என் மலர்
நீங்கள் தேடியது "மண்டைக்காடு"
- மீனவர்கள் காப்பாற்றினர்
- மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.
கன்னியாகுமரி:
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.
நேற்று காலை அங்கு கடற்கரையில் நின்ற பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதனால் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். உடனே அவர்கள் சப்தமிட்டனர். உடனே புதூர் மீனவர்கள் கடலில் குதித்து கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கரை சேர்த்தனர்.
உடல் முழுவதும் மணல் ஒட்டியிருந்தது. தகவலறிந்த குளச்சல் மரைன் இன்ஸ் பெக்டர் நவீன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அந்த பெண் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார். போலீசார் நடத்திய விசார ணையில் அந்த பெண் கருங்கல் அருகே நட்டாலம் கிணற்று விளையை சேர்ந்த ஜானி மனைவி ஆன்சி (30) என்பதும், கணவன்-மனை விக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்த ஆன்சி மண்டைக் காடு வந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஆன்சிக்கு 2 பெண் குழந்தை கள் உள்ளனர்.
- வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.
- அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை, நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.
மாலையில் தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.
மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நேற்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.
வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
வலிய படுக்கை பூஜை நடந்த போது கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தால் சரண கோஷம் எழுப்பினர். இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
- குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக் கோவிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14 ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.
விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில ங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித தீர்த்தமாடி நேர்ச்சை கடன் செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21 ந் தேதி நடந்தது. 25-ந் தேதி (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணிக் கொடைவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபி ஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இப்பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நாளை (சனிக்கிழமை) மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவிலின் முன்பு வைக்கப் பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண் கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.3,87,205 ரொக்கமாக கிடைக்கப்பெற்றது.
- நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
- வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நடக்கிறது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சிகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
இந்த பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
- ‘பெண்களின் சபரிமலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு கடந்த 5-ந் தேதி மாசிகொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தோப்புகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் கடற்கரைபகுதி, லட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை, சாஸ்தான் கோவில் சாலை போன்ற இடங்களில் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது.
எட்டாம் கொடை விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
- ஏராளமான கேரள பக்தர்கள் வேன், பஸ்களில் மண்டைக்காடுக்கு வந்தனர்.
- நாளை எட்டாம் கொடை விழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிகட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. மாசிக்கொடை விழா நாட்களில் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான கேரள பக்தர்கள் வேன், பஸ்களில் மண்டைக்காடுக்கு வந்தனர். அவர்கள் கடலில் கால் நனைத்து விட்டு பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். கேரள பக்தர்களின் வருகையால் மண்டைக்காடு கோவில் சன்னதி, கோவில் வளாகம், கடற்கரை மற்றும் பொங்கலிடும் பகுதியில் என அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதை தவிர குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களும் கோவிலை சுற்றியுள்ள தோப்புக்களில் குடும்பமாக பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். நாளை(செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- கொடை விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
- 25-ந்தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்தகோவிலிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வதால் 'பெண்களின் சபரிமலை' என போற்றப்படுகிறது.
இங்கு கடந்த 5-ந் தேதி மாசி கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
எட்டாம் கொடை விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவின் தொடர்ச்சியாக 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
- திரளான பக்தர்கள் தரிசனம்
- பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் வீதிஉலா, சமய மாநாடு, யானை மீது களப பவனி, வில்லிசை, கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா நாட்களில் தினமும் குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். கோவில் திருவிழாவில் நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நேற்று மண்டைகாடு கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் காலையிலிருந்து குடும்பத்துடன் குவிய தொடங்கினார். ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் கூடியிருந்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் பக்தர்கள் வெள்ளமாக தான் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாக காட்சி அளித்தன.
நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும் நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதலும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்தும் 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 10மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.
இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த் தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகள் கோவிலுக்கு பவனியாக கொண்டு வந்தனர். அத்துடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.
இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய் பகுதி சிகப்பு துணியால் மூடி கட்டப்பட்டிருந்தது. உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.
அதை தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தீபாரா தனை நடந்து கொண்டி ருக்கும்போதே கொடி மரத்தில் கொடி இறக்கப்பட்டது. மண்டைக்காடு கோவில் விழாவில் காலையில் இருந்தே அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. அது போல் கேரளா அரசு போக்குவரத்துக் கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது. திருவனந்தபுரம், தக்கலை, மார்த்தாண்டம், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் நடுவூர்க்கரை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. நாகர்கோவில் பகுதியில் இருந்து வந்த பஸ்கள் புதூர் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.
மண்டைக்காட்டில் பக்தர்கள் நேற்று அதிகமாக குவிந்திருந்ததால் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.
- இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
- இந்த கோவிலில் நடக்கும் ஒடுக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாசி கொடை விழாவில் நடக்கும் ஒடுக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் ஒடுக்கு பூஜையின் போது உணவு பொருட்களை 9 மண் பானைகளிலும், 2 குடங்களிலும், ஒரு பெட்டிலும் வைத்து நீள வெள்ளை துணியால் மூடி பூசாரிகள் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வருவார்கள். அப்போது அவர்கள் தங்களது வாயில் துணி கட்டியிருப்பார்கள்.
இந்த பானைகளில் அரிசி சாதம், சாம்பார், அவியல், எருசேரி, பருப்பு, கிச்சடி, ஊறுக்காய், இஞ்சி, மாங்காய், கீரை ஆகியவையும், 2 குடத்தில் தேனும், ஒரு பெட்டியில் வடை மற்றும் அப்பளமும் எடுத்து வரப்படும். இவற்றை அம்மனுக்கு படையலிட்டு பூஜை நடத்துவார்கள். இதற்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்பட்டதாகும். இவற்றை தயாரிக்கும் முறை மற்றும் கொண்டு வரும் முறை ஆகியவற்றில் மரபு வழி இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது.
- கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும், கடற்கரையிலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் மாசி ெகாடை விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் வீதிஉலா வருதல், சமய மாநாடு, யானை மீது சந்தன குடம் பவனி, வில்லிசை, கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி தினமும் குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவில் நிறைவு விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும் நடந்தது.
மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் போன்றவை நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகள் கோவிலுக்கு பவனியாக கொண்டுவந்தனர். அத்துடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.
இவற்றை வாயில் சிவப்பு துணியை கட்டிய நிலையில் பூசாரிகள் தலையில் சுமந்து வந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனை நடந்து கொண்டிருக்கும்போதே கொடி மரத்தில் இருந்த கொடி இறக்கப்பட்டது.
விழாவையொட்டி நேற்று மண்டைக்காடு கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்து குடும்பத்துடன் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கூடி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும், கடற்கரையிலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. அது போல் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது. திருவனந்தபுரம், தக்கலை, மார்த்தாண்டம், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் நடுவூர்க்கரை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. நாகர்கோவில் பகுதியில் இருந்து வந்த பஸ்கள் புதூர் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. விழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்து.
மண்டைக்காட்டில் நேற்று பக்தர்கள் அதிகமாக குவிந்ததால் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். கடற்கரையில் பக்தர்கள் கால் நனைக்கும் பகுதியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யாகுமார் தலைமையில் நீச்சல் பயிற்சி பெற்ற சிறப்பு தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கன்னியாகுமாரி, மார்ச்.14-
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.
நேற்று 9-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து யானை மீது சந்தன பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலிலிருந்து சந்தன குடம் மற்றும் காவடி பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சந்தனகுடம் சார்பில் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடந்தது.
ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 7.30 மணி முதல் மாலை 9 மணிவரை பக்தி பஜனை, 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சமய மாநாடு, 2 மணிமுதல் 3.30 மணிவரை பக்தி பஜனை, 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வில்லிசை, 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், இரவு 10 மணிமுதல் ஆன்மீக அருளிசை நிகழ்ச்சியும் நடந்தது.
இனறு நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகே உள்ள சாஸ்தான் கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பவனி வருகிறது.
பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து கும்ப ளங்காய் மஞ்சள், நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொ டுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறைமேளம் அடிக்கப்படுகிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும்போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும்.
பின்னர் கொடி இறக்கு தலும் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பூஜையைக்காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனிவரும் வளா கத்திலும் அலை கடலென பக்தர்கள் திரண்டு நிற்பார் கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.
- இன்று பெரிய சக்கர தீவட்டி வீதி உலா நடக்கிறது.
- அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் நடந்தது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், நண்பகல் 12.30 மணிக்கு நடுவூர்க்கரை சிவசக்தி கோவில் பக்தர்கள் மாவிளக்கு பவனி வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும், சுற்றியுள்ள தோப்புகளிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில், களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, குமாரகோவில், குலசேகரம் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கோவில் வளாகம், பொங்கலிடும் பகுதி, கடற்கரை, கடற்கரை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா நடந்தது. 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி மண்டைக்காடு கோவிலை வந்தடைந்து. இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடந்தது.
ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம், 8 மணிக்கு சொற்பொழிவு போட்டி, மாலை 3.30 மணிக்கு பக்தி இன்னிசை, 5 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு அகில திரட்டு விளக்கவுரை, 9 மணிக்கு அய்யாவழி நிகழ்ச்சி, 10.30 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 10.30 மணிக்கு புராண நாட்டிய நாடகம் போன்றவை நடந்தது.
விழாவில் இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் 10-வது நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடி யந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தி யோட்டம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது.