என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ஐபோன் - அமேசான் அதிரடி
- அமேசான் வலைதளத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது.
- இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 மாடல்களை அறிவித்ததை தொடர்ந்து பழைய ஐபோன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. அதன்படி ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஐபோன் 12 மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 57 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஐபோன் 12 மாடல் விலை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் சிறப்பு விற்பனையின் போது ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக மாறும் என அமேசான் அறிவித்து இருக்கிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் டீசர் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஐபோன் 12 மாடலின் விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ஐபோன் 12 (64ஜிபி) மாடலுக்கான விலையாக இருக்கும் என தெரிகிறது.
ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட், 4 ஜிபி ரேம், ஐஒஎஸ் 14, டூயல் 12MP பிரைமரி கேமராக்கள், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது ஐபோன் 12 மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.