என் மலர்
நீங்கள் தேடியது "ரீபண்ட்"
- பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
- முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. பாதியில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படா விட்டால் டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும். இதன்படி 30,145 ரசிகர் களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.5.4 கோடியை திரும்ப வழங்க உள்ளது. 10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.5.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
- ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.
அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டத்தின் 13-வது ஓவரை ஆகாஷ்தீப் வீசியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 19 ரன்னும், மெக்ஸ்வீனி 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் , முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. 15 ஓவர்களுக்கு கீழ் வீசப்பட்டதால் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.
- ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
- மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது. பின்னலாடை ரகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய பின் ஏற்றுமதியாளர்கள் உரிய ஆவணங்களுடன் மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரீபண்ட் தொகை விடுவிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு (2022 - 23) நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகம் மூலம் 360 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.
16 சரகங்களை உள்ளடக்கிய திருப்பூரின் இரண்டு வணிக வரி மண்டலங்கள் மூலம் 520 கோடி ரூபாய் என மத்திய, மாநில வரித்துறைகள் மூலம் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை மொத்தம் 880 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு பரிசீலித்து உடனடியாக ஜி.எஸ்.டி., ரீபண்ட் தொகை விடுவிக்கிறோம். இக்கட்டான சூழல்களில் உரிய காலத்தில் ரீபண்ட் கிடைப்பது, பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதன தேவைக்கு பக்கபலமாக உள்ளது என்றனர்.