என் மலர்
நீங்கள் தேடியது "மேல்மருவத்தூர்"
- பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு கடந்த 9 நாட்களாக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி பங்காரு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ஆலயத்தின் புற்று மண்டபத்தில் சித்தர் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு கடந்த 9 நாட்களாக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு மேல்மருவத்தூருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வந்தார். அதன் பின்னர் கோயிலின் எதிரே உள்ள ஓம் சக்தி பீடத்தை வணங்கி கோயிலுக்கு உள்ளே சென்று ஆதிபராசக்தி அம்மனை வணங்கினார். பின்னர் கோயிலின் அருகே உள்ள புற்று மண்டபத்தில் பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு அருகே உள்ள பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
- அண்ணாமலையை நேரில் பார்த்ததும் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்தனர்.
- தொடர்ந்து அருகில் இருந்த மத்திய மந்திரி எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோரிடம் கைகுலுக்கி கொண்டார்.
சென்னை:
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணம் அடைந்தபோது தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை நேரில் வழங்குவதற்காக அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோர் நேற்று மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியை சந்திக்க சென்றார்கள்.
அவர்கள் காரைவிட்டு இறங்கியபோது அங்கு ஏற்கனவே லட்சுமி பங்காருவை சந்தித்துவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியே வந்தார்.
அண்ணாமலையை நேரில் பார்த்ததும் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்தனர். அப்போது, அண்ணாமலையிடம், 'வாங்க... வாங்க... ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைத்து கொண்டிருந்தேன்' என்று திருமாவளவன் சிரித்தபடியே கூற 'ரொம்ப சந்தோஷம் அண்ணா' என்று அண்ணாமலை கூற ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
தொடர்ந்து அருகில் இருந்த மத்திய மந்திரி எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோரிடம் கைகுலுக்கி கொண்டார்.
அப்போது திருமாவளவனிடம் நலம் விசாரித்து கொண்டார்கள். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பின்னர் திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
+2
- பங்காரு அடிகளார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
- வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்து வந்தார்.
இந்த கோவிலுக்கு வருபவர்கள் சிவப்பு நிற ஆடைகள் அணிந்து வருவதால் செவ்வாடை பக்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பங்காரு அடிகளார் கடந்த ஒரு ஆண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதலே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூர் நோக்கி ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
பங்காரு அடிகளார் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலும் பங்காரு அடிகளார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை முதல் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த குவிந்தனர். கார் மற்றும் வாகனங்களில் பக்தர்கள் வந்து கொண்டு இருந்ததால் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தது.பெண் பக்தர்கள் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்தினர்.
வாகன நெரிசலை தடுப்பதற்காக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேல்மருவத்தூர் நோக்கி வந்த வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி செல்ல அறிவுறுத்தினர். இதனால் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்து பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடல் வீட்டில் இருந்து தியான மண்டபத்திற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு பொதுமக்கள், பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு மேல் பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் நடைபெறுகிறது. முதலில் அவர் ஏற்கனவே 2 ஆண்டுக்கு முன்பு தியான மண்டபம் அருகே கட்டி வைத்திருந்த சமாதியில் உடல் அடக்கம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
தற்போது கோவில் அருகே உள்ள புற்று மண்டபத்தில் உடல் அடக்கம் சித்தர் முறைப்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தற்போது அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பங்காரு அடிகளாரின் மறைவால் மேல்மருவத்தூர் பகுதியே சோகமாக காட்சி அளிக்கிறது.
- பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.
- பங்காரு அடிகளார் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
சென்னை:
ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
- அடிகளாரைப் பராசக்தியின் சொரூபமாகவே காணும் பக்தர்கள், அவரை ‘அம்மா’ என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.
- பங்காரு அடிகளாருக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
ஆன்மிகப் பணிவுடன், பல சமூகப் பணிகளையும் செய்து, பல லட்சக்கணக்கான பக்தர்களைப் பெற்றிருந்தவர் மேல் மருவத்தூர் சித்தர் பீடத் தலைவரான பங்காரு அடிகளார்.
மேல் மருவத்தூரில் துரைசாமி நாயக்கர் குடும்பம் செல்வாக்கானது. அவருடைய மகன் கோபால் நாயக்கர், நிலக்கிழார். கோபால் நாயக்கர்-மீனாம்பாள் தம்பதி மகனாக, 3-3-1942-ல் பங்காரு அடிகளார் பிறந்தார். இளமையிலேயே பக்தி மிக்கவராக விளங்கினார்.
சோத்துப்பாக்கம் ஆரம்ப பள்ளியிலும், அச்சிறுபாக்கம் உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்னர் செங்கல்பட்டில் உள்ள அரசினர் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். உடனடியாக ஆசிரியர் வேலை கிடைக்காததால், சொந்தக்காலில் நிற்க விரும்பி, எலக்ட்ரீஷியனாக, பஸ் கண்டக்டராக, பஞ்சாய்த்து காண்டிராக்டராக சில காலம் பணியாற்றினார். பிறகு அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
1966-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மிக பயங்கரமான புயல் வீசியபோது, மேல் மருவத்தூரில் இருந்த பால்வடியும் அதிசய வேப்ப மரம் வேராடு சாய்ந்தது. அந்த மரத்தின் அடியில் இருந்த புற்று மழையினால் கரைந்து, சுயம்பு வெளிப்பட்டது. அதுவரை வேம்புக்கும், புற்றுக்கும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்து வந்த கோபால் நாயக்கர், இப்போது அந்த சுயம்புக்கு எளிய நிலையில் கூரை வேய்ந்து வழிபாடு செய்யத்தொடங்கினார். இந்தநிலையில் 1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு செவ்வாய் அன்று பங்காரு அடிகளார் முதன்முதலாக அருள்வாக்கு கூறினார். அதன் பிறகு புகழ் பரவத் தொடங்கியது. மேல் மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது.
ஓலை வேய்ந்த ஆதிபராசக்தி கோவில், எழில் மிகு ஆலயமாக எழுந்தது. ஆன்மிகத் துறையில், அடிகளார் பெரும் புரட்சியே செய்தார் எனலாம். கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை வழக்கத்தை மாற்றி, பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரை சேர்ந்த மன்றத்துப் பெண்மணிகள் பொறுப்பேற்று கோவிலைத் தூய்மைப்படுத்துவது, பக்தர்களுக்கு உணவு வழங்குவது போன்ற திருப்பணிகள் செய்ய வகை செய்தார்.
அடிகளாரைப் பராசக்தியின் சொரூபமாகவே காணும் பக்தர்கள், அவரை 'அம்மா' என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.
அடிகளாருக்கு 1968 செம்டம்பர் 4-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அவரை மணந்த லட்சுமி அம்மையார், உத்திரமேரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆசிரியைப் பயிற்சி பெற்று, கருங்குழி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர்.
பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி முதல், இன்றைய அரசியல் தலைவர்கள் வரை, முக்கிய தலைவர்கள், பிரமுகர்களும் மேல்மருவத்தூர் வந்து அருளாசி பெற்று சென்றுள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு முன், சிறிய குக்கிராமமாக விளங்கிய மேல்மருவத்தூர், இன்று ஒரு நகரமாக காட்சியளிக்கிறது.
ஆதிபராசக்தி அறநிலை சார்பில் கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி முதலியவையும், மிக நவீன ஆஸ்பத்திரிகளும் நடத்தப்படுகின்றன.
பங்காரு அடிகளாருக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
அடிகளாருக்கு அன்பழகன், செந்தில்குமார் என்ற 2 மகன்களும், தேவி, உமாதேவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
- கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்
- நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்
பக்தர்களால் "அம்மா" என்று அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார். ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைந்த செய்தி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேல்மருவத்தூர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி ஆளுநகர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
- ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி, கலாசார அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தவர்.
- பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து பக்தர்கள் பலர் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.
சென்னை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார் (வயது 82) இன்று காலமானார். நெஞ்சு சளி பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை காலமானார்.
1941-ம் ஆண்டு மார்ச் 3-ல் பிறந்த அவர், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். கோவில் மற்றும் ஆன்மீகத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தார். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி, கலாசார அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தவர்.
இவரது சேவையை பாராட்டி 2019-ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார். அவரது மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பங்காரு அடிகளார் மறைந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன் என வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
ஆன்மீக நிர்வாகத்தில் பெண்களை கொண்டு வந்தவர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பங்காரு அடிகளாரின் மரணம் லட்சக்கணக்கான மக்களுக்கு பேரிழப்பு என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
பக்தர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என பங்காரு அடிகளார் மறைவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து பக்தர்கள் பலர் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.
- ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும்.
- பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை, அறிவை விதைத்தார்.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அடிகளாரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்து இருக்கிறார். உயிரிழந்த பங்காரு அடிகளாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.
"மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin… pic.twitter.com/AQPJbfazYD
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 19, 2023
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்," என்று தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் - கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய… pic.twitter.com/xQZ6txPVGs
— Udhay (@Udhaystalin) October 19, 2023
- மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளதாக தகவல்.
- ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கியவர்.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார்.
ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.
பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர்.
மேல்மருவத்தூர் சித்தர் பீட கருவறையில் அபிஷேக ஆராதனை செய்ய பெண்களை அனுமதித்தவர் பங்காரு அடிகளார்.
அவர், ஆதிபராசக்தி மருத்துவ கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவராக விளங்கி வந்தார்.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரளான பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டி பயணம் செய்கின்றனர்.
- மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.ஆர்.சேதுபதி நகர் வழிபாட்டு மன்றம் உள்பட 108 மன்றங்கள் உள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
மாவட்ட ஆன்மீக நிர்வாக குழு தலைவர் பொன்ராஜ் தலைமையில் தணிக்கை குழு பொறுப்பாளர் நாகசேகரன், மாவட்ட வேள்விக் குழு தலைவி சாந்தி தனபால் முன்னிலையில், வட்ட, மன்றத் தலைவிகள் ஏற்பாட்டில் மாலை அணிந்து வருகின்றனர்.
ஆர்.ஆர்.சேதுபதி நகர் மன்ற தலைவி நித்திய கல்யாணி மாரிமுத்து தலைமையில் மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதில் இரு முடி கட்டி பெண்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் இருமுடி செலுத்தினர். இந்த ஆண்டு இதுவரை 40 ஆயிரம் பேர் இருமுடி கட்டி பயணம் செய்துள்ளனர். பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ் வசதி வழங்கிய கோட்ட மேலாளர், காரைக்குடி பொது மேலாளர், ராமநாதபுரம் புறநகர் பிரிவு மேலாளர் பாலமுருகன் மற்றும் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.