என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதிய கேஜெட்டுகள்
![உலக சந்தையில் அறிமுகமானது அசுஸ் சென்போன் 9 - விலை எவ்வளவு தெரியுமா? உலக சந்தையில் அறிமுகமானது அசுஸ் சென்போன் 9 - விலை எவ்வளவு தெரியுமா?](https://media.maalaimalar.com/h-upload/2022/07/29/1737761-newproject-2022-07-28t221913455.jpg)
உலக சந்தையில் அறிமுகமானது அசுஸ் சென்போன் 9 - விலை எவ்வளவு தெரியுமா?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது.
- பிளாக், ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய நான்கு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் SAMOLED ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சாரும் இடம்பெற்று உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு லென்ஸ் உடன் கூடிய செகண்டரி கேமராவும் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி 12 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமராவும் இதில் இடம்பெற்று உள்ளது. புராசஸரை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது.
அதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் பேஸ் மாடலின் விலை ரூ.64 ஆயிரத்து 700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளாக், ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய நான்கு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.