search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலி"

    • தென் அமெரிக்காவின் மேற்கில் சிலி நாடு அமைந்துள்ளது.
    • நிலநடுக்கம் பூமியில் இருந்து 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

    தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை ஐரோப்பிய நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

    • அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • பூமியில் இருந்து 128 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்நாட்டின் ஆன்டோஃபகஸ்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி இருக்கிறது.

    நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சான் பெட்ரோ அடகாமா நகரின் தென்கிழக்கே பூமியில் இருந்து 128 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • சோதனைக்காக இயக்கப்பட்ட ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.
    • பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து பயணிகள் புதிய ரெயில் ஒன்று புறப்பட்டது. வேக சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.

    அதேசமயம் 1,500 டன் தாமிர பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயிலும் அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது. புறநகர் பகுதியான சான் பெர்னார்டோ அருகே சென்றபோது அந்த இரு ரெயில்களும் நேருக்குநேர் மோதின.

    இதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் நேருக்குநேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் ஒரு பெட்டி சரக்கு ரெயிலின் மீது ஏறியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 சீனர்கள் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று ரெயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மற்றொருபுறம் ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. அதன்படி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் கேபிரியேல் போரிக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    • சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு.
    • 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.

    சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹூடாகோண்டோ என்ற சிறிய நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டபோது 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து ஆய்வாளர் கிறிஸ்டியன் சலாசர் கூறும்போது, இது தனது அனுபவத்தில் இதுவரை இல்லாத ஒன்று என்றும், 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்தடங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது மிகப்பெரிய திட்டத்தின் தொடக்கம் என்றும் தெரிவித்துள்ளார். 

    விண்வெளியை பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய உலகின் அதி நவீன தொலைநோக்கி சிலி நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.
    சிலி :

    உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’, வருகிற 2024-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    இதைப் பயன்படுத்தி, விண்ணியல் ஆய்வாளர்களால் பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.

    சிலி மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இந்த ஒரு பில்லியன் டாலர் செயல்திட்டத்துக்கான அடிப்படைப் பணிகளை சமீபத்தில் தொடங்கிவிட்டனர்.

    புதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே தொழிலாளர்கள் பாறைப் படுகையில் 23 அடி துளைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவை காங்கிரீட்டினால் நிரப்பப்பட்டு, தொலைநோக்கிக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

    அட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இப்பகுதி, பூமியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று. எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தைக் கவனிக்க முடியும் என நம்பப்படுகிறது.
    ×