என் மலர்
நீங்கள் தேடியது "ஹெராயின்"
- போலீசார் சில்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஹித்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
- போதை இல்லாத அசாமை நோக்கிய பயணத்தில் ஒரு பெரியபடியாக இந்த நடவடிக்கை உள்ளது
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சில்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஹித்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில், 21 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.210 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த லால்தினுவா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், அசாமில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை இல்லாத அசாமை நோக்கிய பயணத்தில் ஒரு பெரியபடியாக இந்த நடவடிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
- 12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.
- முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆசாம் மாநிலம், தோலாய் பகுதியில் உள்ள லோக்நாத்பூரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மர்ம நபர்களிடம் இருந்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து,12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கடத்தல் போதைப் பொருட்கள் தோல் பைகள் மற்றும் சோப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அண்டை மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது.
அசாம் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர்.
- பயணியை கைது செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மும்பை:
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாவில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை வழிமறித்து உடைமைகளில் சோதனை போட்டனர். இதில் எதுவும் சிக்காததால் தனிமை படுத்தி சோதனை நடத்தினர். இதில் உடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 7 கிலோ 600 கிராம் எடையுள்ள பார்சல் ஒன்று இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இதில் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.53 கோடி ஆகும். பயணியை கைது செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
- படகு மூலம் கொண்டு வரப்பட்ட போதை பொருள் பாக்கெட்டுகள் கொச்சியில் பறிமுதல்.
- ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து அதிகாரிகள் நடவடிக்கை.
கொச்சி:
இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,200 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெராயின் பாகிஸ்தான் வழியாக ஈரான் நாட்டு படகில் ஏற்றப்பட்டு, இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை மூத்த அதிகாரி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட பாக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தனித்துவமான அடையாளங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடுக்கடல் பகுதியில் இலங்கை கப்பலுக்கு இந்த போதை பாக்கெட்டுகள் மாற்றப்பட இருந்த நேரத்தில் அவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் குமார் சிங் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களும், போதைப் பொருள் பாக்கெட்டுகளும் கொச்சி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பு.
அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தில் கிட்டதட்ட 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
டோகோக என்ற இடத்தில் நேற்று மாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகாலாந்தின் டியாம்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து சோப்புப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றோருவர் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் பகுதியைச் சோர்ந்த பெண் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பாகும் என போலீசார் தெரிவித்தனர்.