search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நைஜீரியா"

    • பயங்கரவாத குழுக்களுக்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    • தவறுதலாக நடத்திய தாக்குதலால் 10 பேரும் இறந்ததாக நைஜீரியா ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

    மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் அமைந்துள்ளது நைஜீரியா. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகின்றன.

    இவர்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் உயிர் இழந்து வருகின்றனர். பயங்கரவாத குழுக்களுக்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நைஜீரியா சொகுடா மாகாணம் சிமிலி என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தினார்கள். சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.

    ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் இறந்து விட்டனர். கிளர்ச்சியாளர்கள் குழு என நினைத்து தவறுதலாக நடத்திய தாக்குதலால் 10 பேரும் இறந்ததாக நைஜீரியா ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

    • ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்
    • தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

    ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர்.

    இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

     

     

    இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.

    இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார். 

    • 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது.
    • லாகோஸ் நகரில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா- ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின.

    லாகோஸ்:

    2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது. இதில் லாகோஸ் நகரில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா - ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நைஜீரியா செலிம் சாலு (112 ரன்) சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.

    இதைத்தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐவரிகோஸ்ட் அணி, நைஜீரியா வீரர்களின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 7.3 ஓவர்களில் வெறும் 7 ரன்னில் சுருண்டது. இதனால் நைஜீரியா அணி 264 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

    ஒற்றை இலக்க ரன்னில் அடங்கிய ஐவரிகோஸ்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற மோசமான சாதனைக்கு சொந்தமானது. இதற்கு முன்பு கடந்த செம்டம்பரில் நடந்த சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணியும், 2023-ம் ஆண்டு ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஐல் ஆப் மேன் தீவு அணியும் தலா 10 ரன்னில் அடங்கியதே மோசமான சாதனையாக இருந்தது.

    • கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது பெரிய விருது வழங்கப்பட்டது.

    மூன்று நாடுகள் பயணமாக நைஜீரியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நைஜீரிய அதிபர் டினுபுவை சந்தித்து பேசினார். இந்தியா மற்றும் நைஜீரியா இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு பின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது பெரிய விருதான "நைஜரின் கிராண்ட் கமாண்டர் ஆஃப் ஆர்டர்"-ஐ வழங்கி நைஜீரியா கௌரவித்தது. விருது பெற்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

    இது பற்றி பேசிய அவர், "நைஜீரியாவின் தேசிய மரியாதையை எனக்கு வழங்குவதற்கான உங்கள் முடிவிற்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெருமை என்னுடையது மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் உரியது. இது பல நூற்றாண்டுகள் பழமையான இந்தியா-நைஜீரியா உறவுகளுக்கு கிடைத்த மரியாதை. இந்த மரியாதைக்காக, நைஜீரியா, உங்கள் அரசு மற்றும் குடிமக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.


    • நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • நைஜீரியத் தலைநகருக்கு பிரதமர் மோடி இன்று அதிகாலை வந்தார்.

    மூன்று நாடுகள் பயணமாக நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடி வர்த்தகம், முதலீடு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-நைஜீரியா இடையே கூட்டணியை மேம்படுத்துவது குறித்து நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    17 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டிற்கு முதல் முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நைஜீரியத் தலைநகருக்கு பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வந்தார்.

    டினுபுவுடன் நேரில் சந்தித்துப் பேசிய பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தற்போது கூறப்பட்டது போல், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருகிறார். எனது மூன்றாவது பதவிக் காலத்தின் தொடக்கத்திலேயே நைஜீரியாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது."

    "கடந்த மாதம் நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 140 கோடி இந்தியர்கள் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்தியா 20 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது."

    "நைஜீரியாவுடனான எங்கள் மூலோபாய கூட்டாண்மைக்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். பாதுகாப்பு, எரிசக்தி, நிதி சிக்கல்கள், தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற பல துறைகளில் எங்களுக்கு வலுவான ஒத்துழைப்பு உள்ளது. எங்கள் உறவுகளில் பல புதிய வாய்ப்புகள் இணைக்கப்பட்டுள்ளன."

    "பயங்கரவாதம், பிரிவினைவாதம், கடற்கொள்ளையர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை சமாளிக்க நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். வரும் காலங்களில் இதை இன்னும் வலுவாக செய்வோம்."

    "இன்றைய உரையாடல்களால், நமது உறவுகளுக்கு ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். ஒன்றாக, உலக அளவில் குளோபல் சவுதின் முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்துவோம், மேலும் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றியை அடைவோம்," என்றார்.

    • அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் நைஜீரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி.
    • 17 ஆண்டில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

    அபுஜா:

    நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அதிகாலை அபுஜா சென்றடைந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு அளித்தனர்.

    கடந்த 17 ஆண்டில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    இந்தியா, நைஜீரியா இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் அவர் உரையாற்றுகிறார்.

    இதைத் தொடர்ந்து, பிரேசில் செல்லும் பிரதமர் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ம் தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார். மாநாட்டுக்கு இடையே பிரேசில் அதிபர் உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    அதைத்தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 19ம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். 20ம் தேதி அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

    • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்
    • .நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-

    பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நைஜீரியா செல்கிறார். இந்த 2 நாள் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் நைஜீரியா இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார்.

    தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றுகிறார். இதனையடுத்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
    • மின்சார நிறுத்தத்தால் ஏராளமான தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது. அதன்படி மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது.

    அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய நகரங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஏராளமான தொழிற்சாலைகளும் இந்த மின் நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்த ஆண்டில் இது 10-வது நாடுதழுவிய மின் நிறுத்தம் ஆகும்.

    இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பவர் கிரிட் செயலிழந்ததால் போதுமான மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மறு சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    • முன்னாள் காதலனை பழிவாங்க மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
    • உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் நினைத்துள்ளனர்.

    நைஜீரியா நாட்டில் பிரேக் அப் செய்த காதலனை பழி வாங்க வேண்டும் என்று நினைத்த பெண், அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் சூப்பை அவரது முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து குடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

    பின்னர் உண்மை தெரியவரவே, அப்பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியது.
    • இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

    இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க விரைந்தனர்.

    அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

    • குடிசைகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேரை பணய கைதிகளாக கடத்தி சென்றனர்.
    • ராணுவத்தினரின் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நடானா நைஜீரியாவின் வடமேற்கு கடூனா மாகாணத்தில் பயங்கரவாதிகள் கும்பல் செயல்பட்டு நாட்டின் அமைதிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில் அங்குள்ள கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் கும்பல் ஊடுருவியது.

    பின்னர் அங்குள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேரை பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நைஜீரியா ராணுவம் பயண கைதிகளை மீட்க சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அந்தவகையில் தனிப்படை ராணுவத்தினர், பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தி் பணய கைதிகளாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 20 பேரை உயிருடன் மீட்டனர்.

    ராணுவத்தினரின் இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 4 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானதாக அந்த நாட்டின் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

    • விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×