதுவிலக்கு சம்பந்தமான குற்ற சம்பவங்களை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின் பேரில் சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
- சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் முத்து (வயது 38). சம்பவத்தன்று இவர் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த அவர்கள் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் பலாதாரம் செய்த முத்துவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் முத்துவை சிறையில் அடைத்தனர்.