என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இது புதுசு
![இணையத்தில் லீக் ஆன ஹோண்டா அட்வென்ச்சர் பைக் விவரங்கள் இணையத்தில் லீக் ஆன ஹோண்டா அட்வென்ச்சர் பைக் விவரங்கள்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/08/1758521-honda-logo.jpg)
இணையத்தில் லீக் ஆன ஹோண்டா அட்வென்ச்சர் பைக் விவரங்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய அட்வென்ச்சர் பைக் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புது ஹோண்டா அட்வென்ச்சர் பைக் டிரான்சால்ப் 800 எனும் பிராண்டிங்கில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புது மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மாடல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டு இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.
அந்த வகையில் புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மாடல் இத்தாலியில் நடைபெற இருக்கும் EICMA 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் ரெட், வைட் மற்றும் புளூ போன்ற நிறங்களில் காட்சியளிக்கிறது. புகைப்படத்தில் இருப்பது டாப் எண்ட் மாடலாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ஆப்ரிக்கா ட்வின் மாடல்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய டிரான்சால்ப் மாடல் ரோட் சார்ந்த மாடலாகவே காட்சியளிக்கிறது. இந்த பைக்கில் 21 இன்ச் அளவில் ஸ்போக் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சை்க்கிள் ஆப் ரோடிங் திறன்களையும் பெற்று இருக்கும் என தெரிகிறது.
புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மாடலில் 800சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் ஹார்னெட் ரோட்ஸ்டர் மாடலிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் மூலம் ஹோண்டா நிறுவனம் யமஹா டெனெர் 700 மாடலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது புதிய ஹோண்டா டிரான்சால்ப் மாடல் விலை ரூ. 12 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டலாம். இதே மோட்டார்சைக்கிளின் டிசிடி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.