என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

24 மணி நேரத்தில் ரூ. 1000 கோடிக்கும் அதிக விற்பனை - சாம்சங் அசத்தல்

- சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சிறப்பு விற்பனையை சமீபத்தில் நடத்தியது.
- பண்டிகை கால விற்பனையின் முதல் நாளிலேயே ரூ. 1000 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான கேலக்ஸி சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சாம்சங் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சிறப்பு விற்பனையை சமீபத்தில் துவங்கியது. இந்த சிறப்பு விற்பனையின் முதல் நாளில் 12 லட்சத்திற்கும் அதிகமான கேலக்ஸி சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்திய ஆன்லைன் விற்பனையில் இது புது மைல்கல் ஆகும்.
இந்த விற்பனையின் மூலம் 24 மணி நேரத்தில் சாம்சங் நிறுவனம் ரூ. 1000 கோடிக்கும் அதிக விலை கொண்ட சாதனங்களை விற்பனை செய்து இருக்கிறது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களிலும் சாம்சங் விற்பனை பல சாதனங்களை எட்டியுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் முதல் நாளில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒவ்வொரு மூன்றாவது மாடலும் சாம்சங் பிராண்டை சார்ந்தது ஆகும்.
கேலக்ஸி M13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறது. அமேசான் கிக்ஸ்டார்டல் டீல்ஸ் பிரிவில் நுகர்வோர் விருப்ப பட்டியலில் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் முன்னணியில் இருந்தது.
அமேசானில் அதிகம் விற்பனையான 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சாம்சங் கேலக்ஸி M33 பெற்று இருக்கிறது. அமேசான் தளத்தில் அதிக சலுகை கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி S22 இருக்கிறது. பிரீமியம் பிரிவில் அதிகம் விற்பனையான மாடல்கள் பட்டியலில் சாம்சஎங் கேலக்ஸி S20 FE முதலிடம் பிடித்துள்ளது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் முதல் நாளில் சாம்சங் நிறுவன சந்தை பங்குகள் இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 4ஜி பிரிவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி F13 பெற்று இருக்கிறது.
இதே போன்று 5ஜி பிரிவில் கேலக்ஸி F23 ஆதிக்கம் செலுத்தியது. பிரீமியம் பிரிவு விற்பனையில் கேலக்ஸி S21 FE மற்றும் கேலக்ஸி S22 பிளஸ் போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.