என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரூ.9 ஆயிரத்திற்குள் எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்டிவி அறிமுகம் - இன்பினிக்ஸ் நிறுவனம் அதிரடி
- பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த ஸ்மார்ட்டிவி ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது அதன் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவனத்தின் இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.
இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. 32 இன்ச் எல்.இ.டி டிஸ்ப்ளே, குவாட்கோர் புராசஸர், 512எம்.பி ரேம், 4 ஜிபி ஸ்டோரேஜ், லினக்ஸ் இயங்குதளம் என எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்டிவிக்கு ஒருவருட வாரண்டியும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி டிஸ்கவுண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.