என் மலர்
நீங்கள் தேடியது "செம்பட்டி"
ஆத்தூர்:
செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது25). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித்தொழிலாளி. இவரும் சிலம்பரசனும் உறவினர்கள்.
சம்பவத்தன்று சிலம்பரசன் அப்பகுதியில் ஆட்டோவில் சவாரி சென்று விட்டு பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் சிலம்பரசனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
இதுபற்றி சிலம்பரசன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
செம்பட்டி பகுதியில் போலி மது விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர் குமார் (வயது 40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்த 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் ஒன்றியம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்லமாயி (வயது 58). இவர் தள்ளுவண்டியில் காய்கறி, வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் செம்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார்.
பாளையங்கோட்டையில் எதிரே வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.