என் மலர்tooltip icon
    • அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது குட் பேட் அக்லி திரைப்படம்
    • அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

    அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர். நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.

    ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன். நான் என்று மீண்டும் ரேசிங்கிற்கு செல்ல வேண்டும் என நினைத்தேனோ அன்று முடிவு செய்தேன் நாம் மீண்டும் ஃபிட்டாக வேண்டும் என. கடந்த 8 மாத காலத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். டயட், சைக்கிலிங், ஸ்விமிங் , வெஜிடேரியனாகவும் மாறியதால் இது சாத்தியமானது" என கூறியுள்ளார்.

    • அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராயப்பட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 29, 30ம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வரும் 29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டம் காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இரு நேரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது.

    ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் படையெடுத்தது. தொடக்கத்தில் இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது.

    இதனால் 3 வருடங்களை தாண்டி இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்த பல்வேறு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உக்ரைன், ரஷியா பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரமாக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

    அதன்படி உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா முன் வைத்துள்ளது.

    இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா அதிகாரிகள் இன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 வருடத்திற்குப் பிறகு இரு நாட்டு பிரதிநிதிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பேச்சுவார்தை முடிவில் போர் நிறுத்த ஏற்பட வாய்ப்புள்ளது. ரஷியா 30 நாள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து உக்ரைனில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்புவதுடன், போரின் போது பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தால் அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது என உக்ரைன் கருதுகிறது.

    அதேவேளையில் எல்லையில் படைகளை குவிக்கக் கூடாது, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிப்பதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரஷியா முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் புதின் இதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன, மேலும் அவர் அமைதியை விரும்புவதில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறுகின்றன.

    • என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்’’ என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையில் வழங்க பரிசு அறிவித்தது அதிமுக.

    கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கல்வி உரிமைச் சட்டத்தின்படி ((Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே செலுத்தும்.

    அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான, விளையாட்டு அமைச்சர் உதயநிதியும், அவரின் ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சுய புராணங்களைப் பாடுவதில் தீவிரமாக உள்ளனர்.

    இதில், ``என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்'' என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.

    24 மணி நேரமும் முழு கவனமும் ரீல்ஸ்க்கு போஸ் கொடுப்பது உள்ளிட்ட விளம்பர வேலைகளில் மட்டுமே இருக்கும் இவர்கள், செயலில் என்னவாக இருக்கின்றார்கள்?

    பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பத் தவறியதற்கு காரணமாக இருந்தவர்கள் தானே இவர்கள்? நல் அமைச்சர்கள்!

    இந்த லட்சணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது விளையாட்டுத் துறை அமைச்சரை மக்களுக்குத் தெரியாது என்கிறார்.

    SDAT உருவாக்கி, விளையாட்டுக்கான CM Trophy தொடங்கி, அதற்கான பயிற்சித் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கி, வெற்றிபெறும் ஒவ்வொரு வீரருக்கும் தலா

    1 லட்சம் ரூபாய் வழங்கி, Sports Hostel உருவாக்கி, அதற்கான ஊக்கப் படியை 75 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையிலும்;

    ஆசிய போட்டிகளில் வெல்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும்; தெற்காசிய மற்றும் தேசிய போட்டிகளில் வெல்வோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், பரிசு அறிவித்து வழங்கியது கழக அரசு.

    அனைத்திலும் முத்தாய்ப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான கழக ஆட்சியில்.

    அமைச்சர் பெயர் முக்கியமல்ல திரு. ஸ்டாலின் அவர்களே, செயல் தான் முக்கியம்! அந்த செயல்வீரர்கள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும்!

    தமழ் நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடு செல்ல வைத்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. பாஸ்போர்ட்டே இல்லாமல், "நாச்சியப்பன் பாத்திரக் கடை" கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட் எடுத்தவர்கள் தானே நீங்களும், உங்கள் விளையாட்டு அமைச்சரும்?

    மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கி, தெண்ட செலவு செய்து கார் ரேஸ் நடத்தியது தான் உங்கள் ஆட்சியின் சாதனை!

    முதலீடு வாங்க வருகிறேன் என்ற உல்லாச பயணத்தில், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்து "ஆகா! ஆகாயத்தில் அதிசயம்" என்று ட்வீட் போட்டதையெல்லாம் சாதனை லிஸ்டில் சேர்ப்பீர்கள் என்றால், மக்கள் சிரிப்பார்கள்!

    விளையாட்டுத் துறை, விளையாட்டு வீரர்களை Promote செய்ய வேண்டும். அமைச்சரை அல்ல.

    மாணவர்களின் கல்வித் தொகையை செலுத்த வக்கில்லாத இந்த தி.மு.க. அரசு இருந்து என்ன பயன்?

    மத்திய அரசின் "புதிய கல்விக் கொள்கை"யை ஏற்க மறுத்ததால், நிதி இல்லை என்று திமுக அரசு சால்ஜாப்பு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்?

    இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.

    "மாணவர்களை Apply பண்ண விட்டாதானே Fees கொடுக்கணும்?" என்று யாராச்சும் உங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்களா ஸ்டாலின் அவர்களே?

    உடனடியாக, கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது
    • நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதைக்களத்தை காமிக் வடிவத்தில் திரைப்படம் வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் காமிக் கதையின் 3 ஆம் அத்தியாயத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    • ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
    • தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    ஏ.ஆர். டெய்ரி நிறுவன உரிமத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

    உணவு பாதுகாப்புத்துறை உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.

    உரிமம் நிறுத்தி வைப்பு மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மதுரை அமர்வில் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஏர்.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மறு பரிசீலனை செய்யும்படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிமம் வழங்கும் அதிகாரிக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

    • சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
    • நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    சென்செக்ஸ் 200.15 புள்ளிகள், நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,530.74 புள்ளியாக இருந்தது. இன்று காலை 82,392.63 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 82,146.95 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,514.81 புள்ளிகளிலும வர்த்தகமானது. இறுதியாக 200.15 புள்ளிகள் சரிந்து 82,330.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,062.10 புள்ளியாக இருந்தது. இன்று காலை 25,064.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,953.05 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 25,070.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பாரதி ஏர்டெல் நிறுவன பங்கு இன்று 2.81 சதவீதம் சரிவை சந்தித்தது.

    ஹெச்.சி.எல். டெக், எஸ்பிஐ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைட்டன் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

    இந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டாட்டா மோட்டார்ஸ், என்.டி.பி.சி. நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    ஆசிய மார்க்கெட்டுகளில் ஜப்பானின் Nikkei 225 index, ஷாங்காயின் SSE Composite index, ஹாங் காங்கின் Hang Seng பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. தென்கொரியாவின் Kospi, ஐரேப்பிய பங்குசு் சந்தைகள், அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

    நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,200.18 புள்ளிகள் உயர்ந்து கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில் 82,530.74 புள்ளிகளை தொட்டது. அதேபோல் நிஃப்டி 395.20 புள்ளிகள் உயர்ந்து 25,062.10 புள்ளிகளை தொட்டது.

    • 2022 மெகா ஏலத்தில் எடுப்பதாக அணி நிர்வாகம் கூறியது.
    • ஆனால் ஏலத்தில் எடுக்காமல் காயத்திற்கான மாற்று வீரராக தேர்வு செய்தது.

    ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆர்சிபி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து விடும்.

    இந்த சீசனில் ரஜத் படிதார் 11 போட்டிகளில் 239 ரன்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணி 2022 ஏலத்தின்போது தன்னை ஏலம் எடுப்பதாக உறுதி அளித்தது. ஆனால் ஏலம் எடுக்கவில்லை. காயம் காரணமாக ஒருவர் விலகியதால் மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்தது. இதனால் வருத்தம் அடைந்தேன். கோபமும் அடைந்தேன் என ரஜத் படிதார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ரஜத் படிதார் கூறியதாவது:-

    ஐபிஎல் 2022 ஏலத்தின்போது, ஏலத்தில் உங்களை எடுக்க இருக்கிறோம். தயாராக இருக்கவும் என அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்தது. இதனால் ஆர்சிபி அணிக்காக விளையாடும் மற்றொரு வாய்ப்பை பெற இருக்கிறோம் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் மெகா ஏலத்தில் என்னை ஏலம் எடுக்கவில்லை. இதனால் சற்று வருத்தம் அடைந்தேன்.

    ஏலத்தில் எடுக்காததால், என்னுடைய உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பின்னர், காயம் காரணமாக லவ்னித் சிசோடியா அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரரான உங்களை தேர்வு செய்ய இருக்கிறோம் என என்கு அழைப்பு வந்தது. நான் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், மாற்று வீரராக செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும். மேலும் வெளியில் உட்கார விருப்பம் இல்லை.

    விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் அணியில் இருக்கும்போது ஆர்சிபி நிர்வாகம் கேப்டன் பதவியை தந்தபோது எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி எனக்கு நம்பிக்கை அளித்தார்.

    இவ்வாறு ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

    • பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
    • ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.

    பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர்.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சென்னை, சூளைமேடு, கல்யாண புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு புகாரில் விசாகனை அழைத்துச்சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

    காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர்.

    விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    ×