என் மலர்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-04-2025- ஒரு கிராம் ரூ.111
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
19-04-2025- ஒரு கிராம் ரூ.110
18-04-2025- ஒரு கிராம் ரூ.110
17-04-2025- ஒரு கிராம் ரூ.110
- சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.
- கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குப் புறப்படுகிறேன், அங்கு பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன. மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2-வது கூட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
- பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். படத்தின் கான்செப்ட் ஷூட் சமீபத்தில் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. அதில் நடிகர் அல்லு ஆர்ஜுன் பல வித்தியாசமான தோற்றத்தில் லுக் டெஸ்ட் எடுத்துள்ளனர்.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் வேற்று கிரகத்தில் இருந்து வரும் கதாப்பாத்திரத்தில்ந் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் 12 வயதுள்ள ஒரு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாகவும் அதற்கு ஆடிஷன் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் 200 கோடி சம்பளம் மற்றும் இயக்குநர் அட்லீ-க்கு சம்பளம் 125 கோடி ரூபாய் என தகவல்கள் பரவி வருகிறது.
- இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஃபார்ஸி வெப் தொடர்.
- இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.
விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஃபார்ஸி வெப் தொடர். இத்தொடரை ராஜ் & டிகே இருவரும் இணைந்து இயக்கினர். இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.
இத்தொடரில் விஜய் சேதுபதி காவல் அதிகாரியாகவும், ஷாஹித் கபூர் மற்றும் அவரது நண்பரும் கள்ள நோட்டு அடித்து அதனை வியாபாரம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர். முதல் சீசன் முடிவில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இடையே சண்டை வலுக்கும் மேலும் கதையின் முக்கிய வில்லனான மன்சூர் தலாலை வைத்து முடியும், அடுத்த சீசனுக்கான தொடக்கத்தையும் அங்கு கொடுத்திருப்பர்.
இந்நிலையில் ஃபார்சி பாகம் சீசன் 2 பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ஃபார்ஸி 2 தொடரின் வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நடுவில் ஃபார்ஸி சீசன் 2 வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராஜ் மற்றும் டிகே தற்போது ராக்த் ப்ரம்மாந்த் வெப்தொடரை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்த புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
- புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2025 கவாசகி நின்ஜா 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7 லட்சத்து 27 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், முந்தைய மாடலை விட இதன் விலை ரூ. 11,000 அதிகரித்துள்ளது.
2025 நிஞ்ஜா 650 பைக் பச்சை நிறத்தில் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு நிற கோடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
- ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு இரண்டு இடங்களை தேர்வு செய்து தரும்படி டிட்கோ கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என இரு இடங்களை தேர்வு செய்து டிட்கோவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது.
இந்த நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில் அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
- ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசு விதித்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், டிரம்ப் நிர்வாகம் உடனடியாகப் பதிலடி கொடுத்தது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தனது நிர்வாக முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால், வரி விலக்கு ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.
பல பல்கலைக்கழகங்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹார்வர்ட் குற்றம் சாட்டியது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசு விதித்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், டிரம்ப் நிர்வாகம் உடனடியாகப் பதிலடி கொடுத்தது.
சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது என்று தெரிவித்த டிரம்ப் நிர்வாகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
- தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது.
- விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.
தங்கம் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்தாலும் அதனை வாங்கும் ஆர்வம் மக்களிடையே நிலவுகிறது. ஏன் என்றால் அவசர தேவைக்கு தங்கத்தை வைத்தோ, விற்றோ பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது நடுத்தர மக்களின் எண்ணம். சரி, தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது. இதனால் சில நேரங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரும். இதனை சரி செய்யும் வகையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்.
ஆம், தங்க வர்த்தகத்தில் உயர் தொழில்நுட்ப திருப்பமாக, ஷாங்காயில் உள்ள ஒரு மால் பயனர்கள் தங்கள் தங்க நகைகளை விற்று 30 நிமிடங்களுக்குள் பணம் பெற அனுமதிக்கும் ஒரு ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.
சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம் தங்கப் பொருட்களை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடைபோட்டு, அவற்றின் தூய்மையை தீர்மானித்து, அதற்குச் சமமான தொகையை நேரடியாக விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூன்று கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கப் பொருட்களை குறைந்தபட்சம் 50 சதவீத தூய்மை நிலையுடன் ஏற்றுக்கொள்கிறது.
40 கிராம் தங்க நெக்லஸ் ஒரு கிராமுக்கு 785 யுவான் (தோராயமாக ரூ. 9,200) விலை போனது. இதனால் அரை மணி நேரத்தில் 36,000 யுவான்களுக்கு மேல் (சுமார் ரூ. 4.2 லட்சம்) பணம் ஒருவருக்கு கிடைத்தது.
- டெல்டா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த 300 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.