என் மலர்tooltip icon
    • "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.
    • குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

    கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான போய்வா நண்பா சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இப்பாடலை விவேக் வரிகளில் தனுஷ் பாடியுள்ளார். பாடலில் தனுஷின் ஆட்டம் அட்டகாசமாக அமைந்துள்ளது.

    இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தனுஷின் குபேரா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

    இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படம் இன்று வெளியாகியது.
    • ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் இப்படம் இது உள்ளது.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' படம் நாளை வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தை பார்த்த சிறுமி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த நடிகர் சூரியின் நண்பர் ஒருவர் சூரிக்கு வீடியோ கால் செய்து நடந்ததை கூறியுள்ளார். உடனே அந்த சிறுமிக்கு வீடியோ கால் மூலமாகவே சூரி ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த வீடியோவை எக்ஸ்தளத்தில் வெளியிட்ட சூரி, அந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும் என பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்,

    இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ

    "மாமன்" படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…

    இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.

    தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு,

    இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும் என சூரி கூறினார்.

    • துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.
    • டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?

    டாஸ்மாக் எம்டி வீட்டருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவன விவரங்கள் கிடந்த விவகாரத்தில் தொடர்புடைய ரத்தீஷ் யார்? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.

    டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?

    டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?

    உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?

    டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ?

    Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.

    இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?

    ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....

    So, Sketch உதயநிதிக்கா?

    #யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.

    கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • ஆங்கிலம் பாடத்தில் தலா 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனைகள் படைத்துள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்துள்ளளன.

    அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாயஸ்ரீ மற்றும் மகாஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றபோதிலும், இருவரும் ஒட்டுமொத்த மதிப்பெண்ணாக 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மாயஸ்ரீ தமிழ்- 96, ஆங்கிலம்- 96, கணக்கு- 95, அறிவியல்- 95, சமூக அறிவியல்-93

    மகாஸ்ரீ தமிழ்- 98, ஆங்கிலம்- 96, கணக்கு- 92, அறிவியல்- 94, சமூக அறிவியல்-95

    • நிர்வாகம் பற்றிய எந்த அரசியல் அடிப்படை தெளிவும் இல்லாத சிலர் ஆட்சி அமைப்போம் என்கின்றனர்.
    • திசை திருப்பி ஏமாற்றுவோர் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

    திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மறைமுகமாக சாடி பேசினார்.

    அப்போது, "நிர்வாகம் பற்றிய எந்த அரசியல் அடிப்படை தெளிவும் இல்லாத சிலர் ஆட்சி அமைப்போம் என்று பேசுகின்றனர்" என்று திமுக எம்.பி. கனிமொழி தமிழக வெற்றிக் கழகத்தை சாடி பேசியுள்ளார்.

    மேலும், "ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதைச் செய்வோம் என மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.

    திசை திருப்பி ஏமாற்றுவோர் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்" என்றும் தவெக தலைவர் விஜய் குறித்து மறைமுகமாக சவால் விடுத்துள்ளார்.

    • மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.

    மும்பை:

    இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்க தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. இவர்கள் 3 பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன.

    • அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது குட் பேட் அக்லி திரைப்படம்
    • அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

    அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர். நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.

    ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன். நான் என்று மீண்டும் ரேசிங்கிற்கு செல்ல வேண்டும் என நினைத்தேனோ அன்று முடிவு செய்தேன் நாம் மீண்டும் ஃபிட்டாக வேண்டும் என. கடந்த 8 மாத காலத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். டயட், சைக்கிலிங், ஸ்விமிங் , வெஜிடேரியனாகவும் மாறியதால் இது சாத்தியமானது" என கூறியுள்ளார்.

    • அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராயப்பட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 29, 30ம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வரும் 29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டம் காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இரு நேரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது.

    ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் படையெடுத்தது. தொடக்கத்தில் இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது.

    இதனால் 3 வருடங்களை தாண்டி இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்த பல்வேறு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உக்ரைன், ரஷியா பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரமாக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

    அதன்படி உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா முன் வைத்துள்ளது.

    இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா அதிகாரிகள் இன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 வருடத்திற்குப் பிறகு இரு நாட்டு பிரதிநிதிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பேச்சுவார்தை முடிவில் போர் நிறுத்த ஏற்பட வாய்ப்புள்ளது. ரஷியா 30 நாள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து உக்ரைனில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்புவதுடன், போரின் போது பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தால் அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது என உக்ரைன் கருதுகிறது.

    அதேவேளையில் எல்லையில் படைகளை குவிக்கக் கூடாது, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிப்பதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரஷியா முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் புதின் இதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன, மேலும் அவர் அமைதியை விரும்புவதில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறுகின்றன.

    • என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்’’ என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையில் வழங்க பரிசு அறிவித்தது அதிமுக.

    கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கல்வி உரிமைச் சட்டத்தின்படி ((Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே செலுத்தும்.

    அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான, விளையாட்டு அமைச்சர் உதயநிதியும், அவரின் ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சுய புராணங்களைப் பாடுவதில் தீவிரமாக உள்ளனர்.

    இதில், ``என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்'' என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.

    24 மணி நேரமும் முழு கவனமும் ரீல்ஸ்க்கு போஸ் கொடுப்பது உள்ளிட்ட விளம்பர வேலைகளில் மட்டுமே இருக்கும் இவர்கள், செயலில் என்னவாக இருக்கின்றார்கள்?

    பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பத் தவறியதற்கு காரணமாக இருந்தவர்கள் தானே இவர்கள்? நல் அமைச்சர்கள்!

    இந்த லட்சணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது விளையாட்டுத் துறை அமைச்சரை மக்களுக்குத் தெரியாது என்கிறார்.

    SDAT உருவாக்கி, விளையாட்டுக்கான CM Trophy தொடங்கி, அதற்கான பயிற்சித் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கி, வெற்றிபெறும் ஒவ்வொரு வீரருக்கும் தலா

    1 லட்சம் ரூபாய் வழங்கி, Sports Hostel உருவாக்கி, அதற்கான ஊக்கப் படியை 75 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையிலும்;

    ஆசிய போட்டிகளில் வெல்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும்; தெற்காசிய மற்றும் தேசிய போட்டிகளில் வெல்வோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், பரிசு அறிவித்து வழங்கியது கழக அரசு.

    அனைத்திலும் முத்தாய்ப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான கழக ஆட்சியில்.

    அமைச்சர் பெயர் முக்கியமல்ல திரு. ஸ்டாலின் அவர்களே, செயல் தான் முக்கியம்! அந்த செயல்வீரர்கள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும்!

    தமழ் நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடு செல்ல வைத்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. பாஸ்போர்ட்டே இல்லாமல், "நாச்சியப்பன் பாத்திரக் கடை" கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட் எடுத்தவர்கள் தானே நீங்களும், உங்கள் விளையாட்டு அமைச்சரும்?

    மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கி, தெண்ட செலவு செய்து கார் ரேஸ் நடத்தியது தான் உங்கள் ஆட்சியின் சாதனை!

    முதலீடு வாங்க வருகிறேன் என்ற உல்லாச பயணத்தில், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்து "ஆகா! ஆகாயத்தில் அதிசயம்" என்று ட்வீட் போட்டதையெல்லாம் சாதனை லிஸ்டில் சேர்ப்பீர்கள் என்றால், மக்கள் சிரிப்பார்கள்!

    விளையாட்டுத் துறை, விளையாட்டு வீரர்களை Promote செய்ய வேண்டும். அமைச்சரை அல்ல.

    மாணவர்களின் கல்வித் தொகையை செலுத்த வக்கில்லாத இந்த தி.மு.க. அரசு இருந்து என்ன பயன்?

    மத்திய அரசின் "புதிய கல்விக் கொள்கை"யை ஏற்க மறுத்ததால், நிதி இல்லை என்று திமுக அரசு சால்ஜாப்பு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்?

    இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.

    "மாணவர்களை Apply பண்ண விட்டாதானே Fees கொடுக்கணும்?" என்று யாராச்சும் உங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்களா ஸ்டாலின் அவர்களே?

    உடனடியாக, கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×